Table of Contents
TNPSC குரூப் 2 முதன்மைத் தேர்வு தேதி மற்றும் தேர்வு முறையில் மாற்றம்: தமிழகத்தில் பல்வேறு துறைகளில் இருக்கும் காலிப்பணியிடங்களை நிரப்பும் வகையில் TNPSC குரூப் 2 மற்றும் 2ஏ பதவிகளுக்கான தேர்வு கடந்த செப்டம்பர் 14-ம் தேதி நடைபெற்றது.இதற்கான முடிவுகள் டிசம்பர் 12-ம் தேதி வெளியானது.இந்நிலையில், TNPSC குரூப் 2 மற்றும் 2ஏ பதவிகளுக்கான முதன்மைத் தேர்வின் முதல் தாள் தேதி மாற்றப்பட்டுள்ளது. மேலும், 2ஏ பதவிக்கான இரண்டும் தாள் தேர்வு முறையும் மாற்றப்பட்டுள்ளது.
TNPSC குரூப் 2 மற்றும் 2ஏ முதன்மைத் தேர்வு தேதி
தேர்வு | தேர்வு தேதி | மாற்றப்பட்ட தேதி |
TNPSC குரூப் 2 மற்றும் 2ஏ முதல் தாள் | 02 பிப்ரவரி 2025 | 08 பிப்ரவரி 2025 |
TNPSC குரூப் 2 இரண்டாம் தாள் | 23 பிப்ரவரி 2025 | 23 பிப்ரவரி 2025 |
TNPSC குரூப் 2ஏ இரண்டாம் தாள் | 08 பிப்ரவரி 2025 | 08 பிப்ரவரி 2025 |
TNPSC குரூப் 2 தேர்வு முறையில் மாற்றம்
மேலும், இந்த தேர்வின் முதல் நிலை தேர்வு (Prelims) கடந்த செப்டம்பர் 14ம் தேதியன்று நடைபெற்று, அதன் முடிவுகள் டிசம்பர் 12ம் தேதி அன்று வெளியானதை தொடர்ந்து, இதன் முதன்மை(Mains) தேர்வுகள் அடுத்த ஆண்டு பிப்ரவரி 2ம் தேதி நடைபெற உள்ளது.
இந்நிலையில், இந்த குரூப் 2 மற்றும் 2A தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது, கணினி வாயிலாக நடக்கவிருந்த குரூப் 2 தேர்வு, தற்போது OMR முறையில் நடத்தப்பட உள்ளதாக TNPSC ஆணையம் தெரிவித்துள்ளது. அதாவது, சமீபத்தில் உதவி வழக்கறிஞர் தேர்வு கணினி வாயிலாக நடைபெற்று அதில் சில குளறுபடிகள் ஏற்பட்டு தேர்வு ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து, குரூப் 2 மற்றும் 2A தேர்வில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக TNPSC விளக்கம் தெரிவித்துள்ளது.
**************************************************************************
Adda247 TamilNadu Home page | Click here |
Official Website=Adda247 | Click here |