Table of Contents
தமிழகத்தின் 69% இட ஒதுக்கீடு, 1990 ஆம் ஆண்டிலிருந்து, அதாவது 30 ஆண்டுகளாகத் தங்கு தடையின்றி, வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தின் 69% இட ஒதுக்கீட்டுக் கொள்கையைச் செயல்படுத்துவதில், தமிழகம் பிற மாநிலங்களுக்கு எல்லாம் எடுத்துக்காட்டாக, முன்னோடியாக விளங்குகிறது. நீதிமன்றங்களில் தொடர்ந்து உயர்சாதி வகுப்பினர் வழக்குத் தொடுத்து வருகிறபொழுதும், Tamil Nadu’s 69% Reservation தனக்கான இடத்தை தக்கவைத்து கொண்டுதான் வருகிறது.
Tamil Nadu’s 69% Reservation : History (வரலாறு)
- தமிழ்நாட்டின் இட ஒதுக்கீட்டுக் கொள்கை நீதிக்கட்சியின் ஆட்சிக் காலத்திலிருந்து தொடங்குகிறது. கம்யூனல் ஜி.ஓ மூலம் சாதி அடிப்படையில், கல்வியிலும் வேலை வாய்ப்பிலும், இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டு – அந்த இட ஒதுக்கீட்டுக் கொள்கைக்கு செம்பகம் துரைராஜன் வழக்கு மூலம் ஆபத்து வந்த போது தமிழகமே கொந்தளித்தது.
- 1951-ல் வந்த அந்த ஆபத்தை எதிர்த்து, பெரியார், அண்ணா ஆகியோர் தமிழகத்தில் பெரும் போராட்டத்தினை நடத்தினர். காமராஜர் அன்று பிரதமராக இருந்த நேருவுக்கு அரசியல் அழுத்தத்தைக் கொடுத்தார்.
- அதன் காரணமாக, நேரு முன்வந்து இந்திய அரசியல் சட்டத்தில் 1951-ம் ஆண்டு, முதலாவது திருத்தத்தைக் கொண்டு வந்தார். இந்திய அரசியல், சட்டம் இட ஒதுக்கீட்டுக் கொள்கையில் பொதிந்திருக்கும் சமூக நீதியை நிலைநாட்ட, முதன்முதலில் திருத்தப்பட்டது என்பதும் – அது தமிழகத்தின் போர்க் குரலால் நிகழ்ந்தது என்பதும் வரலாறு.
Social Welfare Schemes of Government of Tamil Nadu PART 1
Tamil Nadu’s 69% Reservation : Background (பின்னணி)
- 1971 வரை, தமிழ்நாட்டின் மொத்த இட ஒதுக்கீடு 41%ஆக இருந்தது. 1969 இல் அண்ணாதுரையின் மறைவைத் தொடர்ந்து, திமுகவின் கருணாநிதி முதலமைச்சராகப் பொறுப்பேற்றபோது, அவர் பிற்படுத்தப்பட்டோர் நலனை மேம்படுத்துவதற்கான பரிந்துரைகளை ஆராய சட்டநாதன் ஆணையத்தை அமைத்தார். ஆணையத்தின் பரிந்துரைகளின் அடிப்படையில், கருணாநிதி பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டை 25% இலிருந்து 31% ஆகவும், பட்டியல் சாதி (SC) மற்றும் பட்டியல் பழங்குடியினருக்கான (ST) இடஒதுக்கீட்டை 16% லிருந்து 18% ஆகவும் உயர்த்தினார். இது மாநிலத்தின் மொத்த இடஒதுக்கீட்டை 49% ஆக உயர்த்தியது.
- அதன்பிறகு, 1980 இல் அதிமுகவின் MG ராமச்சந்திரன் BC க்களுக்கான இடஒதுக்கீட்டை 50%ஆக உயர்த்தி, தமிழகத்தின் மொத்த இடஒதுக்கீட்டை 68%ஆக உயர்த்தினார். MGR அதன் ‘கிரீமி லேயரை’ (பிற்படுத்தப்பட்டவர்களில் மேல்நிலையினர்) நீக்கி, பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டை உயர்த்த முடிவெடுத்தார்.
- 1989 ல், தி.மு.க ஆட்சிக்கு வந்தபோது, முதல்வர் கருணாநிதி இந்த ஒதுக்கீட்டில், வன்னியர்கள் போன்ற சாதிகள் உட்பட, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவை (MBC) உருவாக்கினார். 50% இட ஒதுக்கீட்டு கொண்ட BC யின் கீழ் வரும் MBC க்கான ஒதுக்கீடு, 20% ஆக நிர்ணயிக்கப்பட்டது.
- பின்னர் 1990 ல், சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், கருணாநிதி பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினருக்கான இட ஒதுக்கீட்டை பிரித்தார். ST க்களுக்கு வழங்கப்பட்ட 1% இட ஒதுக்கீடு, தமிழகத்தின் ஒட்டுமொத்த இடஒதுக்கீட்டை 69% ஆக உயர்த்தியது.
Tamil Nadu’s 69% Reservation : TN’s Legal Battle (சட்டரீதியான போராட்டம்)
Indira Sawhney case
1992 ஆம் ஆண்டில், உச்ச நீதிமன்றம் இந்திரா சாஹ்னி மற்றும் பிறர் மற்றும் யூனியன் ஆஃப் இந்தியா மற்றும் பிறர் வழக்குக்கான தீர்ப்பை வழங்கியது. பிரிவு 16 (4) இன் கீழ் உள்ள மொத்த இட ஒதுக்கீடு, 50 சதவீதத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியது.
ஆனால், தமிழக அரசு 69 சதவீத இடஒதுக்கீட்டை கொண்டிருந்தது – பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 26.5 சதவீதம், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்/அறிவிக்கப்படாத சமூகங்கள் 20 சதவீதம், BC இஸ்லாமியர்கள் 3.5 சதவீதம், பட்டியல் சாதியினர் 18 சதவீதம் மற்றும் பட்டியல் பழங்குடியினர் (1 சதவீதம்).
A Move to the Madras High Court
1993-94 கல்வியாண்டில், மாநிலத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மற்றும் பிற கல்வி நிறுவனங்களில் சேர்க்கையை முன்வைத்து, ஜெயலலிதாவின் கீழ் இருந்த தமிழக அரசு, சென்னை உயர் நீதிமன்றத்தை நாடியது. சென்னை உயர்நீதிமன்றம் அந்த கல்வியாண்டில், தமிழக அரசு இதுவரை பின்பற்றிய இடஒதுக்கீடு கொள்கையை தொடரலாம், ஆனால் அடுத்த கல்வியாண்டில், அதாவது 1994-95 இல், இட ஒதுக்கீடு 50 சதவீதமாக குறைக்கப்பட வேண்டும் என்று தீர்ப்பளித்தது.
Filing of Special Leave Petition(SLP)
பிற்படுத்தப்பட்டோர் நலனுக்காக, மாநில அரசின் தற்போதய இடஒதுக்கீடு கொள்கையை தொடர அனுமதிக்க வேண்டும் என்று கேட்டு, சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு, சிறப்பு விடுப்பு மனு (SLP) ஒன்றை தாக்கல் செய்தது. இருப்பினும், கல்வி நிறுவனங்களில் சேர்க்கை விஷயத்தில் இடஒதுக்கீடு 50 சதவீதத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும் என்று, உச்சநீதிமன்றம் ஒரு இடைக்கால உத்தரவை மீண்டும் பிறப்பித்தது.
Tamil Nadu’s 69% Reservation : Tamil Nadu Backward Classes, Scheduled Castes and Scheduled Tribes Bill
- நீதிமன்றத்திலிருந்து, அரசுக்கு எந்த இடைத்தளர்வும் கிடைக்காததால், பின்தங்கிய வகுப்பினரின் நலன் மற்றும் முன்னேற்றத்திற்காக அதன் இட ஒதுக்கீட்டு கொள்கை 69 சதவிகிதமாகவே தொடர, நரசிம்மராவ் தலைமையிலான மத்திய அரசிடம், அரசியலமைப்பில் திருத்தம் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கேட்க, நவம்பர் 1993 இல், ஒரு சிறப்பு சட்டமன்ற அமர்வில், ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
- தமிழ்நாடு அரசு, பின்னாளில் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் (கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு மற்றும் மாநிலத்தின் கீழ் உள்ள சேவைகளில் நியமனம் அல்லது பதவிகள்) மசோதா, 1993 ஐ அறிமுகப்படுத்தியது. மசோதா குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. அப்போதைய முதல்வர் J.ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசியல்வாதிகளின் குழு மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த டெல்லிக்கு சென்றது. தமிழக அரசின் சட்டம், எந்த நீதிமன்றத்திலும் அதற்கு எதிராக வழக்குத் தொடுக்க முடியாத படி, அரசியலமைப்பின் ஒன்பதாவது அட்டவணையின் கீழ் கொண்டு வரப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
- ஜனாதிபதியின் ஒப்புதல் கிடைத்தது, இது தமிழகத்திற்கான 69% இட ஒதுக்கீட்டை உறுதிப்படுத்தியது. இந்த சட்டம் அரசியலமைப்பின் ஒன்பதாவது அட்டவணையின் கீழும் கொண்டு வரப்பட்டது.
Tamil Nadu’s 69% Reservation : Conclusion (முடிவுரை)
இந்த சட்டம் ஒன்பதாவது அட்டவணையின் கீழ் சேர்க்கப்பட்டது, அரசியலமைப்புக்கு முரணானது மற்றும் அரசியலமைப்பின் பிரிவு 14 க்கு எதிரானது என்று, இதற்கு எதிராக பல ஆண்டுகளாக, பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இக்கட்டுரை TNPSC GROUP 2 & 2A, GROUP 4 க்கு தயாராகும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் கொடுக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து 3 அல்லது 4 வினாக்கள் கேட்கப்படும். போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் இக்கட்டுரை உருவாக்கப்பட்டுள்ளது.
ADDA247 தமிழின் இந்த பகுதியில் நாம் TNPSC குரூப் 1, 2/2A தேர்வுகளுக்கு தேவைப்படும் முதன்மை தேர்விற்கான கட்டுரைகளும் பிற RRB,SSC தேர்வுகளுக்கான கொள்குறி வினாக்களுக்கு தேவையான விஷயங்களும் பார்ப்போம்.
வெற்றி பெற வாழ்த்துக்கள் !!!
இது போன்ற தேர்விற்கு பயன்படும் கட்டுரைகளை பெற ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்க
Download the app now, Click here
*****************************************************
Use Coupon code: ME75(75%OFFER)+ DOUBLE VALIDITY ON ALL PRODUCTS
*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*
*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*
Adda247App | Adda247 Tamil Youtube
Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group