Tamil govt jobs   »   Latest Post   »   Tamilnadu Budget 2023
Top Performing

Tamilnadu Budget 2023, Highlights and Key Features | தமிழ்நாடு பட்ஜெட் 2023, சிறப்பம்சங்கள்

The budget for the financial year 2023-24 was presented by Finance Minister Palanivel Thiaga Rajan in the assembly today, 20 March at 10 AM.  Finance Minister said the state’s revenue deficit decreased from Rs 62,000 crore to Rs 30,000 crore in FY 2023-24. The finance minister said that the revenue deficit will gradually decrease in the coming years. In this article you can get all the information about the Tamilnadu Budget 2023, and its highlights.

Tamilnadu Budget 2023

Tamilnadu Budget- தமிழ்நாடு பட்ஜெட் ஐ நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 2023 ஆம் ஆண்டிற்கான மூன்றாவது காகிதமற்ற பட்ஜெட்டை (Paperless Budget) PTR தாக்கல் செய்கிறார். மார்ச் மாதம் 20 ஆம் தேதி காலை 10 மணிக்கு நிதி அறிக்கை தாக்கல்செய்யப்பட்டது. தமிழ்நாடு நிதி அறிக்கையின் முக்கிய அம்சங்கள் மற்றும் துறைவாரியாக நிதி ஒதுக்கீடு ஆகிய அணைத்து தகவல்களையும் இந்த கட்டுரையில் விவாதித்துள்ளோம்.

Tamilnadu Budget 2023 – Highlights

Tamil Development and Culture – தமிழ் வளர்ச்சி, பண்பாடு

  • மொழிப்போர் தியாகிகளான திருவாளர்கள் தாளமுத்து நடராசன் ஆகியோரின் பங்களிப்பை போற்றும் வகையில் சென்னையில் நினைவிடம் ஒன்று அமைக்கப்படும் நடராசன் ஆகியோரின் பங்களிப்பை போற்றும் வகையில் ஒன்று அமைக்கப்படும்.
  • பி.ஆர்.அம்பேத்கரின் படைப்புகளை தமிழில் மொழி பெயர்க்க ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
  • கணினியில் தமிழைப் பயன்படுத்துவதைப் பிரபலப்படுத்த தமிழக அரசு சர்வதேச தமிழ்க் கணினி மாநாடு நடத்தப்படும்.
  • அகவை முதிர்ந்த மேலும் 591 தமிழ் அறிஞர்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயண அட்டை வழங்கப்படும்.
  • சோழ மன்னர்களின் சாதனைகளை விளக்கும் வகையில் தஞ்சாவூரில் சோழர் அருங்காட்சியகம் அமைக்கப்படும்.

Welfare of Sri Lankan Tamils –  இலங்கைத் தமிழர் நலன் 

  • இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் உள்ளவர்களுக்கு 3959 வீடுகள் கட்டுவதற்காக 223 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

Welfare of Ex-Servicemen –  முன்னாள் படை வீரர்கள் நலன்

  • பணியின் போது உயிர் தியாகம் செய்யும் ராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும் கருணைத்தொகை ரூ.20 லட்சத்தில் இருந்து ரூ.40 லட்சமாக இரட்டிப்பாக்கப்படும்.

Health and Family Welfare –  மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு

  • தொழில்துறை தொழிலாளர்களிடையே நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் சிறுநீரக நோய்கள் போன்ற தொற்றாத நோய்களைத் தடுப்பதில் கவனம் செலுத்தி மக்கள் தேடி மருத்துவம் திட்டம் தொழில்துறை தொழிலாளர்களுக்கும் விரிவுபடுத்தப்படும்.
  • சென்னை கிண்டியில் கட்டப்பட்டு வரும் 1,000 படுக்கைகள் கொண்ட கலைஞர் நினைவு மருத்துவமனை இந்த ஆண்டு மக்கள் பயன்பாட்டுக்கு வரும்.
  • கீழ்ப்பாக்கம், கோவை மற்றும் மதுரையில் மருத்துவ கல்லூரிகளில் கட்டப்பட்டு வரும் உயர் மருத்துவ கட்டடங்களும் இந்த ஆண்டு பயன்பாட்டிற்கு வரும். 
  • திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசினர் மருத்துவமனையில் 110 கோடி ரூபாய் செலவில் புதிய கட்டிடங்கள் கட்டப்படும்
  • பாளையங்கோட்டை சித்த மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையின் உள் கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு 40 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது

School Education –  பள்ளிக்கல்வி 

  • பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டத்தின் படி புதிய வகுப்பறைகள் ஆய்வகங்கள் கழிப்பறைகள் ஆகியவற்றைக் கட்ட 1500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
  • எண்ணும் எழுத்தும் திட்டத்தை நான்காம், ஐந்தாம் வகுப்புகளுக்கும் விரிவு படுத்த 110 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
  • மாணவர்கள் கல்வி உதவிதொகையை தாமதமின்றி  உரிய நேரத்தில் பெறுவதற்கு ஒருங்கிணைந்த கல்வி உதவித்தொகை இணையதளம் தொடங்கப்படும்.
  • மதுரையில் கலைஞர் நினைவு நூலகம் 2023 ஜூன் மாதம் திறக்கப்படும்.

Higher Education and Skill Development –  உயர்கல்வியும் திறன் மேம்பாடும்

  • 54 அரசு பல் தொழில்நுட்ப கல்லூரிகளை திறன்மிகு மையங்களாக தரம் உயர்த்த 2783 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
  • சென்னை அம்பத்தூரில் தமிழ்நாடு உலகளாவிய புதுமை முயற்சிகள் மற்றும் திறன் பயிற்சி மையம் (TN-WISH) அமைக்கப்படும்.
  • கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி 80 கோடி செலவில் சிப்காட் தொழில் பூங்கா திறன் மேம்பாட்டு மையம் அமைக்கப்படும்
  • குடிமைப் பணி தேர்வுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 1000 மாணவர்களுக்கு முதல் நிலைத் தேர்வுக்கு தயாராக மாதம் ரூ.7,500 ஊக்கத்தொகையும் முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு ரூ.25,000 உதவித்தொகையம் வழங்க ஆண்டுக்கு 10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

Youth Welfare and Sports –  இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு

  • சென்னை ஜவஹர்லால் நேரு திறந்தவெளி அரங்கத்தின் வசதிகளை சீரமைக்க ரூ.25 கோடி ஒதுக்கீடு.

Adi-Dravidar and Tribal Welfare – ஆதி திராவிடர் பழங்குடியினர் நலன் 

  • மதுரை கோயம்புத்தூர் திருச்சிராப்பள்ளி நீலகிரி ஆகிய மாவட்டங்களில் நவீன வசதிகளுடன் புதிய விடுதிகள் கட்ட ரூபாய் 100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 
  • ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின தொழில் முனைவோரின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வண்ணம் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடி திட்டம் என்னும் புதிய திட்டத்திற்கு 100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
  • நகர்ப்புற மற்றும் ஊரக பகுதிகளில் ஆதிதிராவிடர் அயோத்திதாச பண்டிதர் மேம்பாட்டு திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். 

Welfare of Differently Abled – மாற்றுத்திறனாளிகள் நலன் 

  • மாற்றுத்திறனாளிகளின் உதவித்தொகையை 1000 ரூபாயிலிருந்து 1500 ரூபாயாகவும், கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகளின் உதவித்தொகையை 1500 ரூபாயிலிருந்து 2000 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. 

Welfare of Backward Class, Most Backward class and Denotified Communities –  பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலன் 

  • மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்குவதற்காக ரூ. 305 கோடி நிதி ஒதுக்கீடு.

Women and Children –  பெண்கள் மற்றும் குழந்தைகள்

  • 30 ஆயிரத்து 122 அரசு தொடக்கப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் 18 லட்சம் மாணவர்கள் பயனடையும் வகையில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் விரிவுபடுத்தப்படும். இத்திட்டத்திற்கு 500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
  • மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு முப்பதாயிரம் கோடி ரூபாய் அளவிற்கு வங்கி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 
  • பெண் தொழில் முனைவோர் புத்தொழில்களை தொடங்குவதற்கு பெண்களுக்கென சிறப்பு தொழில் இயக்கம் தொடங்கப்படும்.
  • தகுதிவாய்ந்த குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ 1000 மகளிர் உதவித்தொகை வழங்கும் திட்டத்திற்கு ரூ7000கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15 அன்று செயல்படுத்தப்படும்.

Registration – பதிவுத்துறை

  • நிலம் வாங்குவோருக்கு பத்திரப்பதிவு கட்டணம் 4% லிருந்து 2% ஆக குறைக்கப்பட்டுள்ளது.

Police – காவல்

  • நிர்வாகத்தின் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்க மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமரா அமைக்க ரூ38.25 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

Information Technology – தகவல் தொழில்நுட்பம்

  • சிறந்த இணைய இணைப்பை ஏற்படுத்தவும், பல்வேறு டிஜிட்டல் சேவைகளை மலிவு விலையில் வழங்கவும், தமிழ்நாடு அரசு, மாநில தலைமையகத்தில் இருந்து அனைத்து மாவட்டங்களுக்கும் அதிவேக ஆப்டிகல் ஃபைபர் நெட்வொர்க்கை உருவாக்கும் ‘Unified Digital Infrastructure’ அமைக்க உள்ளது.
  • தகவல் தொழில்நுட்ப துறையில் உலகளாவிய மையமாக தமிழ்நாட்டை மேம்படுத்தவும், தரமான அலுவலக கட்டமைப்புத் தேவையை பூர்த்தி செய்யவும், சென்னை, கோயம்புத்தூர் மற்றும் ஓசூரில் ‘தமிழ்நாடு தொழில்நுட்ப நகரங்கள்’ (TNTech city) அமைக்கப்படும்.
  • சென்னை, தாம்பரம், ஆவடி, கோயம்புத்தூர், மதுரை, திருச்சிராப்பள்ளி, சேலம் மாநகராட்சியின் முக்கிய பொது இடங்களில் இலவச வைஃபை சேவைகள் வழங்கப்படும்.
  • 7 மாவட்டங்களில் நியோ டைட்டில் பூங்காக்கள் அமைக்கும் பணி நடைபெற்ற வரும் நிலையில் அதன் நீட்சியாக ஈரோடு, திருநெல்வேலி, செங்கல்பட்டில் தலா ஒரு லட்சம் சதுர அடி கட்டட பரப்பளவில் தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் அமைக்கப்படும்.

Industries – தொழில்துறை

  • ராணிப்பேட்டை மற்றும் கள்ளக்குறிச்சியில் தோல் அல்லாத பாதணிகள் தயாரிக்க மேலும் 2 தொழிற்சாலைகள் அமைக்கப்படும். இவற்றில் 32 ஆயிரம் பெண்களுக்கு வேலை வாய்ப்புகள் ஏற்படுத்தப்படும்.
  • உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024 ஆம் ஆண்டு சென்னையில் நடத்தப்பட உள்ளது இதற்காக 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • விருதுநகர், வேலூர், கள்ளக்குறிச்சி, கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் புதிய சிப்காட் தொழில் பூங்காக்கள் 410 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ளது.

Handloom and Textiles – கைத்தறி துணி நூல்

  • சேலத்தில் சுமார் 880 கோடி ரூபாய் செலவில் 119 ஏக்கர் நிலப்பரப்பில் புதிய ஜவுளி பூங்கா அமைக்கப்பட உள்ளது.

Energy – எரிசக்தி

  • 2030ஆம் ஆண்டுக்குள் 14,500 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் வகையில் மெகா மின் திட்டத்தை உருவாக்க ரூ.77,000 கோடி ஒதுக்கீடு.

Metro Rail – மெட்ரோ ரயில்

  • கோயம்புத்தூரில் அவிநாசி சாலை சத்தியமங்கலம் சாலைகளை உள்ளடக்கிய மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ரூ.9000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
  • மதுரை திருமங்கலத்தையும் ஒத்தக்கடையையும் இணைக்கும் மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ரூ.8500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

Transport – போக்குவரத்து

  • 1600 கோடி ரூபாய் முதலீட்டில் வடபழனி திருவான்மியூர் வியாசர் பாதியை உள்ள பேருந்து பணிமனைகள் மேம்படுத்தப்படும்.
  • 1000 புதிய பேருந்துகளை கொள்முதல் செய்யவும் 500 பழைய பேருந்துகளை புதுப்பிக்கவும் 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Highways – நெடுஞ்சாலைகள்

621 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை அண்ணா சாலையில் நான்கு வழி மேம்பாலம் கட்டப்படும்.

Urban Development – நகர்ப்புற மேம்பாடு

  • 172 கோடி ரூபாய் செலவில் கோவையில் செம்மொழி பூங்கா அமைக்கப்படும்.
  • சென்னை தீவுத்திடலில் 30 ஏக்கர் நிலப்பரப்பில் நகர்ப்புற பொது சதுக்கம் கண்ணாடி அரங்குகள் திறந்த வெளித் திரையரங்கம் உணவகங்கள் போன்ற நவீன நகர்ப்புற வசதிகளை 50 கோடி ரூபாய் செலவில் சென்னை நகர்ப்புற வளர்ச்சி குழுமம் ஏற்படுத்தப்படும்.

Rural Development – ஊரக வளர்ச்சித்துறை

  • பத்தாயிரம் சிறிய நீர் நிலைகள் குளங்கள் ஊரணிகள் 800 கோடி ரூபாய் செலவில் புதுப்பிக்கப்படும்.

Environment, Climate Change and Forests – சுற்றுச்சூழல் வனம் மற்றும் காலநிலை மாற்றம்

  • ஈரோடு மாவட்டத்திலுள்ள அந்தியூர் கோபிசெட்டிபாளையம் வட்டங்களில் உள்ள 80567 ஹெக்டேர் வனப் பரப்பில் தந்தை பெரியார் வனவிலங்கு சரணாலயம் அமைக்கப்படும் இது மாநிலத்தின் 18 வனவிலங்கு சரணாலயமாகும்.
  • மரக்காணத்தில் 25 கோடி ரூபாய் செலவில் பன்னாட்டு பறவைகள் மையம் அமைக்கப்பட உள்ளது.

Tamilnadu Budget 2023 – Department-wise allocation of funds

நிதிநிலை அறிக்கையின் மொத்த் திட்ட மதிப்பீடு: ரூ.3,55,321 கோடி முக்கிய துறைகளுக்கான நிதி ஒதுக்கீடு (. யில்)

  • பள்ளிக் கல்வி – ரூ40,299 கோடி
  • காவல் – ரூ10,812கோடி
  • நகர்ப்புற வளர்ச்சி – ரூ38,444 கோடி
  • ஆதிதிராவிடர் –  பழங்குடியினர் நலன்- ரூ3,513 கோடி
  • ஊரக வளர்ச்சி – ரூ22,562 கோடி
  • நெடுஞ்சாலைகள் – ரூ19,465 கோடி
  • எரிசக்தி – ரூ10,694 கோடி
  • மக்கள் நல்வாழ்வு – ரூ18,661கோடி
  • கூட்டுறவு-உணவு – ரூ16,262 கோடி
  • உயர்கல்வி – ரூ6,967 கோடி
  • மின்சார வாரிய மானியம் – ரூ14,063 கோடி
  • போக்குவரத்து -ரூ 8,056 கோடி
  • வீட்டுவசதி – நகர்ப்புற வளர்ச்சி – ரூ13,969 கோடி
  • சமூக நலன் – ரூ7,745 கோடி
  • நீர்வளம் – ரூ8,232 கோடி
  • நகராட்சி நிர்வாகம் – ரூ24,476 கோடி

***************************************************************************

இது போன்ற தேர்விற்கான தகவல் மற்றும் பாடக்குறிப்புகளை பெற ADDA247 தமிழ் செயலியை

பதிவிறக்கம் செய்யுங்கள்

To Attempt the Quiz on APP with Timings & All India Rank,

Download the app now, Click here

Adda247 பயன்பாட்டில் இந்த வினாடி வினாவை முயற்சிக்க இங்கே கிளிக் செய்து அகில இந்திய தரவரிசையைப் பெறுங்கள்

 Home page Adda 247 Tamil
Latest Notification TNPSC Recruitment 2023
Official Website Adda247

Coupon code –PREP15(Flat 15% off on all Products)

MADRAS HIGH COURT Batch | Tamil | Online Live Classes By Adda247
MADRAS HIGH COURT Batch | Tamil | Online Live Classes By Adda247

*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*

Check Live Classes in Tamil

*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*

Practice Now

Adda247App |  Adda247 Tamil Youtube

Tamil Engineering Classes by Adda247 Youtube link

Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group

Instagram = Adda247 Tamil

Tamilnadu Budget 2023, Highlights and Key Features_4.1

FAQs

Q. Who Presented the Tamilnadu Budget 2023?

Tamilnadu Budget 2023 was presented by Finance Minister Palanivel Thiaga Rajan in the assembly.

Q. Tamilnadu Budget 2023 is released on which date?

Tamilnadu Budget 2023 is released on 20 March 2023.