Tamil govt jobs   »   Latest Post   »   TNPSC Book Back Revision Questions Tamil...
Top Performing

TNPSC Book Back Revision Questions Tamil Medium – People’s Revolt

TNPSC Samacheer Book Back Questions: ADDA 247 Tamil is giving you TNPSC Samacheer Book Back Questions People’s Revolt MCQs for all competitive exams. Here you get Multiple Book Back Choice Questions and Answers. Here you will find all the important questions and answers that will help you increase your knowledge and move you toward fulfilling your goals. Study these TNPSC Book Back Questions MCQs and succeed in the exams.

Attend TNPSC Book Back Question Quiz Here

 

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

Q1. பாளையக்காரர் முறை ஏற்படுத்தப்பட்ட ஆண்டு

(a) 1519 

(b) 1520

(c) 1529 

(d) 1530

S1.Ans.(c)

Sol.

  • விஜய நகர ஆட்சியாளர்கள் தங்கள் மாகாணங்களில் நாயக்கர்களை நியமித்தனர் .
  • மதுரை நாயக்கர் பாளையக்காரரை நியமித்தார்.
  • 1529இல் விஸ்வநாதர் மதுரை நாயக்கரானார்.
  • அவரது அமைச்சர் அரியநாதருடன் கலந்தாலோசித்து 1529இல் பாளையக்காரர் முறையை ஏற்படுத்தினார். 

 

Q2. பின்வரும் தமிழ்நாட்டு பாளையக்காரர்களுள் ஆங்கில ஆட்சியை எதிர்த்ததில் முன்னோடியானவர்

(a) பூலித்தேவன்

(b) யூசுப்கான்

(c) கட்டபொம்மன்

(d) மருது சகோதரர்கள்

S2.Ans.(a)

Sol.

  • இந்தியாவில் ஆங்கில ஆட்சியை எதிர்ப்பதில் தமிழ்நாட்டில் முன்னோடியாக இருந்தவர் பூலித்தேவர் ஆவார்.

 

Q3. காலின் ஜாக்சன் எந்தப் பகுதியின் ஆட்சியாளர்?

(a) மதுரை

(b) திருநெல்வேலி

(c) இராமநாதபுரம்

(d) தூத்துக்குடி

S3.Ans.(c)

Sol.

  • இராமநாதபுர கலெக்டர் காலின் ஜாக்சன் 1798இல் நிலுவைத் தொகையை செலுத்தச் சொல்லி கட்டபொம்மனுக்கு கடிதங்கள் எழுதினார்.

Q4. வீரபாண்டிய கட்டபொம்மன் கீழ்க்கண்ட எந்த இடத்தில் தூக்கிலிடப்பட்டார்?

(a) பாஞ்சாலங்குறிச்சி 

(b) சிவகங்கை

(c) திருப்பத்தூர் 

(d) கயத்தாறு

S4.Ans.(d)

Sol.

  • அக்டோபர் 16ஆம் நாள் பாளையக்காரர் அவையின் முன் கட்டபொம்மன் விசாரிக்கப்பட்டார். 
  • அடுத்த நாள் அக்டோபர் 17, 1799 அன்று கட்டபொம்மன் கயத்தாறு என்ற இடத்தில் தூக்கிலிடப்பட்டார்.

 

Q5. வேலு நாச்சியார் எப்பகுதியின் ராணி ஆவார்?

(a) நாகலாபுரம் 

(b) சிவகிரி

(c) சிவகங்கை 

(d) விருப்பாச்சி

S5.Ans.(c)

Sol.

  • சிவகங்கையின் இராணி வேலுநாச்சியார் ஆவார் .

 

Q6. ’திருச்சிராப்பள்ளி பிரகடனம்’ யாரால் வெளியிடப்பட்டது?

(a) மருது பாண்டியர்கள்

(b) கிருஷ்ணப்ப நாயக்கர்

(c) வேலு நாச்சியார்

(d) தீரன் சின்னமலை

 

S6.Ans.(a)

Sol.

திருச்சிராப்பள்ளி பிரகடனம் (1801)

  • ஜூன் 1801இல் மருது சகோதரர்கள் ‘திருச்சிராப்பள்ளிபிரகடனம்’ என்றழைக்கப்பட்ட ‘சுதந்திரப் பிரகடனம்’ ஒன்றை வெளியிட்டனர்.

Q7. கீழ்க்கண்டவைகளுள் தீரன் சின்னமலையோடு தொடர்புடைய பகுதி எது?

(a) திண்டுக்கல் 

(b) நாகலாபுரம்

(c) புதுக்கோட்டை 

(d) ஓடாநிலை

S7.Ans.(d)

Sol.

  • திப்புசுல்தான் இறந்த பிறகு, இவர் ஓடாநிலையில் தங்கி ஆங்கிலேயரைத் தொடர்ந்து எதிர்த்துப் போராட, அங்கு ஒரு கோட்டையைக் கட்டினார். 

 

Q8. ராணி லட்சுமிபாய் எப்பகுதியில் ஏற்பட்ட புரட்சியை வழிநடத்தினார்?

(a) மத்திய இந்தியா 

(b) டெல்லி

(c) கான்பூர் 

(d) பரெய்லி

S8.Ans.(a)

Sol.

  • மத்திய இந்தியாவில் புரட்சி ஜான்சியின் ராணி இலட்சுமிபாய் அவர்களால் வழிநடத்தப்பட்டது.
  • இந்தியாவின் மாபெரும் தேசபக்தர்களுள் அவரும் ஒருவர்.
  • சர் ஹக்ரோஸ் ஜான்சியை ஆக்கிரமித்தார்.

II கோடிட்ட இடங்களை நிரப்புக

  1. கிழக்குப்பகுதி பாளையங்கள்—————– கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது. (கட்டபொம்மன்)
  2. விஸ்வநாத நாயக்கர் அவரது அமைச்சர் —————–உடன் கலந்தாலோசித்து பாளையக்கார முறையை ஏற்படுத்தினார். (அரியநாதருடன்)
  3. கட்டபொம்மனின் முன்னோர்கள்—————– பகுதியைச் சார்ந்தவர்கள். (ஆந்திரா)
  4. —————– தமிழர்களால்வீர மங்கைஎனவும் தென்னிந்தியாவின் ஜான்சி ராணி எனவும் அறியப்பட்டார். (வேலு நாச்சியார்)
  5. —————–சிவகங்கையின் சிங்கம்என அழைக்கப்படுகிறார். (சின்ன மருது)
  6. 1857 ஆம் ஆண்டு புரட்சியை—————– என்பவர்முதல் இந்திய சுதந்திரப் போர்என விவரிக்கிறார். (வி.டி. சவார்க்கர்)

III 

Q9.பொருத்துக

  1. டெல்லி—1.கன்வர் சிங்

B.கான்பூர்—2.கான் பகதூர் கான்

  1. ஜான்சி–3.நானா சாகிப்
  2. பரெய்லி—4.லட்சுமி பாய்
  3. பீகார்—5.இரண்டாம் பகதூர்ஷா

(a) 5 4 2 1 3

(b) 5 3 4 2 1

(c) 3 4 5 1 2

(d) 4 1 3 2 5

 

S9.Ans.(b)

Sol.

 

கலகம் நடைபெற்ற இடங்கள் இந்திய தலைவர்கள் கலகத்தை அடக்கிய ஆங்கிலேய அதிகாரிகள்
டெல்லி இரண்டாம் பகதூர்ஷா ஜான் நிக்கல்சன்
லக்னோ பேகம் ஹஸ்ரத் மகால் ஹென்றி லாரன்ஸ்
கான்பூர் நானா சாகிப் சர் காலின் கேம்பெல்
ஜான்சி & குவாலியர் ராணிலட்சுமிபாய்,தாந்தியா தோபே ஜெனரல் ஹக்ரோஸ்
பரெய்லி கான் பகதூர் கான் சர் காலின் கேம்பெல்
பீகார்  கன்வர் சிங் வில்லியம் டைலர்

 

IV சரியா / தவறா எனக் குறிப்பிடுக:

  1. விஜய நகர ஆட்சியாளர்கள் தங்கள் மாகாணங்களில் நாயக்கர்களை

நியமித்தனர். சரி

  1. சிவசுப்பிரமணியம் என்பவர் மருது பாண்டியர்களின் அமைச்சர் ஆவார். தவறு
  2. 1799 அக்டோபர் 17 ஆம் நாள் கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்டார்.சரி
  3. திப்பு சுல்தானின் மூத்தமகன் பதேஹைதர் ஆவார்.சரி

V (a) பின்வரும் கூற்றை ஆராய்ந்து சரியான விடையைக் குறிப்பிடவும்

Q10.

  1. வேலூர் புரட்சி 1801ஆம் ஆண்டு ஏற்பட்டது.
  2. நான்காம் மைசூர் போருக்குப்பின் திப்புவின் குடும்பத்தினர் வேலூர் கோட்டையில் சிறைவைக்கப்பட்டனர்.

III. வேலூர் புரட்சியின் போது வில்லியம் பெண்டிங் சென்னையின் ஆளுநராக இருந்தார்.

  1. ஆங்கிலேயருக்கு எதிரான வேலூர் கலகத்தின் வெற்றி இந்திய வரலாற்றில் ஒரு முக்கியமான நிகழ்வு ஆகும்.

(a) I & II சரி 

(b) II & IV சரி

(c) II & III சரி 

(d) I, II, & IV சரி

S10.Ans.(c)

Sol.

  • நான்காம் மைசூர் போருக்குப் பிறகு திப்புவின் குடும்பத்தினர் வேலூர் கோட்டையில் சிறைவைக்கப்பட்டனர்.
  • 1803இல் வில்லியம் காவெண்டிஷ் பெண்டிங் என்பவர் சென்னை மாகாண கவர்னரானார்.

 

Q11.தவறான இணையைக் கண்டுபிடிக்கவும்

(a) மருது பாண்டியர்எட்டயபுரம்

(b) கோபால நாயக்கர்திண்டுக்கல்

(c) கேரளவர்மன்மலபார்

(d) துண்டாஜிமைசூர்

S11.Ans.(a)

Sol.

மருது பாண்டியர் – சிவகங்கை 

மாறுபட்ட ஒன்றைக் கண்டுபிடி

(a) கட்டபொம்மன் 

(b) ஊமைத்துரை

(c) செவத்தையா 

(d) திப்பு சுல்தான்

 

**************************************************************************

TNPSC Group 1 & 2 Studymate
TNPSC Group 1 & 2 Studymate
இது போன்ற தேர்விற்கான தகவல் மற்றும் பாடக்குறிப்புகளை பெற ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்
Adda247 TamilNadu Home page Click here
Official Website=Adda247 Click here
TNPSC Book Back Revision Questions Tamil Medium - People's Revolt_4.1