Tamil govt jobs   »   Latest Post   »   TNPSC Book Back Questions Tamil Medium...
Top Performing

TNPSC Book Back Questions Tamil Medium – Status of Women in India through the ages

TNPSC Samacheer Book Back Questions: ADDA 247 Tamil is giving you TNPSC Samacheer Book Back Questions – Status of Women in India through the ages MCQs for all competitive exams. Here you get Multiple Book Back Choice Questions and Answers. Here you will find all the important questions and answers that will help you increase your knowledge and move you toward fulfilling your goals. Study these TNPSC Book Back Questions MCQs and succeed in the exams.

காமங்கள்தோறும் இந்தியப் பெண்णகளின் நிமை

I சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

Q1. ——————சமூகமானது தனக்குள்ளிருந்தும் வெளியிலிருந்தும் மாற்றங்களை உட்கிரகித்தும் வெளிப்படுத்தியும் நீக்கியும் தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கிறது.

(a) மனித 

(b) விலங்கு

(c) காடு 

(d) இயற்கை

S1.Ans.(a)

Sol.

  • பொதுவாக மனித சமூகமானது தனக்குள்ளிருந்தும் வெளியிலிருந்தும் மாற்றங்களை உட்கிரகித்தும் வெளிப்படுத்தியும் நீக்கியும் தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கிறது. 
  • மக்கள் தொகையில் சரிபாதியாக பெண்கள் உள்ளனர். 

Q2. இந்தியாவின் முதல் பெண் மருத்துவர்

(a) தர்மாம்பாள்

(b) முத்துலட்சுமி அம்மையார்

(c) மூவலூர் ராமாமிர்தம்

(d) பண்டித ரமாபாய்

S2.Ans.(b)

Sol.

  • இந்தியாவின் முதல் பெண் மருத்துவரான டாக்டர் முத்துலட்சுமி அம்மையார், கொடுமையான தேவதாசி முறையை தமிழ்நாட்டிலிருந்து ஒழிப்பதற்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டார்.

Q3. சதி எனும் நடைமுறை ஒழிக்கப்ப ட்ட ஆண்டு

(a) 1827 

(b) 1828

(c) 1829 

(d) 1830

S3.Ans.(c)

Sol.

  • வில்லியம் பெண்டிங் பிரபு குற்றவியல் நீதிமன்றங்களின் எனும் நீதிபதிகளால் சதி பழக்கம் ரத்து செய்யப்படுவது பரிந்துரைக்கப்பட்டிருப்பதை கண்டார். 
  • எனவே அவர் டிசம்பர் 4, 1829இல் விதிமுறை XVII என்ற சட்டத்தை நிறைவேற்றினார். இச்சட்டத்தின் மூலம் சதியில் ஈடுபடுவது அல்லது எரித்தல் அல்லது இந்துவிதவைகளை உயிருடன் புதைத்தல் ஆகியவை சட்டத்திற்கு புறம்பானது மற்றும் குற்றவியல் நீதிமன்றங்களால் தண்டிக்ககூடியவை எனவும் அறிவித்தார்.
  • அதே போன்ற நடவடிக்கைகள் பம்பாய் மற்றும் சென்னையிலும் உடனடியாக சட்டமாக்கப்பட்டது.

Q4. B.M. மலபாரி என்பவர் ஒரு

(a) ஆசிரியர் 

(b) மருத்துவர்

(c) வழக்கறிஞர் 

(d) பத்திரிகையாளர்

S4.Ans.(d)

Sol.

  • பத்திரிகையாளரான B.M. மலபாரி 1884இல் குழந்தை திருமணத்தை ஒழிப்பதற்கான இயக்கத்தைத் ஒரு தொடங்கினார்.

Q5. பின்வருவனவற்றில் எவை/எது சீர்திருத்த இயக்கம் (ங்கள்)?

(a) பிரம்ம சமாஜம்

(b) பிரார்த்தனை சமாஜம்

(c) ஆரிய சமாஜம்

(d) மேற்கண்ட அனைத்தும்

S5.Ans.(d)

Sol.

  • பெரும்பாலான சீர்திருத்த இயக்கங்களான பிரம்ம சமாஜம் (1828), பிரார்த்தனை சமாஜம் (1867) மற்றும் ஆரிய சமாஜம் (1875) போன்றவை ஆண் சீர்திருத்தவாதிகளால் வழிநடத்தப்பட்டன.

Q6. பெதுன் பள்ளி —————-இல் J.E.D. பெதுன் என்பவரால் நிறுவப்பட்டது.

(a) 1848 

(b) 1849

(c) 1850 

(d) 1851

S6.Ans.(b)

Sol.

  • கல்கத்தாவில் கல்வி கழகத்தின் தலைவராக இருந்த J.E.D. பெதுன் என்பவர் 1849ஆம் ஆண்டு பெதுன் பள்ளியை நிறுவினார்.

Q7. 1882ஆம் ஆண்டில் சிறுமிகளுக்கான ஆரம்பப் பள்ளிகளைத் தொடங்க எந்த ஆணையம் பரிந்துரைத்தது?

(a) வுட்ஸ் 

(b) வெல்பி

(c) ஹண்டர் 

(d) முட்டிமன்

S7.Ans.(a)

Sol.

  • 1854ஆம் ஆண்டின் சார்லஸ் வுட் கல்வி அறிக்கை பெண் கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளித்தது.  
  • 1882ஆம் ஆண்டில் இந்திய கல்விக் (ஹண்டர்) குழு சிறுமிகளுக்கான தொடக்கப் பள்ளியையும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களையும் தொடங்க பரிந்துரைத்தது. 

Q8. சாரதா குழந்தை திருமண மசோதாவானது சிறுமிகளுக்கான குறைந்தபட்ச திருமண வயதை—————என நிர்ணயித்தது.

(a) 11 

(b) 12 

(c) 13 

(d) 14

S8.Ans.(d)

Sol.

  • 1930இல் மத்திய சட்டபேரவையில் ராய்சாகிப்ஹர்பிலாஸ் சாரதா குழந்தை திருமண மசோதா கொண்டுவரப்பட்டது. 
  • இச்சட்டம் ஆண்களுக்கான குறைந்தபட்ச திருமண வயது 18 எனவும் பெண்களுக்கான குறைந்தபட்ச திருமணவயது 14 ஆகவும் நிர்ணயித்தது.
  • பின்னர் இது 1955ஆம் ஆண்டு இந்து திருமணச் சட்டத்தின்படி ஆண்களுக்கான குறைந்தபட்ச திருமணவயது 21 ஆகவும் பெண்களுக்கான குறைந்தபட்ச திருமண வயது 18 எனவும் திருத்தப்பட்டது.

II கோடிட்ட இடங்களை நிரப்புக

  1. ————1819இல் கிறித்தவ சமயப்பரப்பு குழுக்களால் அமைக்கப்பட்டது. (பெண் சிறார்)
  2. சிவகங்கையை சேர்ந்த———— என்பவர் பிரிட்டிஷாரை எதிர்த்து வீரமாக போராடினார். (வேலுநாச்சியார்)
  3. இந்திய ஊழியர் சங்கத்தை நிறுவியவர்————. (கோபால கிருஷ்ண கோகலே)
  4. தமிழ்நாட்டின் மிகப்பெரிய சமூக சீர்திருத்தவாதிகளில் ஒருவர்———— ஆவார். (பெரியார் ஈ.வெ .ரா)
  5. கந்துகூரி வீரேசலிங்கம் வெளியிட்ட பத்திரிகையின் பெயர்———— ஆகும். (விவேகவர்தினி)

III 

Q9.பொருத்துக

1 பிரம்மஞான சபை – இத்தாலிய பயணி

2 சாரதா சதன் – சமூக தீமை

3 வுட்ஸ் கல்வி அறிக்கை- அன்னிபெசன்ட்

4 நிக்கோலோ கோண்டி- பண்டித ரமாபாய்

5 வரதட்சணை – 1854

(a) 5 1 2 3 4

(b) 5 3 4 1 2

(c) 1 5 2 4 3

(d) 3 1 5 2 4

S9.Ans.(d)

Sol. 3 4 5 1 2

IV சரியா / தவறா எனக் குறிப்பிடுக:

  1. ரிக் வேத காலத்தில் பெண்கள் கௌரவிக்கப்பட்டனர். (சரி)
  2. தேவதாசி முறை ஒரு சமூக தீமை. (சரி)
  3. இந்திய சமூக சீர்திருத்த இயக்கத்தின் முன்னோடி ராஜா ராம்மோகன் ராய்.(சரி)
  4. பெண்களுக்கான 23 சதவீத இட ஒதுக்கீடு என்பது பெண்களின் சமூக – அரசியல் நிலையைமேம்படுத்துவதைக் குறிக்கிறது. (தவறு)
  5. 1930ஆம் ஆண்டு சாரதா சட்டம் சிறுவர்கள் மற்றும் சிறுமிகளுக்கான திருமண வயதை உயர்த்தியது.(சரி)

சரியான கூற்றைத் தேர்வு செய்யவும்

Q10. சரியான இணையை கண்டுபிடி.

(a) மகளிர் பல்கலைக்கழகம்- பேராசிரியர் D.K. கார்வே

(b) நீதிபதி ரானடே – ஆரிய சமாஜம்

(c) விதவை மறுமணச் சட்டம் – 1855

(d) ராணி லட்சுமிபாய் – டெல்லி

S10.Ans.(a)

Sol.

  • 1916இல் இந்திய மகளிர் பல்கலைக்கழகம் பேராசிரியர் D.K. கார்வேவால் தொடங்கப்பட்டது.
  • இது பெண்களுக்குக் கல்வியை வழங்குவதில் சிறந்த நிறுவனமாக நிறுவனமாக விளங்கியது. 

 

Q11. பின்வரும் கூற்றுகளைக் கவனிக்கவும்.

  1. i) பேகம் ஹஸ்ரத் மஹால், ராணி லட்சுமி பாய் ஆகியோர் ஆங்கிலேயர் மீது ஆயுதமேந்திய கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.
  2. ii) தமிழ்நாட்டின் சிவகங்கையைச் சேர்ந்த வேலுநாச்சியார், பிரிட்டிஷாருக்கு எதிராக வீரமாக போராடினார்.

மேலே கொடுக்கப்ப ட்ட எந்த வாக்கியம் (ங்கள்) சரியானவை?

(a) i மட்டும் 

(b) ii மட்டும்

(c) i மற்றும் ii 

(d) இரண்டுமில்லை

S11.Ans.(c)

Sol.

  • வேலுநாச்சியார் வீரதீரமாக சிவகங்கையில் ஆங்கிலேயருக்கு எதிராக போரிட்டு தனது ஆட்சியை மீட்டெடுத்தார். 
  • 1857ஆம் ஆண்டு ஆங்கிலேயருக்கு எதிரான போராட்டத்தில் பேகம் ஹஸ்ரத் மஹால், ஜான்சியின் ராணி லட்சுமி பாய் போன்றோர் ஆயுதமேந்தி போராடினர்.

Q12. கூற்று: ராஜா ராம்மோகன் ராய் அனைத்து இந்தியர்களாலும் மிகவும் நினைவு கூறப்படுகிறார்.

காரணம்: இந்திய சமுதாயத்தில் இருந்த சதி என்ற தீயபழக்கத்தை ஒழித்தார்.

(a) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறானவை.

(b) கூற்று சரியானது. காரணம் தவறு.

(c) கூற்று சரியானது. காரணம் கூற்றை விளக்குகிறது.

(d) கூற்று சரி. காரணம் கூற்றை விளக்கவில்லை.

S12.Ans.(c)

Sol.

  • 1829இல் சதி எனும் உடன்கட்டை ஏறுதல் தண்டனைக்குரிய குற்றம் வில்லியம் பெண்டிங் பிரபு அறிவித்தார். இந்த  தடைச்செயலுக்கு உதவியதற்காக ராஜா ராம்மோகன் ராய் மிகவும் நினைவு கூறப்படுகிறார்.

**************************************************************************

Tamilnadu mega pack
Tamilnadu mega pack
இது போன்ற தேர்விற்கான தகவல் மற்றும் பாடக்குறிப்புகளை பெற ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்
Adda247 TamilNadu Home page Click here
Official Website=Adda247 Click here
TNPSC Book Back Questions Tamil Medium - Status of Women in India through the ages_4.1