Tamil govt jobs   »   Latest Post   »   TNPSC Book Back Questions Revision Tamil...
Top Performing

TNPSC Book Back Questions Revision Tamil Medium – From Trade to Territory

TNPSC Samacheer Book Back Questions: ADDA 247 Tamil is giving you TNPSC Samacheer Book Back Questions – From Trade to Territory MCQs for all competitive exams. Here you get Multiple Book Back Choice Questions and Answers. Here you will find all the important questions and answers that will help you increase your knowledge and move you toward fulfilling your goals. Study these TNPSC Book Back Questions MCQs and succeed in the exams.

Attend TNPSC Book Back Question Quiz Here

 

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

Q1. 1757ஆம் ஆண்டில் வங்காளத்தை ஆட்சி செய்தவர்

(a) சுஜாஉத்தெளலா

(b) சிராஜ்உத்தெளலா

(c) மீர்காசிம்

(d) திப்பு சுல்தான்

S1.Ans.(b)

Sol.

  • வங்காள நவாப் அலிவர்திகான் 1756இல் இறந்த பின்பு அவரது பேரன் சிராஜ்-உத்- தௌலா வங்காளத்தின் அரியணை ஏறினார்.

Q2. பிளாசிப் போர் நடைபெற்ற ஆண்டு

(a) 1757 

(b) 1764 

(c) 1765 

(d) 1775

S2.Ans.(a)

Sol.

  • பிளாசிப் போரானது சிராஜ்-உத்-தௌலா, பிரெஞ்சுக் கூட்டணிக்கும் மற்றும் ஆங்கில கிழக்கிந்திய கம்பெனிக்கும் இடையே 1757 ஜூன் 23ஆம் நாள் நடைபெற்றது. 

 

Q3. பக்சார் போரின் முடிவில் ஏற்பட்ட உடன்படிக்கை

(a) அலகாபாத் உடன்படிக்கை

(b) கர்நாடக உடன்படிக்கை

(c) அலிநகர் உடன்படிக்கை

(d) பாரிசு உடன்படிக்கை

S3.Ans.(a)

Sol.

  • பீகார் பகுதியின் பாட்னாவிற்கு மேற்கே 130 கி.மீ தொலைவில் கங்கை நதிக்கரையில் அமைந்துள்ளபாதுகாக்கப்பட்ட ஒரு சிறியநகரமே பக்சார் ஆகும்.
  • 1764ஆம் ஆண்டு அக்டோபர் 22இல் இங்கு நடைபெற்ற போரில் சுஜா-உத்-தௌலா, இரண்டாம் ஷா ஆலம், மீர்காசிம் ஆகியோர் ஆங்கிலப்படைத் தளபதி ஹெக்டர் மன்றோ-வால் தோற்கடிக்கப்பட்டனர்.
  • 1765 பிப்ரவரி 20இல் நடந்த அலகாபாத் உடன்படிக்கையின் படி பக்சார் போர் முடிவுக்கு வந்தது. 

Q4. பாண்டிச்சேரி உடன்படிக்கையின்படி —————–கர்நாடக போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.

(a) முதல் 

(b) இரண்டாம்

(c) மூன்றாம் 

(d) ஏதுமில்லை

S4.Ans.(b)

Sol.

  • டியூப்ளேவைத் தொடர்ந்து பிரெஞ்சு ஆளுநராக பதவியேற்ற கோதேயூ ஆங்கிலேயருடன் பாண்டிச்சேரி உடன்படிக்கையினை செய்து கொண்டார்.

Q5. ஹைதர் அலி மைசூர் அரியணை ஏறிய ஆண்டு

(a) 1756 

(b) 1761 

(c) 1763 

(d) 1764

S5.Ans.(b)

Sol.

  • ஹைதர் அலியின் தலைமையில் மைசூர் சமஸ்தானம் தென்னிந்திய வரலாற்றில் மிகப்பெரிய எழுச்சியை பெற்றது. 
  • இந்தியாவில் ஆங்கிலேய ஆட்சி விரிவாக்கத்திற்கு எதிராக ஹைதர் அலியும், அவரது மகன் திப்பு சுல்தானும் முக்கிய பங்காற்றினர். 
  • இருவரும் வீரதீரத்துடன் ஆங்கிலேயரை எதிர்த்தனர். 
  • 1761இல் ஹைதர் அலி மைசூர் சமஸ்தானத்தின் உண்மையான ஆட்சியாளரானார். 
  • மேலும் வலிமைமிக்க அவர் ஆங்கிலேயருக்கு எதிரியாகவும் திகழ்ந்தார்.

Q6. மங்களூர் உடன்படிக்கை இவர்களுக்கு இடையே கையெழுத்தானது

(a) பிரெஞ்சுக்காரர்கள் மற்றும் திப்பு சுல்தான்

(b) ஹைதர் அலி மற்றும் கள்ளிக்கோட்டை மன்னர் சாமரின்

(c) ஆங்கிலேயர் மற்றும் திப்பு சுல்தான்

(d) திப்பு சுல்தான் மற்றும் மராத்தியர்கள்

S6.Ans.(c)

Sol.

  • 1784 மார்ச் 7இல் ஆங்கிலேயருக்கும், திப்பு சுல்தானுக்கும் இடையே இவ்வுடன்படிக்கை கையெழுத்தானது. 

 

Q7. மூன்றாம் ஆங்கிலேயமைசூர் போரின் போது ஆங்கிலேய தலைமை ஆளுநர்————————

(a) இராபர் கிளைவ்

(b) வாரன் ஹேஸ்டிங்ஸ்

(c) காரன்வாலிஸ்

(d) வெல்லெஸ்லி

S7.Ans.(c)

Sol.

  • தோல்வியில் முடிந்தது. ஆகையால் 1790இல் தலைமை ஆளுநர் காரன்வாலிஸ் தானாகவே படையை வழிநடத்தினார். 
  • ஸ்ரீரங்கப்பட்டினத்தை தாக்குவதற்கு தடையாக இருந்த அனைத்து மலைக்கோட்டைகளையும் அவர் கைப்பற்றினார்.

Q8. ஆங்கிலேயருடன் பசீன் உடன்படிக்கை செய்து கொண்டவர்———————–

(a) இரண்டாம் பாஜிராவ்

(b) தெளலத்ராவ் சிந்தியா

(c) ஷாம்பாஜி போன்ஸ்லே

(d) ஷாயாஜி ராவ் கெய்க்வாட்

S8.Ans.()

Sol.

  • பேஷ்வா இரண்டாம் பாஜிராவ் இந்தியாவின் தலைமை ஆளுநராக இருந்த வெல்லெஸ்லி பிரபுவை அணுகினார். 
  • பேஷ்வாவை வரவேற்ற வெல்லெஸ்லி பிரபு, அவரோடு 1802இல் பஸ்ஸீன் உடன்படிக்கையை செய்துகொண்டார். 

Q9. மராத்திய பேரரசின் கடைசி பீஷ்வா—————————

(a) பாலாஜி விஸ்வநாத்

(b) இரண்டாம் பாஜிராவ்

(c) பாலாஜி பாஜிராவ்

(d) பாஜிராவ்

S9.Ans.(b)

Sol.

  • மராத்தியரின் கடைசி பேஷ்வாவான இரண்டாம் பாஜிராவிற்கு வருடாந்திர ஓய்வூதியம் 8 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.

Q10. துணைப்படைத் திட்டத்தில் இணைத்துக் கொண்ட முதல் இந்திய சுதேச அரசு எது?

(a) அயோத்தி 

(b) ஹைதராபாத்

(c) உதய்பூர் 

(d) குவாலியர்

S10.Ans.(b)

Sol.

  • துணைப்படைத் திட்டத்தை ஏற்றுக் கொண்ட முதல் சுதேச அரசு ஹைதராபாத் (1798).

II கோடிட்ட இடங்களை நிரப்புக

  1. அலிநகர் உடன்படிக்கை கையெழுத்திடப்பட்ட ஆண்டு. (1757 பிப்ரவரி

9 ஆம் நாள்)

  1. சிராஜ் உத்தெளலாவின் தலைமை படைத் தளபதி. (மீர்ஜாபர்)
  2. இரண்டாம் கர்நாடகப் போருக்கான முக்கிய காரணம். (கர்நாடகம் மற்றும் ஹைதராபாத் ஆகிய பகுதிகளில் ஏற்பட்ட வாரிசுரிமை பிரச்சனையே)
  3. இந்தியாவில் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை விரிவுப்படுத்துவதற்காக வாரிசு இழப்புக் கொள்கையை கொண்டு வந்தவர். (டல்ஹௌசி பிரபு)
  4. திப்பு சுல்தானை இறுதியாக தோற்கடித்தவர். (வெல்லெஸ்லி பிரபு)
  5. திப்பு சுல்தான் இறப்புக்கு பின் வசம் மைசூர் ஒப்படைக்கப்பட்டது. (மூன்றாம் கிருஷ்ண ராஜா உடையார்)
  6. 1800ஆம் ஆண்டு கல்கத்தாவில் உள்ள வில்லியம் கோட்டையில் ஒரு கல்லூரியை நிறுவியவர். (வெல்லெஸ்லி பிரபு)

 

III 

Q11.பொருத்துக

A.அய்லாசப்பேல் உடன்படிக்கை – 1.முதல் ஆங்கிலேய மைசூர் போர்

B.சால்பை உடன்படிக்கை – 2.முதல் கர்நாடகப் போர்

C.பாரிஸ் உடன்படிக்கை – 3.மூன்றாம் கர்நாடகப் போர்

D.ஸ்ரீரங்கபட்டின உடன்படிக்கை – 4.முதல் மராத்திய போர்

E.மதராஸ் உடன்படிக்கை 5.மூன்றாம் ஆங்கிலேய மைசூர் போர்

(a) 5 2 4 3 1

(b) 2 4 3  5 1

(c) 4 1 5 2 3

(d) 1 3 4 5 2

S11.Ans.(b)

Sol. 2 4 3  5 1

 

IV சரியா / தவறா எனக் குறிப்பிடுக

  1. அலிவர்திகான் மறைவுக்கு பின்னர் சிராஜ்உத்தெளலா வங்காளத்தின் அரியணை ஏறினார். சரி
  2. பிளாசிப் போரில் ஆங்கிலேயப் படையை வழி நடத்தியவர் ஹெக்டர் மன்றோ ஆவார். தவறு
  3. ஐரோப்பாவில் வெடித்த ஆஸ்திரிய வாரிசுரிமைப் போர் இரண்டாம் கர்நாடகப் போருக்கு இட்டுச் சென்றது.தவறு
  4. வங்காளத்தின் வில்லியம் கோட்டையில் உள்ள உச்ச நீதிமன்றத்தின் முதல் தலைமை நீதிபதி சர் எலிஜா இம்பே ஆவார். சரி
  5. காரன் வாலிஸ் பிரபு காவல் துறையை உருவாக்கினார்.சரி

V.

Q12.கீழ்க்கண்டவைகளுள் சரியாக பொருந்தியுள்ளது எது?

(a) அடையாறு போர் – 1748

(b) ஆம்பூர் போர் – 1754

(c) வந்தவாசிப் போர் – 1760

(d) ஆற்காட்டுப் போர் – 1749

S12.Ans.(c)

Sol.

  • ஆம்பூர் போர்  – 1749
  • அடையாறு போர் – 1746
  • வந்தவாசிப் போர் – 1760
  • ஆற்காட்டுப் போர் – 1751

 

 

**************************************************************************

TNPSC Group 1 & 2 Studymate
TNPSC Group 1 & 2 Studymate
இது போன்ற தேர்விற்கான தகவல் மற்றும் பாடக்குறிப்புகளை பெற ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்
Adda247 TamilNadu Home page Click here
Official Website=Adda247 Click here
TNPSC Book Back Questions Revision Tamil Medium - From Trade to Territory_4.1