Tamil govt jobs   »   Latest Post   »   TNPSC குரூப் 2/2A, குரூப் 4 பாடத்திட்டங்கள்...
Top Performing

TNPSC குரூப் 2/2A, குரூப் 4 பாடத்திட்டங்கள் மாற்றப்பட்டுள்ளன

TNPSC குரூப் 2 & 2A குரூப் 4 பாடத்திட்டம்: தேர்வர்களின் நலன் கருதியும், அரசுத் துறைகளின் தேவையைக் கருத்தில் கொண்டும் இத்தேர்வுகளில் பாடத்திட்டம் மாற்றியமைப்பட்டுள்ளதாக TNPSC தெரிவித்துள்ளது. TNPSC மூலம் நடத்தப்படும் குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வு மற்றும் குரூப் 4 தேர்விற்கான பாடத்திட்டத்தை மாற்றி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

TNPSC குரூப் 2 & 2A பாடத்திட்டம்

TNPSC குரூப் 2 மற்றும் 2A பதவிகளுக்கான தேர்வின் இந்தாண்டு மாற்றங்கள் கொண்டுவரப்பட்டது. அதன்படி, நேர்காணல் நீக்கப்பட்டு குரூப் 2 மற்றும் 2A பதவிகளுக்கான முதல்நிலை தேர்வு ஒன்றாகவும், முதன்மைத் தேர்வு தனித்தனியாகவும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து, தற்போது முதல்நிலை தேர்வின் பொதுத் தமிழ் மற்றும் பொது ஆங்கிலத்திற்கான பாடத்திட்டங்கள் மாற்றியமைக்கப்பட்டு உள்ளது.குரூப் 2 மற்றும் 2ஏ பதவிகளுக்கு முதல்நிலை தேர்வு 200 கேள்விகள் கொண்டு நடைபெறும். பொது அறிவு (பட்டப்படிப்பு) 75 கேள்விகள் கொண்டும், திறனறிவும் மனக்கணக்கு நுண்ணறிவும் (பத்தாம் வகுப்பு தரம்) 25 கேள்விகள் கொண்டும், பொதுத்தமிழ் அல்லது பொது ஆங்கிலம் (பத்தாம் வகுப்பு தரத்தில்) 100 கேள்விகள் கொண்டு வினாத்தாள் அமையும். இந்நிலையில், பொதுத்தமிழ் அல்லது பொது ஆங்கிலம் பகுதியில் பாடத்திட்டம் மாற்றப்பட்டுள்ளது.

TNPSC குரூப் 2 மற்றும் 2A பாடத்திட்டம் PDF 1

TNPSC குரூப் 2 மற்றும் 2A பாடத்திட்டம் PDF 2

TNPSC குரூப் 2 மற்றும் 2A பாடத்திட்டம் PDF 3

TNPSC குரூப் 2 மற்றும் 2A பாடத்திட்டம் PDF 4

TNPSC குரூப் 2 மற்றும் 2A பாடத்திட்டம் PDF 5

TNPSC குரூப் 4 பாடத்திட்டம்

TNPSC குரூப் 4 ஒரே கட்ட தேர்வாக மட்டும் நடைபெறும். தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டு பணி நியமனம் அளிக்கப்படும். இந்நிலையில், குரூப் 4 தேர்வின் தமிழ் தகுதி மற்றும் மதிப்பீட்டுத் தேர்விற்கான பாடத்திட்டமும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. TNPSC குரூப் 4 தேர்வு பொது அறிவு 75 கேள்விகள் கொண்டும், திறனறிவும் மனக்கணக்கு நுண்ணறிவும் 25 கேள்விகள் கொண்டும் மற்றும் தமிழ் தகுதி மற்றும் மதிப்பீட்டுத் தேர்வு 100 கேள்விகள் கொண்டும் மொத்தம் 200 கேள்விகள் கொண்டு வினாத்தாள் அமையும். இதில் தமிழ் தகுதி மற்றும் மதிப்பீட்டுத் தேர்வு பகுதி மாற்றப்பட்டுள்ளது.

TNPSC குரூப் 4 பாடத்திட்டம் PDF

**************************************************************************

TNPSC குரூப் 2 & குரூப் 4 பாடத்திட்டங்கள் மாற்றப்பட்டுள்ளன_3.1

TNPSC குரூப் 2 & குரூப் 4 பாடத்திட்டங்கள் மாற்றப்பட்டுள்ளன_4.1

TNPSC குரூப் 2 & குரூப் 4 பாடத்திட்டங்கள் மாற்றப்பட்டுள்ளன_5.1

இது போன்ற தேர்விற்கான தகவல் மற்றும் பாடக்குறிப்புகளை பெற ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்

Adda247 TamilNadu Home page Click here
Official Website=Adda247 Click here

TNPSC குரூப் 2 & குரூப் 4 பாடத்திட்டங்கள் மாற்றப்பட்டுள்ளன_6.1