Tamil govt jobs   »   Latest Post   »   TNPSC பொருளாதார இலவச குறிப்புகள் - கடன்...

TNPSC பொருளாதார இலவச குறிப்புகள் – கடன் கட்டுப்பாட்டு முறைகள்

இந்தக் கட்டுரையில், TNPSC குரூப் 1, குரூப் 2, குரூப் 2A, குரூப் 4 மாநிலப் போட்டித் தேர்வுகளான TNUSRB, TRB, TET, TNEB போன்றவற்றுக்கான  முறைகள் இலவசக் குறிப்புகளைப் பெறுவீர்கள்.தேர்வுக்கு தயாராவோர் இங்குள்ள பாடக்குறிப்புகளை படித்து பயன்பெற வாழ்த்துகிறோம்.

 

கடன் கட்டுப்பாட்டு முறைகள் (Methods of Credit Control)

  1. கடன் அளவுக் கட்டுப்பாட்டு முறைகள்
  1. வங்கி விகிதக் கொள்கை
  2. வெளிச்சந்தை நடவடிக்கைகள்
  3. மாறும் குறைந்தபட்ச வங்கி ரொக்க இருப்பு விகிதம்

வங்கி விகிதக் கொள்கை (Bank Rate Policy): 

    • வங்கி விகிதக் கொள்கை என்பது தள்ளுபடி விகித கொள்கை (Discount Rate Policy) என்றும் அழைக்கப்படுகிறது. 
  • மைய வங்கியானது எந்த விகிதத்தில் முதல்நிலை மாற்றுச் சீட்டுகள் மற்றும் பிணையங்கள் தள்ளுபடி செய்கிறது என்பதே வங்கி விகித கொள்கை என்பதாகும்

வெளிச்சந்தை நடவடிக்கைகள் (Open Market Operations): 

  • ஒரு குறுகிய அளவில் பார்க்கும்பொழுது – மைய வங்கியானது பொதுச் சந்தையில் அரசின் கடன் பத்திரங்களை வெளியிடுவதும் திரும்பப்பெறுவதும் வெளிச்சந்தை நடவடிக்கைகள் எனப்படுகின்றது. 
  • சற்று விரிவாக பார்க்கும் பொழுது – மைய வங்கி அரசின் கடன் பத்திரங்களை மட்டுமல்லாமல் தனியார் நிறுவனங்களின் தகுதி படைத்த பத்திரங்களையும் விற்பனை செய்வதும், திரும்பப் பெறுவதும் ஆகும்.

மாறும் ரொக்க இருப்பு விகிதம் (Variable Cash Reserve Ratio): 

ரொக்க இருப்பு விகிதம்: 

  • மொத்த வைப்புத் தொகையில் வணிக வங்கிகள் மைய வங்கியில் ரொக்கமாக வைத்திருக்க வேண்டிய அளவின் வீதம். ரொக்க இருப்பு விகிதம் எனப்படுகிறது.
  • மாறும் ரொக்க இருப்பு விகிதம் என்பது பணவியல் கொள்கையின் ஒரு கருவி. இதனை முதன்முதலாக கீன்ஸ் பரிந்துரைத்தார். 
  • அமெரிக்கா மைய வங்கியான பெடரல் ரிசர்வ் சிஸ்டம் முதன் முதலில் இதை அமல்படுத்தியது
  • ரொக்க இருப்பு விகிதத்திற்கும் வணிக வங்கிகள் வழங்கும் கடன் அளவிற்கும் எதிர்மறை தொடர்பு உள்ளது. 
  • வணிக வங்கிகளிடம் கூடுதலான பணம் உள்ள சூழ்நிலையில் அவைகள் தேவைக்கு அதிகமான கடன் பணத்தை உருவாக்க வாய்ப்பிருக்கிறது. இது பொருளாதாரத்தில் விரும்பத்தகாத விளைவுகளை ஏற்படுத்தும். 
  • ஆகவே மைய வங்கி தனது அதிகாரமான ரொக்க இருப்பு விகிதத்தை உயர்த்துவதன் மூலம், வணிக வங்கிகளின் கடன் அளவை கட்டுப்படுத்துகிறது.
  • ரொக்க இருப்பு விகிதம் அதிகமாக இருந்தால் வணிக வங்கிகளின் கடன் உற்பத்தி குறைவாகவும், ரொக்க, இருப்பு விகிதம் குறைவாக இருந்தால் கடன் உற்பத்தி அதிகமாகவும் இருக்கும். 

சட்டபூர்வ நீர்மை விகிதம்: 

    • வங்கிகள் தன்னகத்தே எப்பொழுதும் வைத்திருக்க வேண்டிய ரொக்கம், தங்கம், மற்றும் ஒப்புதல் பெற்ற பத்திரங்கள் உள்ளடக்கிய நீர்மை தன்மை கொண்ட சொத்துக்கள் ஆகும். 
  • இது கேட்பு வைப்பு மற்றும் கால வைப்பு போன்ற வங்கியின் பொறுப்புக்களின் ஒரு குறிப்பிட்ட சதவிகித அளவிற்கு இருக்க வேண்டும். 

 

  1. கடன் தன்மைக் கட்டுப்பாட்டு முறைகள்: 
  • கடன் தன்மை கட்டுப்பாட்டுமுறை அல்லது தெரிந்தெடுத்த கடன் கட்டுப்பாட்டு முறைகள் (Selective Credit Control Methods) என்பது தெரிந்தெடுத்த துறைகளில், தொழில்கள், வணிகங்கள் அல்லது பயன்களில் மட்டும் கடன் கட்டுப்பாட்டினை கொண்டு வருவது ஆகும். 
  • இம்முறைகளில் கீழ்க்கண்டவை அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன. 
  • கடன் பங்கீடு 
  • நேரடி நடவடிக்கைகள் 
  • நெறிமுறை தூண்டல் 
  • விளம்பரப்படுத்துதுல் 
  • நுகர்வோர் கடனை முறைப்படுத்தல், மற்றும் 
  • ஈட்டுக் கடன்களில் விளிம்பு நிலையை தொகையை மாற்றுதல். 

கடன் பங்கீடு (Rationing of Credit): 

  • இது ஒரு பழமையான கடன் கட்டுப்பாட்டு முறையாகும். 
  • முதன்முறையாக பதினெட்டாம் நூற்றாண்டில் இங்கிலாந்தின் மைய வங்கியான இங்கிலாந்து வங்கியில் (Bank of England) இம்முறை பயன்படுத்தப்பட்டது. 
  • நாட்டின் பண அளிப்புச் சூழ்நிலைகளுக்கு ஏற்ப அக்கடன் நோக்கங்களைப் பட்டியலிட்டு வரையறை செய்வதன் மூலம் கடன் கட்டுப்பாட்டினை ஏற்படுத்துவது இதன் நோக்கமாகும். 
  • இதில் இருவகைகள் உள்ளன.
  • மாறும் தொகுப்பு வரையறை (Variable Portfolio Ceiling) 
  • மாறும் மூலதன சொத்து விகிதம் (Variable Capital Asset Ratio). 

மாறும் தொகுப்பு வரையறை: 

இதில் ஒவ்வொரு வணிக வங்கியும் எவ்வளவு அதிகபட்ச கடன் மற்றும் முன்பணம் கொடுக்கலாம் என்பதனை மைய வங்கி வரையறுப்பது ஆகும்

மாறும் மூலதன சொத்து விகிதம்: 

இது வணிக வங்கிகள் தங்களது சொத்து மதிப்பில் எந்த அளவு மூலதனமாக வைத்துக்கொள்ளலாம் என்பதனை மைய வங்கி வரையறை செய்வது ஆகும்

நேரடி நடவடிக்கைகள் (Direct Actions): 

  • வணிக வங்கிகள் தள்ளுபடிக்காக கொண்டு வரும் மாற்றுச் சீட்டு உள்ளிட்ட அனைத்து பிணையங்களையும் ஒட்டுமொத்தமாக மைய வங்கி மறுப்பது ஆகும். 
  • மூலதனம் மற்றும் இருப்புக்களைத் தாண்டி மொத்தக் கடனளைவை கொண்டுள்ள வணிக வங்கிக்கு வேண்டப்படும் நிதி ஒதுக்கீட்டினை மைய வங்கி மறுப்பது ஆகும். 
  • அனுமதிக்கப்பட்ட அளவைத் தாண்டி மைய வங்கியில் கடன்பெறும் வணிக வங்கிகளுக்கு இயல்பான வட்டியுடன் அபராத வட்டி விகிதத்தை விதிப்பது ஆகும். 

நெறிமுறைத் தூண்டல் (Moral Suasion): 

    • வணிக வங்கிகளின் கடன் அளவை கட்டுப்படுத்த மைய வங்கி அடிக்கடி கையாளும் ஒரு முறையாகும். 
  • இம்முறையின் கீழ், அறிவுரைகளையும் வேண்டுகோளையும் வைப்பதன் மூலம் வணிக நெறிமுறையினைப் போதித்து வணிக வங்கிகள் வழங்கும் கடன்களைக் கட்டுப்படுத்துகிறது. 

விளம்பரப்படுத்தல் (Publicity): 

  • மைய வங்கி தனது கடன் வழங்கும் கொள்கைகளை பொதுமக்களிடம் விளம்பரப்படுத்துவதன் மூலம் கடன் அளவை கட்டுப்படுத்துவது ஆகும். 
  • ஆனால், இம்முறையின் வெற்றி மைய வங்கியால் எந்த அளவுக்கு மக்களிடம் பொதுக்கருத்தினை ஏற்படுத்த முடிகிறது என்பதைப் பொறுத்து அமையும்.

நுகர்வோர் கடனை நெறிப்படுத்தல் (Regulation of Consumer Credit): 

தவணைமுறைக் கொள்முதல் போன்றவற்றில் நுகர்வோர் செலுத்தும் தவணைத் தொகையை அதிகப்படுத்தி, தவணைகளின் எண்கணிக்கையைக் குறைப்பதன் மூலம் நுகர்வோர் கடன் வாங்குவதை குறைக்க முடிகிறது.

ஈட்டுக் கடன்கள் மீதான விளிம்பு தொகை தேவையை மாற்றுதல் (Regulating the Marginal Requirement on Security Loans) 

  • இம்முறை அமெரிக்காவில் பெருமளவுக்குப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 
  • அந்நாட்டின் மையவங்கியான அமெரிக்க பெடரல் ரிசர்வ் சிஸ்டத்தின் இயக்குநர் குழு ஈட்டுக் கடன்களின் விளிம்புநிலை தொகை தேவையை மாற்றியமைக்கும் அதிகாரத்தை கொண்டுள்ளது.
  • இந்த அதிகாரம், அமெரிக்காவின் 1934-ஆம் ஆண்டு பிணைய பரிவர்த்தனை சட்டத்தின் (Sucurities Exchange Act, 1934) அடிப்படையில் அமைந்துள்ளது. இதன் மூலம் பங்குச்சந்தையில் ஊக வாணிபத்தில் ஈடுபடுவதைக் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 

ரெப்போ விகிதம் (RR):

  • வணிக வங்கிகளுக்கு மைய வங்கி குறுகிய கால கடன் வழங்கும்பொழுது விதிக்கும் வட்டி விகிதமே ரெப்போ விகிதம் எனப்படுகிறது. 
  • ரெப்போ விகிதம் இவ்வங்கிகளுக்கு நிதிப்பற்றாக்குறை ஏற்படும் பொழுது அவைகள் பத்திரங்களை ஈடாக வைத்து இந்திய ரிசர்வ் வங்கியில் கடன்களை பெறும். 
  • பணவீக்கத்தை கட்டுப்படுத்த ரெப்பொ விகிதத்தை அதிகரிப்பதன் மூலம் கடன் வாங்குவதற்கான செலவை அதிகப்படுத்தி, கடன் பொங்குவதைக் குறைக்கிறது. பணவாட்ட சூழ்நிலையில், ரெப்போ விகிதம் குறைக்கப்பட்டு கடன் வழங்குதல் அதிகரிக்கும். 

மீள் ரெப்போ விகிதம் (RRR): 

  • வணிக வங்கிகளிடமிருந்து வாங்கும் கடனுக்கான இந்திய ரிசர்வ் வங்கி கொடுக்க விரும்பும் வட்டி விகிதமே மீள் ரெப்போ விகிதம் எனப்படுகிறது.
  • மீள் ரெப்போ விகிதத்தை உயர்த்தினால் அது வணிக வங்கிகளுக்கு இலாபகரமான வட்டி விகிதமாகி அவைகளிடம் உள்ள பணத்தை ரிசர்வ் வங்கியிடம் கொண்டு வந்து சேர்க்கிறது. 
  • இதனால் அந்த பணத்திற்கு உயர் பாதுகாப்பு கிடைக்கிறது. இதனால் வணிக வங்கிகள் தனது வாடிக்கையாளருக்கு கடன் கொடுப்பது குறைகிறது. 
  • இது இயற்கையாகவே வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் கடனுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தும்.
  • பணத்தின் அளிப்பைக் கட்டுப்படுத்த இந்திய ரிசர்வ் வங்கியால் மேற்கொள்ளப்படும் கருவிகளே ரெப்போ விகிதம் மற்றும் மீள்ரெப்போ விகிதங்களாகும். எப்பொழுதும் விட அதிகமாகவே இருக்கும்.

 

 

**************************************************************************

Tamilnadu mega pack
Tamilnadu mega pack
இது போன்ற தேர்விற்கான தகவல் மற்றும் பாடக்குறிப்புகளை பெற ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்
Adda247 TamilNadu Home page Click here
Official Website=Adda247 Click here