Tamil govt jobs   »   Latest Post   »   TNPSC பொருளாதார இலவச குறிப்புகள் - வணிக...
Top Performing

TNPSC பொருளாதார இலவச குறிப்புகள் – வணிக வங்கியின் பணிகள்

இந்தக் கட்டுரையில், TNPSC குரூப் 1, குரூப் 2, குரூப் 2A, குரூப் 4 மாநிலப் போட்டித் தேர்வுகளான TNUSRB, TRB, TET, TNEB போன்றவற்றுக்கான  முறைகள் இலவசக் குறிப்புகளைப் பெறுவீர்கள்.தேர்வுக்கு தயாராவோர் இங்குள்ள பாடக்குறிப்புகளை படித்து பயன்பெற வாழ்த்துகிறோம்.

வணிக வங்கியின் பணிகள் (Functions of Commerical Banks)

  • வணிக வங்கிகள் இலாப நோக்கம் உடையவை. அதனால் அவைகள் வைப்புக்களைப் பெற்று முதலீட்டுக்கான கடன்களை அளிக்கின்றன. 
  • வணிக வங்கிகளின் பணிகளை முதன்மை பணிகள் மற்றும் இரண்டாம் நிலை பணிகள் என இருபெரும் பிரிவுகளாக பிரிக்கப்படுகிறது. 

முதன்மைப் பணிகள் (Primary Functions): 

  1. வைப்புகளை ஏற்றுக்கொள்ளுதல் (Accepting Deposits)
  2. கடன் வழங்கல் (Lending Loans)
  3. வைப்புகளை ஏற்றுக்கொள்ளுதல் (Accepting Deposits):
  • பொதுமக்களால் செலுத்தப்படும் வைப்புக்களே (deposits) வங்கி வணிகத்திற்கான முக்கிய நிதியாதாரம் ஆகும். 
  • பொது வைப்புக்களை இரு வகைகளாக பிரிக்கலாம். அவை கேட்பு வைப்புகள் மற்றும் கால வைப்புகள் ஆகும். 

கேட்பு வைப்புகள் (Demand Deposits): 

  • இவை வங்கிகளில் வைப்புக்களை வைத்திருக்கும் வாடிக்கையாளர் முன்னறிவிப்பின்றி எப்பொழுது வேண்டுமானலும் பணத்தை தனது கணக்கிலிருந்து எடுத்துக் கொள்ள அனுமதிக்கப்படும் ஒரு வைப்பாகும். 
  • பணம் பெறும் படிவம், காசோலை, அல்லது தானியங்கி பணம் வழங்கும் இயந்திரம் மூலம் எப்பொழுது அவருக்குத் தேவைப்படுகிறதோ அப்பொழுது பணத்தை தனது வைப்பிலிருந்து எடுத்துக் கொள்ளலாம். 

கால வைப்புக்கள் (Time Deposits): 

  • இவை ஒரு குறிப்பிட்ட காலவரையறை வரை வங்கிகளிடமிருந்து மீளப் பெறப்படாமல் இருக்கும் வைப்புகளாகும். 
  • வங்கிகள் கால வைப்புக்களுக்கு கூடுதலான வட்டியை வழங்குகின்றன. 
  • இவ்வகை வைப்புக்களை வங்கிகளிடமிருந்து மீளப்பெற குறிப்பிட்ட கால இடைவெளியும், எழுத்துபூர்வமான முன்னறிவிப்பும் தேவைப்படுகிறது. 
  1. கடன் வழங்கல் (Lending Loans):
  • தனி நபர்கள் மற்றும் வாணிபத்திற்கான கடன்களை வங்கிகள் வழங்குகின்றன. 
  • வணிக வங்கிகள் ரொக்கக் கடன், மாற்றுச்சீட்டு தள்ளுபடி, மிகைப்பற்று ஆகிய முறைகளில் கடன்களை வழங்குகின்றன. 

இரண்டாம் நிலை பணிகள் (Secondary Functions): 

  1. முகமைப் பணிகள் 
  2. பொதுப் பயன்பாட்டுப் பணிகள் 
  3. நிதிமாற்றுதல் பணிகள்
  4. இதரப் பணிகள். 
  1. முகமைப்பணிகள் (Agency Functions):
  • வங்கி வாடிக்கையாளர்களுக்கு முகவராக (Agent) இருந்து செய்யும் பணிகளை முகமைப்பணிகள் எனப்படுகிறது. 

காசோலைகளை பணமாக்குதல்: 

தன் வாடிக்கையாளர்களுக்காக அவர்களுக்கு வரும் காசோலைகள், மாற்றுச் சீட்டுக்கள் போன்றவற்றை வங்கிகள் தீர்வகத்தின் மூலம் வழல் செய்து கொடுக்கின்றன

   வருமானத்தை பெறுதல்: 

  • வணிக வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு வரவேண்டிய இலாப ஈவு, ஓய்வூதியம், சம்பளம், வாடகை, வட்டி ஆகியவற்றினை வசூலித்து தருகின்றன.
  • வாடிக்கையாளருக்கான வருமானம் வசூலிக்கப்பட்டதை பற்றுச்சீட்டின் மூலம் வங்கிகள் தெரியப்படுத்துகிறது. 

 

செலவுகளை செலுத்துகிறது: 

  • தொலைபேசி கட்டணம், காப்பீட்டு பிரிமியம், கல்விக் கட்டணம், வாடகை செலுத்துதல் போன்ற பல்வேறு செலுத்துக் கடமைகளை வாடிக்கையாளர்களுக்காக செய்கிறது. 
  • இச்செலவுகளைச் செய்யும் பொது செலவுச் சீட்டின் மூலம் வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு தெரியப்படுத்துகின்றது. 
  1. பொதுப் பயன்பாட்டு பணிகள் (General Utility Functions):
  • இது வங்கிகள் தன் வாடிக்கையாளர்களுக்காக சில கூடுதல் பயன்பாடுகளை உருவாக்கும் நோக்கில் செய்யும் பணிகளைப் பொதுப் பயன்பாட்டு பணிகள் என்கிறோம். அவைகள் 

பாதுகாப்பு பெட்டக வசதி: 

  • நகைகள், பங்குகள், கடன் பத்திரங்கள் போன்ற மதிப்புமிக்க பொருட்களை பாதுகாக்க, பெட்டக வசதியை வணிக வங்கிகள் தருகின்றன. 
  • பெட்டகத்தில் உள்ள பொருட்களுக்கு வங்கி பொறுப்பல்ல. 

பயணக் காசோலைகளை வழங்குதல்: 

பயணக் காசோலைகளை வழங்குவதன் மூலம் வெளிநாட்டு பயணத்தின்போது பணப்பாதுகாப்பினை வழங்குகிறது

அந்நியச் செலாவணியைக் கையாளுதல்: 

  • ஏற்றுமதி, இறக்குமதியில் ஈடுபடும் வணிகர்களுக்கு வணிக வங்கிகள் அந்நிய செலாவணி வசதியைச் செய்து தருகிறது. 
  • இதற்காக நாட்டின் மைய வங்கியிடம் வணிக வங்கிகள் உரிய அனுமதியினை பெற்றிருக்க வேண்டும். 
  1. நிதிமாற்றுதல்: 
  • ஒரு வங்கியிலிருந்து மற்ற வங்கிக்கு நிதியைமாற்றுவதாகும். 
  • வரைவு காசோலைகள், தொலைபேசி மற்றும் மின்னணு பரிமாற்றங்கள் மூலம் நிதி மாற்றப்படுகிறது.
  1. கடன் உறுதியளிப்பு கடிதம் (Letter of Credit):

வாடிக்கையாளரின் கடன் நம்பகத் தன்மையை சான்றளிக்கும் விதமாக வங்கிகள் கடன் உறுதியளிப்பு கடிதங்களை வழங்குகின்றன 

இதர பணிகள் (Other Functions): 

பண அளிப்பு: 

  • இது பண விநியோகத்தை அதிகரித்தல் ஆகும். 
  • உதாரணமாக, வங்கி ஒருவருக்கு 5 இலட்சம் கடன் வழங்கும் போது கடன் பெறுபவர் பெயரில் உள்ள கேட்பு வைப்பு கணக்கில் வரவு வைக்கப்படுகின்றது. 
  • இங்கு பணம் ரொக்கமாகச் செலுத்தப்படவில்லை என்பதை கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். 
  • எனவே அதிகமாக பணம் அச்சடிக்கப்படாமல் பண அளிப்பு அதிகரிக்கின்றது. 

கடன் உருவாக்கம்: 

  • கடன் உருவாக்கம் என்பது கடன்களையும், முன்பண அளிப்பினையும் அதிகரிக்கும் ஒரு செயல். 
  • மொத்த பண அளிப்பில் கடன் பணத்தின் அளவினை அதிகரிப்பது கடன் உருவாக்கம் ஆகும். கடன் உருவாக்கம் வணிக வங்கிகளின் பணிகளில் மிகச் சிறந்த ஒன்றாகும். 

புள்ளிவிவரங்களை திரட்டுதல்: 

  • வணிகம், தொழில், விவசாயம், நிதி போன்ற அடிப்படைதுறைகளின் புள்ளிவிவரங்களை வெளியிடுகின்றன.

 

**************************************************************************

Tamilnadu mega pack
Tamilnadu mega pack
இது போன்ற தேர்விற்கான தகவல் மற்றும் பாடக்குறிப்புகளை பெற ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்
Adda247 TamilNadu Home page Click here
Official Website=Adda247 Click here
TNPSC பொருளாதார இலவச குறிப்புகள் - வணிக வங்கியின் பணிகள்_4.1