இந்தக் கட்டுரையில், TNPSC குரூப் 1, குரூப் 2, குரூப் 2A, குரூப் 4 மாநிலப் போட்டித் தேர்வுகளான TNUSRB, TRB, TET, TNEB போன்றவற்றுக்கான முறைகள் இலவசக் குறிப்புகளைப் பெறுவீர்கள்.தேர்வுக்கு தயாராவோர் இங்குள்ள பாடக்குறிப்புகளை படித்து பயன்பெற வாழ்த்துகிறோம்.
பட்டயச் சட்டம் – 1813
முன்னுரை:
- வெல்லெஸ்லி பிரபுவைத் தொடர்ந்து ஹேஸ்டிங்ஸ் பிரபு என்றழைக்கப்பட்ட மார்குவிஸ் ஹேஸ்டிங்ஸ் வங்காளத்தின் தலைமை ஆளுநராகப் பொறுப்பேற்றார். வெல்லஸ்லியின் பணியினை இவர் நிறைவு செய்தார். இவர் காலத்தில் நேபாளத்தைச் சார்ந்த கூர்க்கர் இனத்தவர், பிண்டாரி இனத்தவர்கள் மற்றும் மராத்திய தலைவர்கள் ஆங்கிலப் பேரரசை அகற்ற எண்ணினார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில் அனைத்து சவால்களையும் ஹேஸ்டிங்ஸ் திறமையுடன் சமாளித்து ஆங்கில அரசாட்சியை இந்தியாவில் நிலைபெறச் செய்தார்.
- இவருடைய ஆட்சிக் காலத்தில் 1813 ஆம் ஆம் ஆண்டின் பட்டயச் சட்டம் ஆங்கில அரசால் நிறைவேற்றப்பட்டது.
1813 ஆம் ஆண்டு பட்டயச் சட்டத்தின் முக்கிய அம்சங்கள்:
- ஆங்கிலக் கிழக்கிந்திய கம்பெனியின் வியாபார உரிமம் மேலும் 20 ஆண்டுகளுக்கு நீடிக்கப்பட்டது.
- இந்தியாவுடனான வாணிப உறவு ஆங்கிலேய வியாபாரிகளுக்குத் திறந்து விடப்பட்டது. கிழக்கிந்திய நிறுவனத்தின் வாணிகத் தனி உரிமை இரத்தானது. இந்தியர்களின் கல்வி வளர்ச்சிக்காக ஆண்டு தோறும் ரூபாய் ஒரு லட்சம் ஒதுக்கப்பட்டது.
- இந்தியாவில் வாழும் ஐரோப்பியரின் சமய நலன் காக்க கிறித்துவப் பேராயர்கள் நியமிக்கப்பட்டனர். ஆங்கில நாட்டு வியாபாரிகளும், மதப் போதகர்களும் கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதியோடு இந்தியாவில் வசிக்க அனுமதிக்கப்பட்டனர்.
பட்டயச் சட்டத்தின் முக்கியத்துவம்:
ஆங்கிலக் கிழக்கிந்திய நிறுவனத்தின் வியாபாரத் தனி உரிமை முடிவுக்கு வந்தது கிறித்துவச் சமயப் போதகர்கள், தங்கள் சமயத்தைப் பரப்புவதற்கு அனுமதி பெற்றனர்
கல்விச் சீர்திருத்தம்:
கி.பி.1813 ஆம் ஆண்டு பட்டயச் சட்டத்தின்படி ஒதுக்கீடு செய்யப்பட்ட பணம், ஆங்கில மொழி மூலமாக மேலை நாட்டுக் கல்வியை வளர்க்கப் பயன்படுத்தப்பட்டது இதன் மூலம் இந்தியாவில் ஆங்கிலமொழி பயிற்றுமொழியாக மாறியது. கல்கத்தாவில் மருத்துவக்கல்லூரியும், பம்பாயில் எல்பின்ஸ்டன் கல்லூரியும் நிறுவப்பட்டது
**************************************************************************
Adda247 TamilNadu Home page | Click here |
Official Website=Adda247 | Click here |