இந்தக் கட்டுரையில், TNPSC குரூப் 1, குரூப் 2, குரூப் 2A, குரூப் 4 மாநிலப் போட்டித் தேர்வுகளான TNUSRB, TRB, TET, TNEB போன்றவற்றுக்கான முறைகள் இலவசக் குறிப்புகளைப் பெறுவீர்கள்.தேர்வுக்கு தயாராவோர் இங்குள்ள பாடக்குறிப்புகளை படித்து பயன்பெற வாழ்த்துகிறோம்.
பட்டயச் சட்டம் – 1853
அறிமுகம்:
1793 மற்றும் 1853க்கு இடையில் பிரிட்டிஷ் பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட பட்டயச் சட்டங்களின் தொடரில் இதுவே கடைசி இது ஒரு குறிப்பிடத்தக்க அரசியலமைப்பு மைல்கல்
சட்டத்தின் விதிகள்:
- வங்காளத்திற்கு தனி ஆளுநர் அமைக்கப்பட்டார்
- வங்காள ஆளுநர் பொறுப்பு அல்லாத முதல் இந்திய கவர்னர் ஜெனரல் டல்ஹவுசி ஆவார்
- கவர்னர் ஜெனரல் சட்டமியற்றும் கவுன்சிலில் மத்திய சட்டமன்றம் ஆனது இது குட்டி பாராளுமன்றமாக செயல்பட்டது
- மெக்காலே குழு 1854 ஆலோசனையின் பெயரில் முதல்முறையாக இந்தியர்களுக்கான போட்டித்தேர்வுகள் அறிமுகப்படுத்தப்பட்டது
- அரசு ஊழியர்களை தேர்வு செய்யும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
- கவர்னர் ஜெனரலின் சட்டமியற்றும் அதிகாரத்தை பிரித்து 6 பேர் கொண்ட கவுன்சிலில் அமைக்கப்பட்டது சட்டமியற்றும் கவுன்சில் மத்திய சட்டமன்றமாக செயல்பட்டது
- இச்சட்டம் மறைமுகமாக இந்தியர்களின் பிரதிநிதித்துவத்தை மத்திய சட்டமன்றத்தில் ஏற்படுத்த வழிவகை செய்தது
- 1854 அறிக்கை அறிமுகப்படுத்தப்பட்டது இது இந்தியாவின் அறிவுப் பெட்டகம் எனப்பட்டது
- மாநில கல்வி வாரியம் ஏற்படுத்தப்பட்டது 1857 பல்கலைக்கழகங்கள் சென்னை (செப்டம்பர்), மும்பை மற்றும் கல்கத்தா (ஏப்ரல்) ஏற்படுத்தப்பட்டன (Based on UK university)
பட்டயச் சட்டம் 1853 இன் முக்கியத்துவம்:
- பட்டயச் சட்டம் 1853 நிறுவனத்தின் ஆட்சி நீண்ட காலம் நீடிக்கப் போவதில்லை என்பதை தெளிவாகக் குறித்தது. நிறுவனத்தின் சக்தி மற்றும் செல்வாக்கு குறைக்கப்பட்டது. பிரிட்டிஷ் ஆறு இயக்குநர்களை பரிந்துரைக்க முடியும்
மேலும், இந்தியாவில் பாராளுமன்ற அமைப்பின் தொடக்கத்தை குறிக்கிறது, ஏனெனில் சட்டமன்றம் செயற்குழுவிலிருந்து தெளிவாக வேறுபடுத்தப்பட்டது. கவர்னர் ஜெனரல் வங்காளத்தின் நிர்வாக கடமைகளில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
**************************************************************************
Adda247 TamilNadu Home page | Click here |
Official Website=Adda247 | Click here |