Tamil govt jobs   »   TNPSC Executive Officer Syllabus 2022   »   TNPSC Executive Officer Syllabus 2022
Top Performing

TNPSC Executive Officer Syllabus 2022, Grade 3 Syllabus PDF | TNPSC நிர்வாக அதிகாரி பாடத்திட்டம் 2022, கிரேடு 3 பாடத்திட்டம் PDF

Table of Contents

TNPSC Executive Officer Syllabus 2022: Tamilnadu Public Service Commission release the TNPSC Executive Officer Notification 2022 to recruit Executive Officer, Grade-III included in Group-VII-B Services. This TNPSC Executive Officer Notification 2022 will be available on the official website from 19.05.2022 to 17.06.2022. All the applied candidates can check the TNPSC Executive Officer Syllabus 2022 through www.tnpsc.gov.in. Aspirants must and should download the Tamil Nadu Executive Officer Syllabus 2022 in Tamil PDF that is necessary for the candidates who want to write the exam well.

Fill the Form and Get All The Latest Job Alerts

TNPSC Executive Officer, Grade-3 (Group-7B) Overview | கண்ணோட்டம்:

தமிழ்நாடு இந்து சமய மற்றும் அறநிலையச் சட்டம் -1959 (தமிழ்நாடு சட்டம் 22 1959) பிரிவு 10-ன் படி இந்து மதத்தை அறிவிக்கும் நபர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.

Adda247 Tamil

TNPSC Executive Officer Syllabus 2022

TNPSC Executive Officer 2022 Syllabus: எக்சிகியூட்டிவ் ஆபீசர் கிரேடு-III – குரூப் 7 B தேர்வுக்கான பாடத்திட்டத்தை ஆணையம், எக்சிகியூட்டிவ் ஆபீசர் கிரேடு-III – குரூப் 7 B தேர்வுக்கான பாடத்திட்டத்தை பின்வரும் லிங்கை க்ளிக் செய்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

Click here to Download TNPSC Executive Officer Notification 2022 Syllabus

TNPSC Executive Officer, Grade-3 (Group-7B) Syllabus | பாடத்திட்டம்

Paper-I- Part-A – கட்டாயத் தமிழ் மொழித் தகுதி மற்றும் மதிப்பீட்டுத் தேர்வு

 பகுதி-அ

இலக்கணம்

  1. பொருத்துதல் – பொருத்தமான பொருளைத் தேர்வு செய்தல், புகழ் பெற்ற நூல், நூலாசிரியர்.
  2. தொடரும் தொடர்பும் அறிதல் (i) இத்தொடரால் குறிக்கப்படும் சான்றோர் (i) அடைமொழியால் குறிக்கப்படும் நூல்.
  3. பிரித்தெழுதுக.
  4. எதிர்ச்சொல்லை எடுத்தெழுதுதல்.
  5. பொருந்தாச் சொல்லைக் கண்டறிதல்.
  6. பிழைதிருத்தம் சந்திப்பிழையை நீக்குதல், ஒருமை பன்மை பிழைகளை நீக்குதல், மரபுப் பிழைகள், வழூஉச் சொற்களை நீக்குதல், பிறமொழிச் சொற்களை நீக்குதல்.
  7. ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை அறிதல்.
  8. ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளை அறிதல்.
  9. ஓரெழுத்து ஒரு மொழி உரிய பொருளைக் கண்டறிதல்.
  10. வேர்ச்சொல்லைத் தேர்வு செய்தல்.
  11. வேர்ச்சொல்லைக் கொடுத்து, வினைமுற்று, வினையெச்சம், வினையாலணையும் பெயர், தொழிற்பெயரை உருவாக்கல்.
  12. அகர வரிசைப்படி சொற்களைச் சீர்செய்தல்.
  13. சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடர் ஆக்குதல்.
  14. பெயர்ச் சொல்லின் வகை அறிதல்.
  15. இலக்கணக் குறிப்பறிதல்.
  16. விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுத்தல்.
  17. எவ்வகை வாக்கியம் எனக் கண்டெழுதுதல்.
  18. தன்வினை, பிறவினை, செய்வினை, செயப்பாட்டுவினை வாக்கியங்களைக் கண்டெழுதுதல்.
  19. உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெழுதுதல்.
  20. எதுகை, மோனை, இயைபு இவற்றுள் ஏதேனும் ஒன்றை தேர்ந்தெழுதுதல்.
  21. பழமொழிகள்.

பகுதி-ஆ

இலக்கியம்

1.திருக்குறள் தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், தொடரை நிரப்புதல் (இருபத்தைந்து அதிகாரம் மட்டும்) அன்பு, பண்பு, கல்வி, கேள்வி, அறிவு, அடக்கம், ஒழுக்கம், பொறை, நட்பு, வாய்மை, காலம், வலி, ஒப்புரவறிதல், செய்நன்றி, சான்றாண்மை, பெரியாரைத் துணைக் கோடல், பொருள்செயல்வகை, வினைத்திட்பம், இனியவை கூறல், ஊக்கமுடைமை, ஈகை, தெரிந்து செயல்வகை, இன்னா செய்யாமை, கூடா நட்பு, உழவு.

2.அறநூல்கள் – நாலடியார், நான்மணிக்கடிகை, பழமொழி நானூறு, முதுமொழிக் காஞ்சி, திரிகடுகம், இன்னா நாற்பது, இனியவை நாற்பது, சிறுபஞ்சமூலம், ஏலாதி, ஔவையார் பாடல்கள் தொடர்பான செய்திகள், பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் பிற செய்திகள்.

3.கம்பராமாயணம், இராவண காவியம் தொடர்பான செய்திகள், பாவகை, சிறந்த தொடர்கள்.

4.புறநானூறு, அகநானூறு, நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், அடிவரையறை, எட்டுத்தொகை, பத்துப்பாட்டு நூல்களில் உள்ள பிற செய்திகள்.

5.சிலப்பதிகாரம்-மணிமேகலை தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், சிறந்த தொடர்கள், உட்பிரிவுகள் மற்றும் ஐம்பெரும்-ஐஞ்சிறுங் காப்பியங்கள் தொடர்பான செய்திகள்.

6.பெரியபுராணம் – நாலாயிர திவ்வியப்பிரபந்தம் – திருவிளையாடற் புராணம் – தேம்பாவணி – சீறாப்புராணம் தொடர்பான செய்திகள்.

7.சிற்றிலக்கியங்கள்: திருக்குற்றாலக்குறவஞ்சி – கலிங்கத்துப்பரணி – முத்தொள்ளாயிரம், தமிழ்விடு தூது – நந்திக்கலம்பகம் – முக்கூடற்பள்ளு – காவடிச்சிந்து முத்துக்குமாரசாமி பிள்ளைத் தமிழ் – இராஜராஜ சோழன் உலா தொடர்பான செய்திகள்.

8.மனோன்மணியம் பாஞ்சாலி சபதம் – குயில் பாட்டு இரட்டுற மொழிதல் (காளமேகப் புலவர்) – அழகிய சொக்கநாதர் தொடர்பான செய்திகள்.

9.நாட்டுப்புறப் பாட்டு – சித்தர் பாடல்கள் தொடர்பான செய்திகள்.

10.சமய முன்னோடிகள் – அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர், திருமூலர், குலசேகர ஆழ்வார், ஆண்டாள், சீத்தலைச் சாத்தனார், எச்.ஏ.கிருட்டிணனார், உமறுப்புலவர் தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், சிறப்புப் பெயர்கள்.

பகுதி-இ

தமிழ் அறிஞர்களும், தமிழ்த் தொண்டும்

  1. பாரதியார், பாரதிதாசன், நாமக்கல் கவிஞர், கவிமணி தேசிக விநாயகனார் தொடர்பான செய்திகள், சிறந்த தொடர்கள், சிறப்புப் பெயர்கள்.
  2. மரபுக் கவிதை – முடியரசன், வாணிதாசன், சுரதா, கண்ணதாசன், உடுமலை நாராயண கவி, பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், மருதகாசி தொடர்பான செய்திகள், அடைமொழிப் பெயர்கள்.
  3. புதுக்கவிதை – ந.பிச்சமூர்த்தி, சி.சு.செல்லப்பா, தருமு சிவராமு, பசுவய்யா, இரா.மீனாட்சி, சி.மணி, சிற்பி, மு.மேத்தா, ஈரோடு தமிழன்பன், அப்துல்ரகுமான், கலாப்ரியா, கல்யாண்ஜி, ஞானக்கூத்தன் – தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், சிறப்புத் தொடர்கள் மற்றும் எழுதிய நூல்கள்.
  4. தமிழில் கடித இலக்கியம் – நாட்குறிப்பு, ஜவகர்லால் நேரு, மகாத்மா காந்தி, மு.வரதராசனார், பேரறிஞர் அண்ணா தொடர்பான செய்திகள். 
  5. நிகழ்கலை (நாட்டுப்புறக் கலைகள்) தொடர்பான செய்திகள்.
  6. தமிழில் சிறுகதைகள் தலைப்பு – ஆசிரியர் பொருத்துதல்.
  7. கலைகள் – சிற்பம் – ஓவியம் – பேச்சு – திரைப்படக்கலை தொடர்பான செய்திகள்.
  8. தமிழின் தொன்மை – தமிழ்மொழியின் சிறப்பு, திராவிட மொழிகள் தொடர்பான செய்திகள்.
  9. உரைநடை மறைமலை அடிகள், பரிதிமாற்கலைஞர், ந.மு.வேங்கடசாமி நாட்டார், ரா.பி.சேது, திரு.வி.கல்யாண சுந்தரனார், வையாபுரி, பேரா.தனிநாயகம் அடிகள், செய்குதம்பி பாவலர் – மொழி நடை தொடர்பான செய்திகள்.
  10. உ.வே.சாமிநாதர், தெ.பொ.மீனாட்சி சுந்தரனார், சி.இலக்குவனார் தமிழ்ப்பணி தொடர்பான செய்திகள்.
  11. தேவநேயப்பாவாணர்-அகரமுதலி, பாவலரேறு பெருஞ்சித்திரனார், தமிழ்த்தொண்டு தொடர்பான செய்திகள்.
  12. ஜி.யு.போப் – வீரமாமுனிவர் தமிழ்த்தொண்டு சிறப்புத் தொடர்கள்.
  13. தந்தை பெரியார் – பேரறிஞர் அண்ணா – முத்துராமலிங்கர் – அம்பேத்கர் காமராசர் – .பொ.சிவஞானம் – காயிதேமில்லத் – சமுதாயத் தொண்டு.
  14. தமிழகம்-ஊரும் பேரும், தோற்றம் மாற்றம் பற்றிய செய்திகள்
  15. உலகளாவிய தமிழர்கள் சிறப்பும் – பெருமையும் – தமிழ்ப் பணியும்.
  16. தமிழ்மொழியின் அறிவியல் சிந்தனைகள் தொடர்பான செய்திகள்
  17. தமிழ் மகளிரின் சிறப்பு – மூவலூர் ராமாமிர்தம்மாள், டாக்டர் முத்துலட்சுமி அம்மையார், வேலு நாச்சியார் மற்றும் சாதனை மகளிர் விடுதலைப் போராட்டத்தில் மகளிர் பங்கு – தில்லையாடி வள்ளியம்மை, ராணி மங்கம்மாள், அன்னி பெசன்ட் அம்மையார்.

18.தமிழர் வணிகம் – தொல்லியல் ஆய்வுகள் கடற் பயணங்கள் தொடர்பான செய்திகள்.

19.உணவே மருந்து – நோய் தீர்க்கும் மூலிகைகள் தொடர்பான செய்திகள்.

20.சமயப் பொதுமை உணர்த்திய தாயுமானவர், இராமலிங்க அடிகளார், திரு.வி.கல்யாண சுந்தரனார் தொடர்பான செய்திகள் – மேற்கோள்கள்.

  1. நூலகம் பற்றிய செய்திகள்.

Executive Officer Grade – III ( Group VII- B Services)

Paper-I- Part-B: General Studies

(Degree Standard) (Code No. 003)

Topics for Objective Type

UNIT-I; GENERAL SCIENCE

(i) Scientific Knowledge and Scientific Temper – Power of Reasoning -Rote Learning vs Conceptual Learning – Science as a tool to understand the past, present and future.

(ii) Nature of Universe – General Scientific Laws – Mechanics Properties of Matter, Force, Motion and Energy Everyday application of the Basic Principles of Mechanics, Electricity and Magnetism, Light, Sound, Heat, Nuclear Physics, Laser, Electronics and Communications.

(iii) Elements and Compounds, Acids, Bases, Salts, Petroleum Products, Fertilisers, Pesticides.

(iv) Main concepts of Life Science, Classification of Living Organisms,Evolution,Genetics, Physiology, Nutrition, Health and Hygiene, Human Diseases.

(v) Environment and Ecology.

UNIT-II: CURRENT EVENTS

(i) History – Latest diary of events – National symbols – Profile of States Eminent personalities and places in news- Sports – Books and authors.

(ii) Polity- Political parties and political system in India – Public awareness and General administration – Welfare oriented Government schemes and their utility, Problems in Public Delivery Systems.- Geographical landmarks.

(iii) Geography

(iv) Economics – Current socio – Economic Issues

(V) Science – Latest inventions in Science and Technology.

(vi) Prominent Personalities in various spheres – Arts, Science, Literature and Philosophy.

UNIT-III: GEOGRAPHY OF INDIA

(i) Location – Physical features – Monsoon, Rainfall, Weather and Climate-Water Resources – Rivers in India – Soil, Minerals and Natural Resources – Forest and Wildlife – Agricultural pattern.

(ii) Transport – Communication.

(iii) Social Geography – Population density and distribution – Racial, Linguistic Groups and Major Tribes.

(iv) Natural calamity – Disaster Management – Environmental pollution : Reasons and preventive measures – Climate change – Green energy.

UNIT-IV: HISTORY AND CULTURE OF INDIA

(i) Indus Valley Civilization – Guptas, Delhi Sultans, Mughals and Marathas – Age of Vijayanagaram and Bahmani Kingdoms – South Indian History.

(ii) Change and Continuity in the Socio-Cultural History of India.

(iii) Characteristics of Indian Culture, Unity in Diversity – Race, Language, Custom.

(iv) India as a Secular State, Social Harmony.

UNIT-V: INDIAN POLITY

(i) Constitution of India – Preamble to the Constitution – Salient features of the Constitution – Union, State and Union Territory.

(ii) Citizenship, Fundamental Rights, Fundamental Duties, Directive Principles of State Policy.

(iii) Union Executive, Union Legislature State Executive, State Legislature – Local Governments, Panchayat Raj.

(iv) Spirit of Federalism: Centre – State Relationships.

(v) Election Judiciary in India – Rule of Law.

(vi)  Corruption in Public Life – Anti-corruption measures – Lokpal and Lok Ayukta – Right to Information Empowerment of Women – Consumer Protection Forums, Human Rights Charter.

UNIT-VI: INDIAN ECONOMY

(i) Nature of Indian Economy – Five year plan models –an assessment – Planning Commission and Niti Ayog.

(ii) Sources of revenue – Reserve Bank of India – Fiscal Policy and Monetary Policy – Finance Commission – Resource sharing between Union and State Governments – Goods and Services Tax.

(iii) Structure of Indian Economy and Employment Generation, Land Reforms and Agriculture – Application of Science and Technology in Agriculture – Industrial growth – Rural Welfare Oriented Programmes – Social Problems – Population, Education, Health, Employment, Poverty.

UNIT-VII: INDIAN NATIONAL MOVEMENT

(i) National Renaissance – Early uprising against British rule – Indian National Congress – Emergence of leaders – B.R.Ambedkar, Bhagat Singh, Bharathiar, V.O.Chidambaranar, Jawaharlal Nehru, Kamarajar, Mahatma Gandhi, Maulana Abul Kalam Azad, Thanthai Periyar, Rajaji, Subash Chandra Bose, Rabindranath Tagore and  others.

(ii) Different modes of Agitation: Growth of Satyagraha and Militant Movements.

(iii) Communalism and Partition.

UNIT-VIII: History, Culture, Heritage and Socio – Political Movements in Tamil Nadu

(i) History of Tamil Society, related Archaeological discoveries, Tamil Literature from Sangam Age till contemporary times.

(ii) Thirukkural: 

(a) Significance as a Secular Literature

(b) Relevance to Everyday Life

(c) Impact of Thirukkural on Humanity

(d) Thirukkural and Universal Values – Equality, Humanism, etc

(e) Relevance to Socio – Politico – Economic affairs

(f) Philosophical content in Thirukkural

(iii) Role of Tamil Nadu in freedom struggle – Early agitations against British Rule – Role of women in freedom struggle.

(iv) Evolution of 19th and 20th Century Socio-Political Movements in Tamil Nadu – Justice Party, Growth of Rationalism – Self Respect Movement, Dravidian Movement and Principles underlying both these Movements, Contributions of Thanthai Periyar and Perarignar Anna.

UNIT-IX: Development Administration in Tamil Nadu

(i) Human Development Indicators in Tamil Nadu and a comparative assessment across the Country – Impact of Social Reform Movements in the Socio-Economic Development of Tamil Nadu.

(ii) Political parties and Welfare schemes for various sections of people- Rationale behind Reservation Policy and access to Social Resources – Economic trends in Tamil Nadu – Role and impact of social welfare schemes in the Socio Economic Development of Tamil Nadu.

(iii) Social Justice and Social Harmony as the Cornerstones of Socio- Economic Development.

(iv) Education and Health Systems in Tamil Nadu.

(v) Geography of Tamil Nadu and its impact on Economic growth.

(vi) Achievements of Tamil Nadu in various fields.

(vii) e-Governance in Tamil Nadu.

UNIT-X: APTITUDE AND MENTAL ABILITY

(i) Simplification – Percentage -Highest Common Factor (HCF) – Lowest Common Multiple (LCM).

(ii) Ratio and Proportion. 

(iii) Simple interest – Compound interest – Area – Volume – Time and Work.

(iv) Logical Reasoning Puzzles-Dice – Visual Reasoning Alpha numeric Reasoning – Number Series.

 

Executive Officer Grade – TII ( Group VII- B Services)

Paper-I- Part-B: General Studies

(Degree Standard) (Code No. 003)

கொள்குறி வகைகளுக்கான தலைப்புகள்

அலகு-I: பொது அறிவியல்

(i) அறிவியல் அறிவு மற்றும் அறிவியல் உணர்வு – பகுத்தறிதல் பொருள் உணராமல் கற்றலும் கருத்துணர்ந்து கற்றலும் – கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் பற்றி புரிந்து கொள்வதற்கான ஒரு கருவி அறிவியல்.

(ii) பேரண்டத்தின் இயல்பு பொது அறிவியல் விதிகள் இயக்கவியல் பருப்பொருளின் பண்புகள், விசை, இயக்கம் மற்றும் ஆற்றல் – அன்றாட வாழ்வில் இயக்கவியல், மின்னியல், காந்தவியல், ஒளி, ஒலி, வெப்பம், அணுக்கரு இயற்பியல், லேசர் (LASER), மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பியல் ஆகியவற்றின் அடிப்படை கோட்பாடுகளின் பயன்பாடுகள்.

(iii) தனிமங்களும் சேர்மங்களும், அமிலங்கள், காரங்கள், உப்புகள்,

(iv) உயிரியலின் முக்கியகோட்பாடுகள், உயிர் உலகின் வகைப்பாடு, பரிணாமம், மரபியல், உடலியங்கியல், உணவியல், உடல் நலம் மற்றும் சுகாதாரம், மனிதநோய்கள். பெட்ரோலிய பொருட்கள், உரங்கள், பூச்சிகொல்லிகள்.

(v) சுற்றுப்புறச்சூழல் மற்றும் சூழலியல்.

அலகு-II: நடப்பு நிகழ்வுகள்

(i) வரலாறு அண்மை நிகழ்வுகளின் தொகுப்பு தேசியச் சின்னங்கள் மாநிலங்கள் குறித்த விவரங்கள் செய்திகளில் இடம்பெற்ற சிறந்த ஆளுமைகளும் இடங்களும் விளையாட்டு – நூல்களும் ஆசிரியர்களும்.

(ii) ஆட்சியியல் – இந்தியாவில் அரசியல் கட்சிகளும் ஆட்சியியல் முறைமைகளும் பொது விழிப்புணர்வும் (Public Awareness) பொது நிர்வாகமும்-நலன்சார் அரசுத் திட்டங்களும் அவற்றின் பயன்பாடும், பொது விநியோக அமைப்புகளில் நிலவும் சிக்கல்கள்.

(iii) புவியியல் – புவியியல் அடையாளங்கள்.

(iv) பொருளாதாரம் – தற்போதைய சமூக பொருளாதார பிரச்சினைகள் .

(v) அறிவியல் -அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் அண்மைக்கால கண்டுபிடிப்புகள்.

(vi) கலை, அறிவியல், இலக்கியம் மற்றும் தத்துவம் ஆகிய வெவ்வேறு துறைகளில்  தனித்துவம் கொண்ட ஆளுமைகள்.

 

அலகு-III: இந்தியாவின் புவியியல்

(i) அமைவிடம் – இயற்கைஅமைவுகள் – பருவமழை, மழைப்பொழிவு, வானிலை மற்றும் காலநிலை – நீர் வளங்கள் – இந்திய ஆறுகள் – மண், கனிம வளங்கள் மற்றும் இயற்கை வளங்கள் – காடு மற்றும் வன உயிரினங்கள் – வேளாண  முறைகள்.

(ii) போக்குவரத்து – தகவல் தொடர்பு.

(iii) சமூகப் புவியியல் – மக்கள் தொகை அடர்த்தி மற்றும் பரவல் – இனம், மொழிக் குழுக்கள் மற்றும் முக்கியப் பழங்குடிகள்.

(iv) இயற்கைப் பேரிடர் – பேரிடர் மேலாண்மை – சுற்றுச்சூழல் மாசுபடுதல்:காரணங்களும் தடுப்பு முறைகளும் – பருவநிலை மாற்றம் – பசுமை ஆற்றல்.

அலகு-IV: இந்தியாவின் வரலாறும் பண்பாடும்

(i) சிந்து சமவெளி நாகரிகம் குப்தர்கள், தில்லி சுல்தான்கள், முகலாயர்கள் மற்றும் மராத்தியர்கள் – விஜயநகர மற்றும் பாமினி அரசுகளின் காலம் தென் இந்திய வரலாறு.

(ii) இந்திய சமூகப் பண்பாட்டு வரலாற்றில் மாற்றங்களும் தொடர்ச்சியும்.

(iii) இந்தியப் பண்பாட்டின் இயல்புகள், வேற்றுமையில் ஒற்றுமை – இனம், மொழி, வழக்காறு.

(iv) இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு, சமூக நல்லிணக்கம்.

அலகு-V: இந்திய ஆட்சியியல்

(i) இந்திய அரசியலமைப்பு அரசியலமைப்பின் முகவுரை – அரசியலமைப்பின் முக்கிய கூறுகள் – ஒன்றியம், மாநிலம் மற்றும் யூனியன் பிரேதசங்கள்.

(ii) குடியுரிமை, அடிப்படை உரிமைகள், அடிப்படைக் கடமைகள், அரசின் நெறிமுறைக் கோட்பாடுகள்.

(iii) ஒன்றிய நிர்வாகம், ஒன்றிய நாடாளுமன்றம் மாநில நிர்வாகம், மாநில சட்டமன்றம் – உள்ளாட்சி அமைப்புகள், பஞ்சாயத்து ராஜ்.

(iv) கூட்டாட்சியின் அடிப்படைத் தன்மைகள்: மத்திய – மாநில உறவுகள்.

(v) தேர்தல் – இந்திய நீதி அமைப்புகள் – சட்டத்தின் ஆட்சி.

(vi) பொதுவாழ்வில் ஊழல் – ஊழல் தடுப்பு நடவடிக்கைகள் – லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா – தகவல் உரிமை பெண்களுக்கு அதிகாரமளித்தல் நுகர்வோர் பாதுகாப்பு அமைப்புகள் – மனித உரிமைகள் சாசனம்.

அலகு-VI: இந்தியப் பொருளாதாரம்

(i) இந்தியப் பொருளாதாரத்தின் இயல்புகள் – ஐந்தாண்டு திட்ட மாதிரிகள் – ஒரு மதிப்பீடு திட்டக்குழு மற்றும் நிதி ஆயோக்.

(ii) வருவாய் ஆதாரங்கள் – இந்திய ரிசர்வ் வங்கி – நிதி கொள்கை மற்றும் பணவியல் கொள்கை நிதி ஆணையம் மத்திய மாநில அரசுகளுக்கிடையேயான நிதிப் பகிர்வு – சரக்கு மற்றும் சேவை வரி. 

(iii) இந்திய பொருளாதார அமைப்பு மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கம், நிலச் சீர்திருத்தங்கள் மற்றும் வேளாண்மை – வேளாண்மையில் அறிவியல் தொழில்நுட்பத்தின் பயன்பாடு திட்டங்கள் – சமூகப் தொழில் வளர்ச்சி – ஊரக நலன்சார் பிரச்சினைகள் மக்கள் தொகை, கல்வி, நலவாழ்வு, வேலைவாய்ப்பு, வறுமை.

அலகு-VII: இந்திய தேசிய இயக்கம்

(i) தேசிய மறுமலர்ச்சி – ஆங்கிலேயர் இந்திய தேசிய காங்கிரஸ் ஆட்சிக்கு எதிரான தொடக்க கால தலைவர்கள் உருவாதல் எழுச்சிகள் காமராசர், மகாத்மா காந்தி, பெரியார், இராஜாஜி, சுபாஷ் போராட்டத்தின் பல்வேறு நிலைகள்: அகிம்சை முறையின் பி.ஆர்.அம்பேத்கர், பகத்சிங், பாரதியார், வ.உ.சிதம்பரனார், ஜவகர்லால் நேரு, மௌலானா அபுல் கலாம் ஆசாத், தந்தை சந்திர போஸ், ரவீந்திரநாத் தாகூர் மற்றும் பலர். 

(ii) விடுதலைப் வளர்ச்சி மற்றும் புரட்சிகர இயக்கங்கள். 

(iii) வகுப்புவாதம் மற்றும் தேசப்பிரிவினை.

அலகு-VIII: தமிழ்நாட்டின் வரலாறு, மரபு, பண்பாடு மற்றும் சமூக – அரசியல்

இயக்கங்கள்

(i) தமிழ் சமுதாய வரலாறு, அது தொடர்பான தொல்லியல் கண்டுபிடிப்புகள், சங்க காலம் முதல் இக்காலம் வரையிலான தமிழ் இலக்கிய வரலாறு.

(ii)  திருக்குறள்:

அ) மதச் சார்பற்ற தனித்தன்மையுள்ள இலக்கியம்.

ஆ) அன்றாட வாழ்வியலோடு தொடர்புத் தன்மை

இ) மானுடத்தின் மீதான திருக்குறளின் தாக்கம்

ஈ) திருக்குறளும் மாறாத விழுமியங்களும் – சமத்துவம், மனிதநேயம் முதலானவை

உ) சமூக அரசியல் பொருளாதார நிகழ்வுகளில் திருக்குறளின் பொருத்தப்பாடு

ஊ) திருக்குறளில் தத்துவக் கோட்பாடுகள்

(iii) விடுதலைப் போராட்டத்தில் தமிழ்நாட்டின் பங்கு – ஆங்கிலேயருக்கு எதிரான தொடக்க கால கிளர்ச்சிகள் – விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு.

(iv) பத்தொன்பது மற்றும் இருபதாம் நூற்றாண்டுகளில் தமிழ்நாட்டின் சமூக – அரசியல் இயக்கங்களின் பரிணாம வளர்ச்சி நீதிக்கட்சி, பகுத்தறிவு வாதத்தின் வளர்ச்சி சுயமரியாதை இயக்கம், திராவிடஇயக்கம் மற்றும் இவ்வியக்கங்களுக்கான அடிப்படை கொள்கைகள், தந்தை பெரியார் மற்றும் பேரறிஞர் அண்ணாவின் பங்களிப்புகள்.

அலகு-IX: தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம்

(i) தமிழ்நாட்டின் மனிதவள மேம்பாட்டுக் குறியீடுகளும் அவற்றை தேசிய மற்றும் பிற மாநிலங்களுக்கான குறியீடுகளுடன் ஒப்பாய்வும் தமிழகத்தின் சமூக பொருளாதார வளர்ச்சிக்கு சமூக மறுமலர்ச்சி இயக்கங்களின் பங்களிப்பு.

(ii) அரசியல் கட்சிகளும் பலதரப்பு மக்களுக்கான நலத்திட்டங்களும் – இடஒதுக்கீட்டுக் கொள்கைக்கான நியாயங்களும் சமூக வளங்களைப் பெறும் வாய்ப்புகளும் தமிழகத்தின் பொருளாதார போக்குகள் – தமிழகத்தின் சமூக பொருளாதார வளர்ச்சியில் சமூகநலத் திட்டங்களின் தாக்கமும் பங்களிப்பும்.

(iii) சமூக நீதியும் சமூக நல்லிணக்கமும் சமூகப் பொருளாதார மேம்பாட்டின் மூலாதாரங்கள்.

(iv) தமிழகத்தின் கல்வி மற்றும் நலவாழ்வு (Health) முறைமைகள்.

(v) தமிழகப் புவியியல் கூறுகளும் பொருளாதார வளர்ச்சியில் அவற்றின் தாக்கமும். 

(vi) பல்வேறு துறைகளில் தமிழகம் நிகழ்த்தியுள்ள சாதனைகள்.

(vii) தமிழகத்தில் மின்னாளுகை.

அலகு-X: திறனறிவும் மனக்கணக்கு நுண்ணறிவும் (APTITUDE AND MENTAL ABILITY)

(i) சுருக்குதல் – விழுக்காடு – மீப்பெறு பொதுக் காரணி (HCF) – மீச்சிறு பொது மடங்கு (LCM).

(ii) விகிதம் மற்றும் விகிதாச்சாரம்.

(iii) தனி வட்டி – கூட்டு வட்டி – பரப்பு – கொள்ளளவு – காலம் மற்றும் வேலை.

(iv) தருக்கக் காரணவியல் – புதிர்கள் – பகடை – காட்சிக் காரணவியல் – எண் எழுத்துக் காரணவியல் – எண் வரிசை.

Executive Officer Grade – III

(Group VII-B Services)

Paper-II

இந்துமதம், சைவமும் வைணவமும்

(பட்டப்படிப்புத் தரம்)

(கொள்குறி வகைகளுக்கான தலைப்புகள்)

இந்துமதம்

  1. இந்துமதம் – தோற்றமும் வரலாறும்
  2. வேதங்கள்
  3. உபநிடதங்கள்
  4. இந்து மத உட்பிரிவுகள் (அறுவகை சமயங்கள்)
  5. இதிகாசம் புராணங்கள்
  6. அத்வைத, விசிட்டாத்வைத, துவைத சித்தாந்தங்கள்
  7. கடவுள் ஓம்
  1. உலகத் தோற்றம்
  2. மந்திரங்கள்
  3. 10.ஆன்மாக்கள்
  1. மரணத்தின் பின் மனிதர் நிலை
  2. முத்திநெறி (முத்தி மார்க்கம்)
  3. குரு
  4. ஆலயம், ஆலய அமைப்பு, ஆலய வழிபாடு
  5. 15.திருமூலர்
  1. பூசை
  2. சித்தர்கள்
  3. சாத்திரங்கள்
  4. திருக்கோயில் திருவிழாக்கள்
  1. பண்டிகைகள்
  2. இந்துக்களின் சடங்கு முறைகள்
  1. போற்றிகள் தோத்திரமாலை

23.கோயிற்கலை (சிற்பங்களை பராமரித்தல்)

  1. கோயில் திருமேனிகள்

25.ஆகமங்கள்

26.பட்டினத்தார்.

27.தாயுமானவர்

  1. பக்தி இயக்கம்
  2. அண்மைக் கால அருளாளர்கள், இராமகிருஷ்ணபரமஹம்சர், விவேகானந்தர், பாம்பன் சுவாமிகள்
  3. அருட்பிரகாச வள்ளலார்

சைவம்

  1. சைவமும் சிவமும்
  2. தமிழும் சைவமும்
  3. சைவ இலக்கியமும் வரலாறும்
  4. முப்பொருள் இயல்பு
  1. எண் குணங்கள்
  2. வழிபாடு
  1. சிவ தீக்கை
  2. திருத்தொண்டர் புராணம் (பெரியபுராணம்)
  3. சைவ குருமார்கள் (சைவ ஆச்சாரியர்கள்)
  4. பன்னிரு திருமுறைகள் – அறிமுகம்

11.சைவ சித்தாந்த சாத்திரங்கள்

  1. பழந்தமிழ் இலக்கியங்களில் சிவன்

வைணவம்

  1. வைணவம்

2.வைணவ இலக்கியமும் வரலாறும்

  1. ஆகமும் நாராயணனும்
  2. கீதையின் உட்பொருள்
  3. ஆழ்வார்களின் வரலாறு
  4. நம்மாழ்வாரும் வைணவமும்
  5. இராமானுஜரும் கோட்பாடுகளும்
  6. வைணவ ஆச்சாரியர்கள்
  7. விஷ்ணு புராணமும் விஷ்ணுவின் மேன்மையும்
  8. நாலாயிர திவ்யபிரபந்தம் – அறிமுகம்
  9. பழந்தமிழ் இலக்கியங்களில் திருமால்
  10. வைணவ உரையாசிரியர்கள்

SCHEME OF EXAMINATION: OBJECTIVE TYPE (OMR METHOD)

 

Subject Duration Maximum Marks Minimum Qualifying marks for Seletion
SCs,

SC(A)s,

STS,

Others

MBC/ DCs

and BCs

others
Paper – I

Part-A

கட்டாயத் தமிழ் மொழித்

தகுதி மற்றும் மதிப்பீட்டுத் தேர்வு *

(பத்தாம் வகுப்புத் தரம்)

100 questions /150 marks

Part-B

General Studies

(SSLC standard) 75 questions

and

Aptitude and Mental Ability Test

(SSLC standard) 25 questions

100 questions / 150 marks

3 Hours 300 180 240
Paper-II

1.இந்துமதம்

((பட்டப்படிப்புத் தரம்))

(Code No.182)

2. சைவமும் வைணவமும்

((பட்டப்படிப்புத் தரம்))

(Code No.183)

Total – 200 questions / 300 marks

3 Hours 300
Total 600

Note:

(a) Answer sheets of Part-B of Paper-I and Paper-II will be evaluated, only if the candidate secures minimum qualifying marks [40% – i.e., 60 Marks] in Part-A of Paper-I.

(b) Total Marks secured in Paper-I and Paper-II taken together will be considered for ranking.

(c) The questions in Part-A of Paper-I and Paper-II will be set in Tamil only. The questions in Part-B of Paper-I will be set both in Tamil and English.

(d) Refer to para.17 of “Instructions to Applicants” with regard to Instructions to be followed while appearing for competitive Examinations conducted by the Commission.

(e) The syllabus for written examination is available in Annexure – I to this Notification.

Click here to Download the TNPSC Executive Officer Syllabus PDF

 

Adda247 TamilNadu Home page Click here
Official Website=Adda247 Click here

Use Code: PREP20(20% off on all)

TNPSC Executive Officer Syllabus 2022, Grade 3 Syllabus PDF_4.1
EXECUTIVE OFFICER, GRADE- III (GROUP- VII- B SERVICES) (TAMIL NADU HINDU RELIGIOUS AND CHARITABLE ENDOWMENTS SUBORDINATE SERVICE )

***************************************************************************

*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*

Check Live Classes in Tamil

*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*

Practice Now

Adda247App |  Adda247 Tamil Youtube

Tamil Engineering Classes by Adda247 Youtube link

Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group

Instagram = Adda247 Tamil

TNPSC Executive Officer Syllabus 2022, Grade 3 Syllabus PDF_5.1