Tamil govt jobs   »   Latest Post   »   TNPSC பொருளாதார இலவச குறிப்புகள் - வரியின்...
Top Performing

TNPSC பொருளாதார இலவச குறிப்புகள் – வரியின் வகைகள்

இந்தக் கட்டுரையில், TNPSC குரூப் 1, குரூப் 2, குரூப் 2A, குரூப் 4 மாநிலப் போட்டித் தேர்வுகளான TNUSRB, TRB, TET, TNEB போன்றவற்றுக்கான  முறைகள் இலவசக் குறிப்புகளைப் பெறுவீர்கள்.தேர்வுக்கு தயாராவோர் இங்குள்ள பாடக்குறிப்புகளை படித்து பயன்பெற வாழ்த்துகிறோம்.

வரியின் வகைகள்

நேர்முக வரி:

  • நேர்முக வரி என்பது நபரின் வருமானம் மற்றும் செல்வம் மீது விதிக்கப்பட்டு அரசுக்கு நேரடியாக செலுத்தக் கூடியதாகும்.
  • அவ்வரியின் சுமையை பிறருக்கு மாற்ற இயலாது. 
  • வரி வளர்வீத தன்மை கொண்டது. 
  • ஒரு நபரின் செலுத்தும் திறனுக்கு ஏற்றவாறு வரி விதிக்கப்படும். அதாவது பணக்காரர்களிடமிருந்து அதிகமான வரியும் மற்றும் ஏழை மக்களிடமிருந்து குறைவான வரியும் வசூலிக்கப்படும். 
  • நேரடி வரி சார்ந்த திட்டங்கள் மற்றும் கொள்கைகளை இந்திய அரசு நிதி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் நேர்முக வரி வரியாத்தால் பரிந்துரை செய்யப்படுகிறது. 

நேர்முக வரிகளின் நன்மைகள்:

  • சமத்துவம்:
  • நேர்முக வரிகள் வளர்வீதம் கொண்டவை, அதாவது வரி அடிப்படையைப் பொறுத்து வரிவீதம் மாறும். 
  • எடுத்துக்காட்டாக வருமான வரி சமத்துவ விதி அடிப்படையில் அமைந்துள்ளது.
  • நிச்சயத்தன்மை:
  • நேர்முக வரி நிச்சயத்தன்மை விதியை உறுதி செய்கிறது. 
  • உதாரணமாக வருமான வரி செலுத்துபவர் எங்கு எப்பொமுது எவ்வளவு வரியை செலுத்த வேண்டும் என அறிந்துள்ளார்.
  • நெகிழும்தன்மை:
  • நேர்முக வரிகள் நெகிழும்தன்மை திருப்தி செய்கிறது. 
  • வருமான வரியானது வருமானத்தின் நெகிழ்ச்சியைப் பொருத்து அமையும். 
  • வருமான மட்டம் உயரும் போது அரசிற்கான வரிவருவாயும் உயரும்.
  • சிக்கனம்:
  • நேர்முக வரிகளை வசூலிப்பதற்காக செலவு மற்ற வரிகளை ஒப்பிடுகையில் குறைவாகும். 
  • ஏனெனில் வரி செலுத்துபவர்கள் நேரடியாக அரசிற்கு வரி செலுத்துகின்றனர். 

நேர்முக வரிகளின் தீமைகள்:

  • பிரபலமின்மை:
  • நேர்முக வரி பிரபலமில்லாமல் உள்ளது. 
  • மேலும் இது வசதிக் குறைவானதாகவும் நெகிழ்ச்சி குறைவானதாகவும் உள்ளது. 

  • உற்பத்தித்திறன் பாதிக்கப்படுகிறது:
  • பல்வேறு பொருளாதார வல்லுனர்கள் கருத்துப்படி நேர்முக வரி உற்பத்தித்திறனை பாதிக்கிறது.
  • குடிமக்கள் அதிக வரித் தொகையை செலுத்த வேண்டியதால் வருமானம் அதிகம் ஈட்ட வேண்டும் என்ற விருப்பம் இல்லாமல் உள்ளனர். 
  • வசதிகுறைவு:

கணக்கு பராமரித்தல் மற்றும் வரி தாக்கல் செய்வதிலும் மொத்தமாக வரி செலுத்துதல் போன்றவற்றிலும் வரி செலுத்துபவருக்கு வசதி குறைவாக உள்ளது

  • வரி ஏய்த்தல்:
  • நேர்முக வரியின் சுமை அதிகமாக இருப்பதால் வரி செலுத்துபவர்கள் வரியை ஏய்பதற்கு முயல்கின்றனர். 
  • இது கருப்புப் பணம் உருவாவதற்கு வாய்ப்பாவதால் அது பொருளாதாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. 

 

மறைமுக வரி:

  • மறைமுக வரி எனப்படுவது பொருட்களையோ அல்லது பணிகளையோ வாங்கும் நபர் மீது விதிக்கப்படுகிற வரியாகும். மேலும், இது அரசுக்கு மறைமுகமாக செலுத்தப்படுகிறது 
  • இவ்வரிச்சுமை எளிதாக மற்றொரு நபர் மீது மாற்ற முடியும். 
  • ஏழை அல்லது பணக்காரர் என யாராக இருந்தாலும் அந்நபர்கள் மீது சமமாக சுமத்தப்படும். 

பல்வேறு மறைமுக வரிகள் உள்ளன அவை: 

  • உற்பத்தி வரி: உற்பத்தியாளர் வரியை செலுத்தினாலும் பளுவை மொத்த அல்லது சில்லறை விற்பனையாளரிடம் மாற்றிவிடுவார்.
  • விற்பனை வரி: கடை உரிமையாளர் அல்லது சில்லறை விற்பனையாளர்கள் முதலில் செலுத்தப்பட்டு வரிச்சுமையை பண்டங்கள் மற்றும் பணிகளுக்கான விற்பனை வரியுடன் நுகர்வோர்களுக்கு மாற்றப்படுதல் ஆகும்.  
  • சுங்கத் தீர்வை: வெளிநாடுகளிலிருந்து பெறக்கூடிய பொருட்களுக்கு இறக்குமதி தீர்வை செலுத்தப்படும். ஆனால் இதனை இறுதியாக நுகர்வோர்கள் மற்றும் சில்லரை வர்த்தகர்கள் மீது மாற்றப்படும். 
  • கேளிக்கை வரி: திரையரங்கு உரிமையாளர் மீது உள்ள பொறுப்பை திரைப்படம் காண வருபவர்கள் மீது மாற்றுகின்ற வரியாகும். 
  • சேவை வரி: தொலைபேசி காப்பீட்டு உணவு விடுதி போன்ற சேவைகளுக்காக செலுத்தக்கூடிய கட்டணங்களாகும்.

மறைமுக வரிகளின் நன்மைகள்:

பரந்து காணப்படுதல்:

  • எல்லா நுகர்வோர்களும் அவர்கள் ஏழை அல்லது பணக்காரர்களாக இருந்தாலும் மறைமுக வரிகளை செலுத்த வேண்டும். இதனால்தான் நேர்முகவரிகளை விட மறைமுக வரிகள் அதிக நபர்களை உள்ளடக்கியுள்ளது.
  • எடுத்துக்காட்டாக, இந்தியாவில் 2 சதவீத நபர்கள் மட்டுமே வருமான வரி செலுத்துகிற நிலையில் மறைமுக வரியை அனைவரும் செலுத்துகின்றனர். 

 

சமத்துவம்:

பணக்காரர்களால் பயன்படுத்தப்படக் கூடிய ஆடம்பர பொருட்கள் மீது அதிக வரி சுமத்தப்படுவதால் மறைமுக வரி சமத்துவ விதியின் அடிப்படையில் அமைகிறது

சிக்கனத் தன்மை 

  • உற்பத்தியாளர்களும் சில்லறை விற்பனையாளர்களும் வரியை வசூலித்து அரசுக்கு செலுத்துவதால் வசூலிப்பதற்கான செலவு குறைவானது. 
  • வணிகர்கள் மதிப்புமிக்க வரி வசூலிப்பவர்களாக செயலாற்றுகின்றனர்.

உடலுக்கு தீங்கான பொருட்களின் நுகர்வை குறைக்கிறது:

அரசனது உடலுக்கு தீங்கு விளைவிக்க கூடிய பொருட்கள் மீது மறைமுக வரியை விதிக்கிறது எடுத்துக்காட்டாக, புகையிலை மது போன்ற பொருட்கள் மீதான வரி. இது பாவ வரி என அழைக்கப்படுகிறது 

வசதியானது:

  • மறைமுக வரியானது பண்டங்கள் மற்றும் பணிகள் மீது விதிக்கப்படுகிறது. 
  • நுகர்வோர் பொருட்களை வாங்கும்போது விலையுடன் சேர்த்து செலுத்திவிடுவதால் வரி செலுத்துவதை உணர்வதில்லை. 

மறைமுக வரியின் தீமைகள்:

வசூலிக்கும் செலவு அதிகம்

  • நேர்முக வரியை ஒப்பிடும் போது மறைமுக வரிகள் வசூலிக்க ஆகும் செலவு அதிகமாகும். 
  • அரசு பெரும் தொகையை மறைமுக வரி வசூலிக்காக செலவு செய்கிறது. 

நெகிழ்ச்சியற்ற தன்மை:

  • நேர்முக வரிகளை ஒப்பிடும் போது மறைமுக வரிகள் குறைவான நெகிழ்ச்சி தன்மை கொண்டதாகும். 
  • மறைமுக வரிகள் எப்போதும் சமமான விகிதாச்சார வீதத்தில் அமையும். 

 

தேய்வீதம்:

  • மறைமுக வரிகள் சில நேரங்களில் நீதியற்ற மற்றும் தேய்வீக தன்மை கொண்டதாகும். 
  • வருமான மட்டத்திற்கு அப்பாற்ப்பட்டு ஏழை மற்றும் பணக்காரர்கள் ஆகிய இருவரும் ஒரே மறைமுக வரித் தொகையைச் செலுத்த வேண்டும். 

உறுதியின்மை:

  • மறைமுக வரிகள் உயரும் போது விலை உயர்வதால் பொருட்களுக்கான தேவையை குறைக்கிறது. 
  • ஆகையால் அரசு எதிர்பார்க்கக்கூடிய வருவாய் வசூல் பற்றி உறுதியற்று காணப்படுகிறது. 
  • எனவே, டால்டன் 2+2 என்பது 4 அல்ல அது 3 அல்லது அதற்கும் குறைவாக இருக்கும் என மறைமுக வரியைக் குறிப்பிடுகிறார். 

குடிமை உணர்வின்மை:

விலையுடன் வரி மறைந்திருப்பதால் நுகர்வோர்கள் வரி செலுத்துவது பற்றி விழிப்புணர்வு பெற்றிருக்கவில்லை.

 

**************************************************************************

Tamilnadu mega pack
Tamilnadu mega pack
இது போன்ற தேர்விற்கான தகவல் மற்றும் பாடக்குறிப்புகளை பெற ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்
Adda247 TamilNadu Home page Click here
Official Website=Adda247 Click here
TNPSC பொருளாதார இலவச குறிப்புகள் - வரியின் வகைகள்_4.1