Tamil govt jobs   »   Study Materials   »   Tamil Nadu High Court
Top Performing

Tamil Nadu High Court | தமிழ்நாட்டின் உயர்நீதிமன்றம்

Tamil Nadu High Court : The Madras High Court (TamilNadu High Court)  is located in Chennai, Tamil Nadu. The Madras High Court is the third oldest High Court of India. The court is one of the three High Courts in India established in the three Presidency Towns of Madras, Bombay and Calcutta by letters patent granted by Queen Victoria, bearing date 26 June 1862. The Madras High Court exercises appellate jurisdiction over the entire state of Tamil Nadu and Union territory. Read full article for more details about Tamil Nadu High Court.

Fill the Form and Get All The Latest Job Alerts

Tamil Nadu High Court : இந்தியாவின் நீதியாண்மை அமைப்பு, அதன் உச்ச நீதிமன்றத்தால் வரையறுக்கப்பட்டதாகும். இதன் படி அமைக்கப்பட்ட 25 இந்திய உயர் நீதிமன்றங்கள், தமது வரம்பிற்குட்பட்ட மாநிலங்களில் நீதிமுறைப் பணிகளை செலுத்துகின்றன. இந்தியாவின் மாநிலங்கள் மற்றும் ஒன்றிய பகுதிகள், இவற்றின் நீதியாண்மையின் கீழ் வருகின்றன. உயர் நீதிமன்றங்களுக்கு கீழ், உரிமையியல் நீதிமன்றங்கள், குடும்ப நல நீதிமன்றங்கள், குற்றவியல் நீதிமன்றங்கள் (கிரிமினல்) மற்றும் இதர மாவட்ட நீதிமன்றங்கள் செயல்படுகின்றன. உயர் நீதிமன்றங்களின் மூல நீதிமுறைமையின் முதன்மையானது, மாநிலத்தின் உரிமையியல் (சமூக நலன்) நீதிமன்றங்களை உள்ளடக்கியது ஆகும், மற்றும் தண்டிக்கப்படக்கூடிய குற்றங்கள், மரண தண்டணை விதிக்கக்கூடிய குற்றங்களை விசாரிப்பதும் அகும். Tamil Nadu High Court தொடர்பான தகவல்களை, நாம் இந்த கட்டுரையில் விரிவாக பார்ப்போம்.

Indian High Courts

இந்தியாவின் நீதியாண்மை அமைப்பு, அதன் உச்ச நீதிமன்றத்தால் வரையறுக்கப்பட்டதாகும். இதன் படி அமைக்கப்பட்ட 25 இந்திய உயர் நீதிமன்றங்கள் தமது வரம்பிற்குட்பட்ட மாநிலங்களில், நீதிமுறைப் பணிகளை செலுத்துகின்றன. இந்தியாவின் மாநிலங்கள் மற்றும் ஒன்றிய பகுதிகள் இவற்றின் நீதியாண்மையின் கீழ் வருகின்றன.

வரையரை

உயர் நீதிமன்றங்களுக்கு கீழ், உரிமையியல் நீதிமன்றங்கள், குடும்ப நல நீதிமன்றங்கள், குற்றவியல் நீதிமன்றங்கள் மற்றும் இதர மாவட்ட நீதிமன்றங்கள் செயல்படுகின்றன.

தண்டணை அதிகாரம்

உயர் நீதிமன்றங்களின் மூல நீதிமுறைமையின் முதன்மையானது, மாநிலத்தின் உரிமையியல் நீதிமன்றங்களை உள்ளடக்கியது ஆகும் மற்றும் தண்டிக்கப்படக்கூடிய குற்றங்கள், மரண தண்டணை விதிக்கக்கூடிய குற்றங்களை விசாரிப்பதும் அகும்.

விசாரணை அதிகாரம்

கீழ் நீதிமன்றங்களால் வழங்கப்படும் மேல்முறையீட்டு மனுக்கள் மற்றும் அரசாணை(Writ) மனுக்கள் போன்ற வழக்குகளை இந்திய அரசியலமைப்பின் சரத்து 224 இன் படி விசாரணை செய்யும்.

இந்திய அரசியலமைப்புச் சட்டம்

உயர்நீதிமன்றங்கள் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பகுதி 4, அத்தியாயம் 5, சரத்து 214 இன் படி நிறுவப்பட்டுள்ளன.

அமர்வு மற்றும் மாவட்ட நீதிமன்றங்கள்

ஒவ்வொரு மாநிலங்களும், அதன் மாவட்டங்களை நீதிபரிபாலணைக்கு ஏற்ப பிரிக்கின்றன. இந்த நீதிமன்றங்களில், மாவட்ட அமர்வு நீதிபதியால் (தொடர் விசாரணை நீதிபதி-அமர்வு நீதிபதி) அல்லது மாவட்ட நீதிபதியால், விசாரணை மேற்கொள்ளப்படும்.

Also Read: Temples in Tamil Nadu | தமிழ்நாட்டில் உள்ள கோவில்கள்

Madras High Court

Madras High Court
Madras High Court

மதராசு உயர் நீதிமன்றம், இந்தியாவின் மாநிலமான தமிழகத்தின் தலைநகரான சென்னையில் அதன் சிறப்பை உயர்த்துவதில் முக்கிய இடமாக விளங்குகின்றது. இந்த உயர்நீதிமன்றம் உலகின் இரண்டாவது மிகப்பெரிய நீதிமன்ற வளாகமென்று நம்பப்படுகிறது.

இந்தியா சுதந்திரம் அடைவதற்கு நூறாண்டுகளுக்கு முன்பாகவே, நீதிமன்றங்களை பிரித்தானிய அரசு இந்தியாவில் நிறுவியது. அப்படி நிறுவப்பட்ட மூன்று நீதிமன்றங்களில் ஒன்றுதான், சென்னை உயர்நீதி மன்றம். மற்ற இரண்டு நீதிமன்றங்களில், ஒன்று மும்பையிலும் மற்றொன்று கொல்கத்தாவிலும் நிறுவப்பட்டது. சென்னை உயர்நீதிமன்றம் ஜூன் 26, 1862, ஆம் ஆண்டு இந்தியாவின் மூன்று உயர்நீதிமன்றங்களில் ஒன்றாக, சென்னை இராஜதானி நகரத்திற்கு விக்டோரியா பேரரசியின் அரசாட்சியில் வழங்கப்பட்ட காப்புரிமையின்படி நிறுவப்பட்டது. இதன் நீதிபரிபாலனை தமிழ்நாடு மற்றும் புதுவையை உள்ளடக்கியது.

தொடக்கத்தில், ‘சுப்ரீம் கோர்ட் ஆஃப் மெட்ராஸ்’ என்றுதான் அழைக்கப்பட்டது. அதன் பிறகு உயர் நீதிமன்ற சட்ட வரைவுகள் ஏற்படுத்தப்பட்டு, 1862 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் நாள் முதல் ‘மெட்ராஸ் ஹை கோர்ட்’ என்ற பெயர் மாற்றம் பெற்றது.

1996 ஆம் ஆண்டு மதராசு என்பது சென்னை என்று சட்டப்பூர்வமாக பெயர் மாற்றம் கண்டபொழுது, உயர்நீதிமன்றம் அதிலிருந்து விலக்கு பெற்று அதன் பாரம்பரியப் பெருமைக்காக மதராசு உயர்நீதிமன்றம் என்றே அழைக்கப்பட்டு வந்தது. 2016 ஆம் ஆண்டு ஜூலை மாதம், மதராசு உயர்நீதிமன்றம் என்ற பெயரை சென்னை உயர்நீதிமன்றம் என்று மாற்ற மத்திய அரசு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.

இந்த நீதிமன்றத்தோடு சேர்ந்து அமைக்கப்பட்ட மூன்று உயர்நீதி மன்றங்களில் மற்ற இரண்டான மும்பை, கொல்கத்தா நீதிமன்றங்கள் உச்சநீதிமன்றங்களாக, 1861 உயர்நீதிமன்ற சட்ட வரைவிற்கு முன்பு வரை செயல்பட்டுக் கொண்டிருந்தன.

Also Read:  What is the Language of Tamil Nadu?

Madras High Court Building

இதன் கட்டுமானம் இந்தோ-சார்சியனிக் முறையில், 1888 ஆம் ஆண்டு ஜே.டபிள்யூ.பிராஸிங்டன் என்பவரால் வடிவமைக்கப்பட்டு, 1892 இல் ஹென்றி இர்வின் வழிகாட்டுதலின்படி கட்டப்பட்டு முடிக்கப்பட்டது. இதன் கட்டுமானம் செப்டம்பர் 22, 1914 இல் முதல் உலகப்போரின் துவக்கத்தின் போது செர்மனின் போர்க்கப்பலின் தாக்குதலினால் சேதமடைந்தது. உயர் நீதிமன்றக் கட்டிடத்தை அமைப்பதற்கு, அப்போது ஆன செலவு 13 லட்ச ரூபாய் ஆகும். உலகின் இரண்டாவது பெரிய நீதிமன்றமாகவும் (உலகின் முதலாவது பெரிய நீதிமன்றமாக இருப்பது லண்டன், பெய்லி நீதிமன்றம்), இந்தியாவில் முதல் பெரிய உயர் நீதிமன்றமாகவும் சென்னை உயர் நீதிமன்றம் திகழ்கிறது.

தற்போதைய சென்னை உயர் நீதிமன்றக் கட்டிடத்திற்கு முன், கொய்யா தோப்பு (ஜார்ஜ் டவுன்) என்ற இடத்தில் சென்னை உயர் நீதிமன்றம் இயங்கிவந்தது. பிரிட்டிஷ் நீதிபதி ஹாலி ஹார்மன், உயர் நீதிமன்றத்துக்கு தனிக் கட்டிடம் வேண்டும் என்று எழுப்பிய கோரிக்கையை ஏற்று, விக்டோரியா மகாராணி ஒப்புதல் அளித்த பின்பே, தற்போதைய உயர் நீதிமன்றக் கட்டிடம் கட்டப்பட்டது.

Renowned lawyers of the Tamil Nadu High Court

1870 க்கு முன், மதராசு உயர் நீதிமன்றத்தின் நீதிபரிபாலனையில், பிரித்தானியர் மட்டுமே வழக்கறிஞராக பங்குபெற முடியும் என்றிருந்த நிலை, பிரித்தானிய முடியாட்சியினரிடமிருந்து வழங்கப்பட்ட ஆணையினால், இந்திய வழக்குரைஞர்களும் பங்கு பெற முடியும் என்ற நிலையை அடைந்தது. சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றிப் பின் நீதிபதியாக உயர்ந்த முத்துச்சாமி ஐயர் வழங்கிய நுட்பமான தீர்ப்புகள், நாடு கடந்தும் புகழ் பெற்றவை. அவருடைய தீர்ப்புகளை லண்டன் பிரிவியூ கவுன்சில் தொடர்ந்து கவனித்துப் பாராட்டி உள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புகள்தான் மற்ற மாநில உயர் நீதிமன்றங்களுக்கு முன் உதாரணமாக உள்ளன. முன்னாள் குடியரசுத் தலைவர் ஆர். வெங்கட்ராமன், மெட்ராஸ் மாகாணத்தின் முதலமைச்சராக இருந்த டி. பிரகாசம், தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த பக்தவத்சலம், சுதந்திர இந்தியாவில் செயல்பட்ட உயர்நீதிமன்றத்தின் இரண்டாவது தலைமை நீதிபதி பதஞ்சலி சாஸ்திரி போன்றவர்கள் வழக்கறிஞர்களாக சென்னை உயர் நீதிமன்றத்தில் பயிற்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Also Read:  What is the Famous Food of Tamil Nadu?

Notable Cases of the Tamil Nadu High Court

தந்தை பெரியார் மீது இந்தியாவின் பிரதமராக இருந்த ஜவஹர்லால் நேரு தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, தடுப்புக் காவல் சட்டத்தை எதிர்த்து பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நடத்திய வழக்கு, நேருவுக்குக் கறுப்புக் கொடி காட்டியதற்காக, அண்ணாதுரை மீது தொடரப்பட்ட வழக்கு, தமிழ்த் திரை உலகில் புகழ்பெற்ற தியாகராஜ பாகவதர் மற்றும் என். எஸ். கிருஷ்ணன் மீதான லட்சுமிகாந்தன் கொலைவழக்கு ஆகியவை இந்த உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற சில முக்கிய வழக்குகளாகும்.

Chief Justice of the Tamil Nadu High Court

சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி, இந்திய உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியால் நியமிக்கப்படுபவர் ஆவார். இவரே தமிழக அரசின் தலைமை நீதிபதி ஆவார். இவரின் நீதி முறைமை எல்லைகள், தமிழ்நாடு மாநிலம் முழுவதையும், புதுவைப் பிரதேசப் பகுதிகளையும் உள்ளடக்கியது. இவருடன் துணை சேர்ந்து 40 உயர் நீதிமன்ற நீதிபதிகள் நீதிமுறைமை புரிவர். தலைமை நீதிபதியின் வழிகாட்டுதலின் படி, இதன் நீதி நிர்வாகங்களைச் செயல்படுத்தும் மன்றங்களாக உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றங்கள் செயல்படுகின்றன.

இந்தியாவின் மாநிலமானத் தமிழத்தின் உயர் நீதிமன்றமான சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதிகளாக பதவி வகித்தவர்கள் மற்றும் தற்பொழுதயத் தலைமை நீதிபதிகளின் பட்டியல்.

Sl. No. Chief Justice Start Date End Date
1 பி. வி. ராஜமன்னார் 1948 10 மே 1961
2 சுப்பிரமணிய இராமச்சந்திர ஐயர் 10 மே 1961 23 நவம்பர் 1964
3 பி. சந்திர ரெட்டி 23 நவம்பர் 1964 1 ஜூலை 1966
4 எம். அனந்தநாராயணன் 1 ஜூலை1966 1 மே 1969
5 குப்புசாமி நாயுடு வீராசுவாமி 2 மே 1969 7 ஏப்ரல் 1976
6 பள்ளப்பட்டி சடையக் கவுண்டர் கைலாசம் 8 ஏப்ரல் 1976 3 சனவரி 1977
7 பத்மநாப்பிள்ளை கோவிந்தன் நாயர் 4 சனவரி 1977 28 மே 1978
8 தயி ராம்பிராசாத ராவ் 29 மே 1978 6 நவம்பர் 1979
9 மு. மு. இஸ்மாயில் 6 நவம்பர் 1979 12 மார்ச் 1982
10 கிருஷ்ண பல்லப் நாரயண் சிங் 12 மார்ச் 1982 2 ஏப்ரல் 1984
11 மதுகர் நர்கர் சந்துர்கர் 2 ஏப்ரல் 1984 19 அக்டோபர் 1989
12 ஆதர்ஷ் செயின் ஆனந்த் நவம்பர் 1989 16 ஜூன் 1992
13 காந்தா குமாரி பட்நகர் 15 ஜூன் 1992 1 ஜூலை 1993
14 குதாரிகோட்டி ஆன்னதனய சாமி 1 ஜூலை 1993 7 ஜூலை 1997
15 மன்மோகன் சிங் லிபரான் 7 ஜூலை 1997 24 மே 1999
16 அசோக் சோட்டலால் அகர்வால் 24 மே 1999 9 செப்டம்பர் 1999
17 கொ. கோ. பாலகிருஷ்ணன் 9 செப்டம்பர் 1999 15 ஜூன் 2000
18 நாகேந்திர குமார் ஜெயின் 13 செப்டம்பர் 2000 30 ஆகத்து 2001
19 போ. சுபாசன் ரெட்டி 12 செப்டம்பர் 2001 20 நவம்பர் 2004
20 மார்க்கண்டேய கட்சு 28 நவம்பர் 2004 10 அக்டோபர் 2005
21 அஜித் பிராக்காஷ் ஷா 12 நவம்பர் 2005 9 மே 2008
22 ஏ.கே.கங்குலி 21 மே 2008 9 மார்ச் 2009[2]
23 எச். எல். கோகிலே 9 மார்ச் 2009 10 ஜூன் 2010
24 எம். ஒய். இக்பால் 11 ஜூன் 2010 6 பிப்ரவரி 2013
பொறுப்பு ஆர். கே. அகர்வால் 7 பிப்ரவரி 2013 23 அக்டோபர் 2013
25 ஆர். கே. அகர்வால் 24 அக்டோபர் 2013 12 பிப்ரவரி 2014
பொறுப்பு சதீஷ் கே அக்னிஹோத்ரி 13 பிப்ரவரி 2014 25 ஜூலை 2014[3]
26 சஞ்சய் கிஷன் கவுல் 26 ஜூலை 2014 15 பிப்ரவரி 2017 [4]
பொறுப்பு ஹுலுவடி ஜி.ரமேஷ் 16 பிப்ரவரி 2017 4 ஏப்ரல் 2017
27 இந்திரா பானர்ஜி 5 ஏப்ரல் 2017 6 ஆகஸ்ட் 2018
பொறுப்பு ஹுலுவடி ஜி.ரமேஷ் 7 ஆகஸ்ட் 2018 11 ஆகஸ்ட் 2018
28 விஜய தஹில் ரமணி 12 ஆகஸ்ட் 2018 6 செப்டம்பர் 2019
பொறுப்பு வினீத் கோத்தாரி 21 செப்டம்பர் 2019 10 நவம்பர் 2019
29 அம்ரேஷ்வர் பிரதாப் சாஹி 11 நவம்பர் 2019 31 டிசம்பர் 2020
பொறுப்பு வினீத் கோத்தாரி 1 ஜனவரி 2021 3 ஜனவரி 2021
30 சஞ்சிப் பானர்ஜி 4 ஜனவரி 2021 17 நவம்பர் 2021
பொறுப்பு எம். துரைசாமி 18 நவம்பர் 2021 21 நவம்பர் 2021
பொறுப்பு முனீசுவர் நாத் பண்டாரி 22 நவம்பர் 2021 பதவியில்

Read More – Where is Tamil Nadu? – Location, Geography, Climate and Tourism of Tamilnadu

Advocate General of the State

அரசுத் தலைமை வழக்குரைஞர் (அட்வகேட் ஜென்ரல் அல்லது சென்னை உயர் நீதிமன்றத் தலைமை வழக்குரைஞர்) மாநில ஆளுநரால் நியமிக்கப் பெற்றவராவார். இவர் தமிழக அரசு சார்பில் வாதாடுபவர் மற்றும் அரசுக்கு ஆலோசனைகள் வழங்குபவர். இவர் உயர் நீதிமன்ற நீதிபதி நியமனத்துக்குரியத் தகுதிகளை உடையவர். தமிழகத்தின் தற்பொழுதய தலைமை வழக்குரைஞர் திரு R. சுண்முகசுந்தரம் ஆவார். இவருக்கு துணை புரிகின்ற வகையில், இரு கூடுதல் தலைமை வழக்குரைஞர்கள் செயல்படுகின்றனர்.

join-us-our-telegram-channel-hd-png-download-removebg-preview
join-us-our-telegram

Madurai Bench of Madras High Court

 

Tamil Nadu High Court | தமிழ்நாட்டின் உயர்நீதிமன்றம்_5.1
Madurai Bench of Madras High Court

சென்னை உயர் நீதிமன்றத்தின், மதுரை அமர்வு இந்தியாவின் தமிழக மாநிலத்தின் மதுரை மாவட்டத்தில் இயங்கும் மாநில உயர்நீதிமன்றக் கிளையாகும்.

துவக்கம்
இந்த கிளை உயர்நீதிமன்றம் ஜூலை 24, 2004 முதல் அப்பொழுதய இந்திய உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி திரு ஆர். சி. லகோத்தியால், சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி திரு பி. சுபாஷன் ரெட்டியின் தலைமையில் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளான நீதியரசர்கள் திரு சிவராஜ் வி. பாட்டீல், திரு. கே.ஜி. பாலகிருஷ்ணன், நீதியரசர் முனைவர் திரு ஏ.ஆர். லட்சுமணன், மாண்புமிகு மத்திய சட்டத்துறை அமைச்சர் எச். ஆர். பரத்வாஜ் மற்றும் மாநில சட்டத்துறை அமைச்சர் மாண்புமிகு திரு. டி. ஜெயக்குமார் முன்னிலையில் துவக்கி வைக்கப் பெற்று இயங்கி வருகின்றது.

Also Read: Tamil Nadu Council of Ministers | தமிழக அமைச்சரவை

Subordinate Courts

இந்தியாவின் மாநிலமான தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்களின் நீதிமன்றங்கள், சென்னை உயர் நீதிமன்றத்தின் மேற்பார்வையில் இயங்கும் நீதிமன்றங்காளாகும். இவை இரண்டு அமர்வுகளாகப் பிரிந்து செயல்படுகின்றன. ஒன்று, முதன்மை அமர்வின் கீழ், மற்றொன்று மதுரைக் கிளை அமர்வின் கீழ் செயல்படுகின்றன. இவை மாவட்ட நீதிமன்றங்கள் அல்லது சார்பு நிலை நீதிமன்றங்கள் என்று அழைக்கப்படுகின்றன.

***************************************************************************

To Attempt the Quiz on APP with Timings & All India Rank,

Download the app now, Click here

Adda247 பயன்பாட்டில் இந்த வினாடி வினாவை முயற்சிக்க இங்கே கிளிக் செய்து அகில இந்திய தரவரிசையைப் பெறுங்கள்

Adda247 TamilNadu Home page Click here
Official Website=Adda247 Click here

Use Code: JOB25 (25% off on all Test series)

Tamil Nadu High Court | தமிழ்நாட்டின் உயர்நீதிமன்றம்_6.1
IBPS RRB Clerk Prelims 2022 | Tamil & English | Online Test Series by Adda247

***************************************************************************

*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*

Check Live Classes in Tamil

*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*

Practice Now

Adda247App |  Adda247 Tamil Youtube

Tamil Engineering Classes by Adda247Youtube link

Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group

Instagram = Adda247 Tamil

Tamil Nadu High Court | தமிழ்நாட்டின் உயர்நீதிமன்றம்_7.1