Tamil govt jobs   »   TNPSC குரூப் 5A   »   TNPSC Group 5A Syllabus
Top Performing

TNPSC குரூப் 5A பாடத்திட்டம், தேர்வு முறை & பாடத்திட்டத்தின் PDF ஐ இங்கே பதிவிறக்கவும்

TNPSC குரூப் 5A பாடத்திட்டம்: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் TNPSC குரூப் 5A அறிவிப்பு 2024 ஐ வெளியிட்டுள்ளது. TNPSC குரூப் 5A தேர்வுக்கு தயாராகும் முன் விண்ணப்பதாரர்கள் TNPSC குரூப் 5A பாடத்திட்டத்தை அறிந்திருக்க வேண்டும். TNPSC குரூப் 5A பாடத்திட்டம் மற்றும் தேர்வு முறை பற்றி மேலும் அறிய முழு கட்டுரையை படிக்கவும்.

TNPSC குரூப் 5A பாடத்திட்டம்
தேர்வு பெயர் TNPSC குரூப் 5A 2024
TNPSC குரூப் 5A அறிவிப்பு 2024

17 அக்டோபர் 2024

காலியிடங்கள் 35

விண்ணப்பிக்கும் முறை

ஆன்லைன்
அதிகாரப்பூர்வ இணையதளம் https://tnpsc.gov.in/

 

TNPSC குரூப் 5A பாடத்திட்டம்

ஒரு தேர்வுக்குத் தயாராவதற்கு பாடத்திட்டம் மற்றும் தேர்வு முறை இரண்டும் மிக முக்கியம். இந்த கட்டுரையில் நீங்கள் தேர்வு பாடத்திட்டம் மற்றும் தேர்வு முறை பற்றி காணலாம்.

TNPSC Group 5A பாடத்திட்டம் 2024

Paper-I: பொதுத்தமிழ் (பட்டப்படிப்புத் தரம்)

பாடத்திட்ட நோக்கம்

  • கட்டுரை எழுதும் திறன்
  • கடிதம் – பல்வேறு அலுவலகக் கடிதம் எழுதும் திறன்
  • கொடுக்கப்பட்ட பகுதியைச் சுருக்கமாகவும், குறிப்புகளைக்
  • கொண்டு விரிவாகவும் எழுதும் திறன்
  • பொருளுணர்ந்து வினாக்களுக்குத் தெளிவாகவும்
  • சுருக்கமாகவும் விடையளிக்கும் திறன்
  • கருத்துச் செறிவுடனும் தெளிவுடனும் மொழி பெயர்க்கும் திறன்
  • தமிழ்மொழித் திறன், ஆட்சிமொழிக் கலைச்சொல்லாக்கத் திறன்

மேற்கண்ட திறன்கள் வெளிப்படும் நோக்கில் இப்பாடத்திட்டம் அமைகிறது.

பாடத்திட்டம்

அலகு-1

கட்டுரை எழுதும் திறன்

கீழ்க்காணும் பொதுவான தலைப்புகளில் வினாக்கள் அமைதல் வேண்டும்.

  1. தமிழக விடுதலை வீரர்கள் / தமிழர் பண்பாடு
  2. அச்சு ஊடகம்/ மின்னணு ஊடகங்கள்
  3. சுற்றுச்சூழல் /உணவும் உடல் நலமும்
  4. மனித உரிமைகள் / பாலினச் சமத்துவம்
  5. சமூக நீதி வரலாறு

அலகு-2

கொடுக்கப்பட்ட பகுதியிலிருந்து கேட்கப்பட்ட வினாக்களுக்குத் தெளிவான, சரியான, சுருக்கமான விடை தருதல்,

அலகு-3

கொடுக்கப்பட்ட பகுதியை மூன்றில் ஒரு பங்காகச் சுருக்கி எழுதும் திறனை வெளிப்படுத்துதல்

அலகு-4

கொடுக்கப்பட்ட சுருக்கக் குறிப்புகளிலிருந்து விரிவாக்கம் செய்து எழுதும் திறனைக் கண்டறிதல்

அலகு-5

மொழிபெயர்ப்பு

ஆங்கிலப் பகுதியைத் தமிழில் மொழிபெயர்ப்பு செய்தல். கருத்துச் செறிவும் தெளிவும் வெளிப்படும் வகையில் மொழிபெயர்ப்பு அமைதல் வேண்டும்.

அலகு-6

அலுவலகக் கடிதம்

  1. அறிக்கை எழுதும் திறன் வெளிப்படல்
  2. திட்ட மதிப்பீட்டறிக்கை உருவாக்கல்
  3. கருத்துரு (Proposal) எழுதும் திறன் வெளிப்படல்

அலகு-7

மொழித்திறன் கண்டறிதல்

அ) வாக்கியத்தில் அமைத்து எழுதுதல்

ஆ) இணைச்சொற்களைப் பயன்படுத்தி ஒரே தொடரமைத்தல்

இ) அகர வரிசைப்படுத்துதல்

1) உயிர் எழுத்தில் தொடங்கும் நான்கு சொற்கள் 2) உயிர்மெய் எழுத்தில் தொடங்கும் நான்கு சொற்கள்

3) உயிரும் உயிர்மெய்யும் கலந்த நான்கு சொற்கள் இடம்பெறல் வேண்டும்.

ஈ) பிழை நீக்கி எழுதுதல்

எழுத்துப்பிழை, ஒற்றுப்பிழை, தொடர்ப்பிழை, கருத்துப்பிழை நீக்கி எழுதும் வகையில் மூன்று வினாக்கள் அமைதல் வேண்டும்.

உ) கலைச் சொல்லாக்கம்

தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை வெளியிட்ட ஆட்சித்தமிழ் அகராதியை மையமிட்டு, துறைசார் ஆட்சித் தமிழ்ச் சொற்கள் குறித்த அறிவை வெளிப்படுத்தும் வகையில் வினாக்கள் அமைதல் வேண்டும். அகராதியிலுள்ள ஆங்கிலச் சொற்களுக்கு நிகரான தமிழ்க் கலைச்சொற்களை எழுதும் வகையில் வினாக்கள் அமைதல் வேண்டும்.

Paper-II: General English (Degree Standard)

Essay Writing in 300 words

  • Argumentative Essay
  • Descriptive Essay
  • Narrative Essay
  • Critical Essay
  • Expository Essay
  • Persuasive Essay

Letter Writing

  • Letter expressing demands/ needs
  • Enquiry letter
  • Order letter
  • Letter responding to Enquiries

Precis Writing

  • An seen passage in 200 words is to be given. It has to be briefed in around 70 words.

Reading Comprehension

An unseen passage in 200 words is to be given. Questions are to framed following K 5 Model Barrett’s Taxonomy

  • 1. Understanding Question
  • 2. Appreciation Question
  • 3. Interpretative Question
  • 4. Analytical Question
  • 5. Organizing Question
  • 6. Inferential Question
  • 7. Critical Question
  • 8. Explanatory Question
  • 9. Descriptive Question
  • 10. Creative Question

Translation

  • (a) From Tamil to English – Government Order/ circular and
    Government job openings

    (b) From English to Tamil – News articles / 5 sentences of complex structure

Hints Development

Developing the hints into a readable passage

Notification

Drafting Announcements / Advertisements and Writing Explanations / Circulars

Grammar

  • 1. Active to Passive.
  • 2. Passive to Active.
  • 3. Direct to Indirect Speech.
  • 4. Indirect to Direct Speech.
  • 5. Rewrite Compound Sentence as Simple sentence.
  • 6. Rewrite Simple Sentence as Complex sentence.
  • 7. Transform statement into a strong question.
  • 8. Transform statement into a weak question.
  • 9. Transform assertive sentence into a negative sentence.
  • 10. Add a suitable question tag.
  • 11. Use the homophones in meaningful sentence.
  • 12. Use the right adverb.
  • 13. Fill in the blank with right preposition.
  • 14. Rewrite the sentence in comparative degree.
  • 15. Rewrite the sentence in past tense.
  • 16. Change the underlined phrase into clause.
  • 17. Change the underlined clause into phrase.
  • 18. Identify the pattern of the given sentence.
  • 19. Fill in the blanks with a suitable Article.
  • 20. Rewrite the sentence correcting the error.

TNPSC Group 5A பாடத்திட்டம் 2024 PDF

தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் உள்ள உதவிப் பிரிவு அலுவலர் / உதவித் தேர்வுக்கான பாடத்திட்டத்தை கீழே உள்ள இணைப்பிலிருந்து PDF இல் பதிவிறக்கவும்.

Click Here to Download the TNPSC Group 5A Syllabus 2024 PDF

 

TNPSC குரூப் 5 A தேர்வு செயல்  முறை: 

பாடங்கள் அதிகபட்ச மதிப்பெண்கள் கால அளவு குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்கள்
தாள் 1:பொதுத் தமிழ் 100 3மணி நேரம் 60
தாள் 2:பொது ஆங்கிலம் 100 3மணி நேரம்
மொத்தம் 200

**************************************************************************

 

TNPSC குரூப் 5A பாடத்திட்டம், தேர்வு முறை & பாடத்திட்டத்தின் PDF ஐ இங்கே பதிவிறக்கவும்_3.1

TNPSC குரூப் 5A பாடத்திட்டம், தேர்வு முறை & பாடத்திட்டத்தின் PDF ஐ இங்கே பதிவிறக்கவும்_4.1

இது போன்ற தேர்விற்கான தகவல் மற்றும் பாடக்குறிப்புகளை பெற ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்
Adda247 TamilNadu Home page Click here
Official Website Adda247 Click here
TNPSC குரூப் 5A பாடத்திட்டம், தேர்வு முறை & பாடத்திட்டத்தின் PDF ஐ இங்கே பதிவிறக்கவும்_5.1

FAQs

Q. Will the TNPSC Group 5a Exam be Objective Type or Descriptive?

Ans. The TNPSC Group 5a Exam will be Multiple Choice Questions.

Q. How to Download TNPSC Group 5a Syllabus PDF?

Ans. You can Download TNPSC Group 5a syllabus PDF by clicking the link given in this article