Tamil govt jobs   »   TN TRB Polytechnic Lecturer Exam   »   TN TRB Polytechnic Lecturer Exam

TN TRB Polytechnic Lecturer Exam -Important Announcement by Anna University | TN TRB பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு -அண்ணா பல்கலைக்கழகத்தின் முக்கிய அறிவிப்பு

TN TRB Polytechnic Lecturer Exam : தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று குறைந்து வருவதை தொடர்ந்து பல்வேறு அரசுத் தேர்வுகள் நடத்த உரிய ஏற்பாடுகள் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் TRB தேர்விற்கு தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யுமாறு கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலை கடிதம் அனுப்பியுள்ளது.

Fill the Form and Get All The Latest Job Alerts

TN TRB Polytechnic Lecturer Exam | TN TRB பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு:

தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் உள்ள முதுநிலை ஆசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் TRB தேர்வு வாரியத்தின் மூலம் தேர்வுகள் நடத்தப்பட்டு தேர்வு செய்யப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த 2017 – 18 ஆம் கல்வியாண்டில் பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக உள்ள விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அந்த வகையில் 2019ம் ஆண்டு அதற்கான அறிவிப்பு TRB தேர்வு வாரியத்தால் வெளியிடப்பட்டது. இந்த தேர்வுக்கு பெரும்பாலானோர் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துள்ளனர்.

Read more: Madras High Court Assistant Programmer Rejected List

அதனை தொடர்ந்து கடந்த 2019ம் ஆண்டு பரவிய கொரோனா பெருந்தொற்றின் காரணமாக இந்த தேர்வு நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. தற்போது கொரோனா தொற்று குறைந்து வருவதை தொடர்ந்து பல்வேறு அரசுத் தேர்வுகள் நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து TRB தேர்வு வாரியமும் விரிவுரையாளர் தேர்வை நடத்த முடிவு செய்து தேர்வு தேதியை வெளியிட்டது. அதன்படி கடந்த செப்டம்பர் மாதம் 28, 29, 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் நடத்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. அந்த தேர்விற்கான ஹால் டிக்கெட்டும் trb.tn.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டு தேர்வர்கள் அதனை பதிவிறக்கம் செய்து கொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் தேர்வு மையம் ஒதுக்கீடு செய்வதில் ஏற்பட்ட பிரச்சனைகளின் காரணமாக தேர்வு நடத்தப்படவில்லை.

TN TRB Polytechnic Lecturer Exam Conclusion | TN TRB பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முடிவுரை:

தற்போது மீண்டும் அந்த தேர்வானது வரும் டிசம்பர் 4ம் தேதி முதல் 12ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தேர்வு தேதியானது நிர்வாக காரணங்களை பொறுத்து மாறுபடும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த தேர்விற்கு தங்களது கல்லூரிகளை தேர்வு மையங்களாக ஒதுக்கீடு செய்யுமாறு அனைத்து பொறியியல் கல்லூரி நிர்வாகங்களுக்கும் அண்ணா பல்கலை கடிதம் அனுப்பியுள்ளது.

 

Weekly Current Affairs One-Liners | 18th to 24th of October 2021 Weekly Current Affairs In Tamil 1st Week Of October 2021
Weekly Current Affairs One-Liners | 11th to 17th of October 2021 Weekly Current Affairs in Tamil 2nd Week of October 2021
Monthly Current Affairs PDF in Tamil October 2021 Tamilnadu Monthly Current Affairs PDF in Tamil October 2021 2021

Coupon code- NOV75-75% OFFER

 

ALL IN ONE TN MEGAPACK ALL LIVE, TEST SERIES, EBOOKS -12 MONTH VALIDITY
ALL IN ONE TN MEGAPACK ALL LIVE, TEST SERIES, EBOOKS -12 MONTH VALIDITY

*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*

Check Live Classes in Tamil

*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*

Practice Now

Adda247App |  Adda247 Tamil Youtube

Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group