Tamil govt jobs   »   Latest Post   »   TNPSC Book Back Questions Revision Tamil...
Top Performing

TNPSC Book Back Questions Revision Tamil – Jainism, Buddhism & Ajivika Philosophy in Tamil Nadu

TNPSC Samacheer Book Back Questions: ADDA 247 Tamil is giving you TNPSC Samacheer Book Back Questions – Jainism, Buddhism & Ajivika Philosophy in Tamil Nadu MCQs for all competitive exams. Here you get Multiple Book Back Choice Questions and Answers. Here you will find all the important questions and answers that will help you increase your knowledge and move you toward fulfilling your goals. Study these TNPSC Book Back Questions MCQs and succeed in the exams.

Attend TNPSC Book Back Question Quiz Here

  1. சரியான விடையைத் தேர்வு செய்க.

Q1. சமணப்பே ரவை முதன்முதலில் எங்கு கூடி தங்களின் சமய போதனைகளையும் ஒழுக்க விதிகளையும் தொகுக்க முற்பட்டனர்?

(a) பாடலிபுத்திரம் 

(b) வல்லபி

(c) மதுரா 

(d) காஞ்சிபுரம்

S1.Ans.(a)

Sol.

  • சமண அறிஞர்கள்பாடலிபுத்திரத்தில் ஒரு பேரவையைக் கூட்டித் தங்கள் சமயம் சார்ந்த போதனைகளையும் ஒழுக்க விதிகளையும் தொகுக்கும் முயற்சியை மேற்கொண்டனர்.
  • இது தொடர்பாகக் கூட்டப்பட்ட முதல் சமணப் பேரவைக்கூட்டம் இதுவேயாகும்.

Q2. ஆகம சூத்திரங்கள் எம் மொழியில் எழுதப்பட்டன?

(a) அர்த்தமகதி பிராகிருதம் 

(b) இந்தி

(c) சமஸ்கிருதம் 

(d) பாலி

S2.Ans.(a)

Sol.

  • ஆகம சூத்திரங்கள் பல சமண சமயப் புனித நூல்களைக் கொண்டுள்ளது.
  • அவை அர்த்த-மகதி பிராகிருத மொழியில் எழுதப்பட்டுள்ளன. 

Q3. கீழ்க்கண்டவற்றுள் எது களப்பிரர்களால் ஆதரிக்கப்பட்டது ?

(a) புத்தமதம் 

(b) சமணமதம்

(c) ஆசீவகம் 

(d) இந்து மதம்

S3.Ans.(b)

Sol.

  • பொதுவாகத் தமிழர்கள் திகம்பரர் பிரிவைச் சேர்ந்தவர்களாய் இருந்தனர்.
  • களப்பிரர்கள் சமண சமயத்தின் ஆதரவாளர்களாய் இருந்ததாக நம்பப்படுகிறது.

Q4. தலையணைப்பகுதி செதுக்கப்படாமல் உள்ள கற்படுக்கைகளை எங்கு காணலாம்?

(a) வேலூர் 

(b) காஞ்சிபுரம்

(c) சித்தன்னவாசல் 

(d) மதுரை

S4.Ans.(a)

Sol.

  • வேலூர் மாவட்டத்தில் ஒரு குன்றின் உச்சியில் அமைந்துள்ள குகைகளின்
  • உள்ளே – கி.பி. ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த சமணத் துறவிகளின் கற்படுக்கைகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
  • வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா லத்தேரியிலுள்ள பைரவ மலையில் இப்படுக்கைகள் காணக்கிடைக்கின்றன. 
  • மூன்று குகைகளில் இரண்டில் மட்டுமே கற்படுக்கைகள் உள்ளன.
  • அவற்றில் ஒன்றில் நான்கு படுக்கைகளும் மற்றொன்றில் ஒரு படுக்கையும் உள்ளன.
  • ஏனைய பகுதிகளில் காணப்படும் கற்படுக்கைகளில் உள்ள தலையணைப் பகுதி இங்குள்ள கற்படுக்கைகளில் காணப்படவில்லை.

Q5. கழுகு மலை குடைவரைக் கோவில் யாரால் கட்டப்பட்டதாகக் கருதப்படுகிறது?

(a) மகேந்திரவர்மன்

(b) பராந்தக நெடுஞ்சடையான்

(c) பராந்தக வீரநாராயண பாண்டியன்

(d) இரண்டாம் ஹரிஹரர்

S5.Ans.(b)

Sol.

  • தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வட்டம் கழுகுமலையிலுள்ள கி.பி. எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த சமணர் கோவில்,தமிழ் நாட்டில் சமணம் புத்துயிர் பெற்றதைக் குறிக்கின்றது. 
  • இக்குகைக்கோவில் பாண்டிய அரசன் பராந்தக நெடுஞ்சடையனால் உருவாக்கப்பட்டது. 
  • இக்கோவிலில் பஞ்சவர் படுக்கை என்றழைக்கப்பட்ட பாறையில் செதுக்கி மெருகேற்றப்பட்ட கற்படுக்கைகள் உள்ளன. 
  • கழுகுமலை குகைக்கோவிலில் தீர்த்தங்கரர்களின் உருவங்களைத்தவிர யக்சர்கள், யக்சிகள் (முறையே ஆண், பெண் பணியாளர்கள்) ஆகியோரின் உருவச் சிலைகளும் இடம் பெற்றுள்ளன.
  1. கோடிட்ட இடங்களை நிரப்புக.
  2. தமிழ் நாட்டிலுள்ள சமணச் சிலைகளில் மிக உயரமாகக் கருதப்படும் சிலை ______________. (நேமிநாதரின்)
  3. புத்த சரிதத்தை எழுதியவர் ______________ ஆவார். (அஸ்வகோஷரால்)
  4. ______________ நூற்றாண்டில் சீனப் பயணி யுவான்சுவாங் பல்லவ நாட்டிற்கு வந்திருந்தார். (7ஆம் நூற்றாண்டு)
  5. பௌத்தம் சரிவைச் சந்தித்துக் கொண்டிருக்கும் சமயம் என ______________ எடுத்துரைக்கின்றது. (மத்தவிலாச பிரகாசனம்)
  6. மௌரியப் பேரரசர் அசோகரும் அவருடைய பேரன் தசரதாவும் ______________ ஆதரித்தனர். (ஆசீவகர்கள்)

III. 

பொருத்துக:

  1. கல்ப சூத்ராதிருத்தக்கத் தேவர்
  2. சீவகசிந்தாமணிமதுரை
  3. நேமிநாதர்நாகசேனர்
  4. மிலிந்தபன்காபத்ரபாகு
  5. கீழக் குயில் குடி – 22வது தீர்த்தங்கரர்

(a) 5 4 2 1 3

(b) 5 4 3 1 2

(c) 3 4 5 1 2

(d) 4 1 5 3 2

 

S6.Ans.(d)

Sol.

  • பத்ரபாகுவின் கல்பசூத்ரா
  • இவைகளோடு இந்தி, தமிழ், கன்னடம் ஆகிய இந்திய பிராந்திய மொழிகளில் எழுதப்பட்ட சில சமண நூல்களையும் நாம் பெற்றுள்ளோம். அதற்கு எடுத்துக்காட்டு தமிழ்மொழியில் எழுதப்பட்ட காப்பிய நூலான சீவகசிந்தாமணி ஆகும்.இந்நூல் சங்க இலக்கிய மரபில் திருத்தக்கத் தேவர் என்பாரால் இயற்றப்பட்டது.
  • மிலிந்தபன்கா – அதாவது ‘மிலிந்தாவின் கேள்விகள்’ எனப் பொருள். கிரேக்க பாக்டீரியன் அரசன் மிலிந்தா என்பவருக்கும் பௌத்த பிட்சுவான நாகசேனர் என்பவருக்குமிடையே பௌத்தத்தின் சில அம்சங்கள் குறித்து நடைபெற்ற உரையாடலைக் கொண்டுள்ளது.
  • இதன் மூலம், சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டது.
  1. கீழ்க் காண்பனவற்றிற்கு விடையளி

Q7. கூற்று: பழைய மதங்களின் குருமார்களிடமிருந்து தான் கற்றுக்கொள்வதற்கு எதுவுமில்லை என கௌதமர் தெரிந்து கொண்டார்.

காரணம்: துறவு வாழ்க்கையை மேற்கொள்வதே முக்தி அடைவதற்கான ஒரேவழி என மதங்கள் அறிவித்தன.

(a) கூற்று சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம்

(b) கூற்று சரி , காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமல்ல.

(c) கூற்று, காரணம் இரண்டுமே தவறு.

(d) கூற்று தவறு ஆனால் காரணம் சரி.

S7.Ans.(a)

Sol.

  • பழைய மதங்களின் குருமார்களிடமிருந்து தான் கற்றுக்கொள்வதற்கு எதுவுமில்லை என கௌதமர் தெரிந்து கொண்டார்.
  • துறவு வாழ்க்கையை மேற்கொள்வதே முக்தி அடைவதற்கான ஒரேவழி என மதங்கள் அறிவித்தன.

 

Q8. சரியான கூற்றினைக் / கூற்றுகளைக் காண்க

  1. i) கி.மு. ஆறாம் நூற்றாண்டில், இந்தியாவில் வெவ்வேறான 62 தத்துவ சமயப்பள்ளிகள் செழிப்புற்று இருந்தன.
  2. ii) ‘பள்ளிஎன்பது புத்தமதத்தாரின் கல்வி மையமாகும்.

iii) அரசர்கள் அளித்த ஆதரவினால் இஸ்லாமிய ஆட்சிக்கு முந்தைய இந்தியா, பல விகாரைகளைக் கொண்ட நாடாக விளங்கியது.

  1. iv) ஆசீவகம் பதினைந்தாம் நூற்றாண்டுவரை தொடர்ந்து செயல்பட்டது.

(a) (i) மற்றும் (iii) சரி

(b) (i, ii) மற்றும் (iv) சரி

(c) (i) மற்றும் (ii) சரி

(d) (ii, iii) மற்றும் (iv) சரி

S8.Ans.(a)

Sol.

  • கி.மு. ஆறாம் நூற்றாண்டில், இந்தியாவில் வெவ்வேறான 62 தத்துவ சமயப்பள்ளிகள் செழிப்புற்று இருந்தன. சரி
  • ‘பள்ளி’ என்பது சமணர்களின் கல்வி மையங்களாகும்.
  • தமிழ்நாட்டில் ‘பள்ளி’ எனும் சொல்லை தங்கள் ஊர்ப்பெயர்களில் பின் ஒட்டாகக் கொண்ட கிராமங்களைப் பல பகுதிகளில் சாதாரணமாகக் காணமுடியும்.

Q9. தவறான இணையைக் காண்க

(a) பார்சவநாதர் – 22 வது தீர்த்தங்கரர்

(b) மகாபாஷ்யாஇலங்கையைச் சேர்ந்த வரலாற்றுத் தொகுப்பு

(c) விசுத்திமக்காபுத்தகோசா

(d) புத்தர்எண்வகை வழிகள்

S9.Ans.(a)

Sol.

  • திருமலை சமணக் கோவில் தமிழ்நாட்டின் திருவண்ணாமலை மாவட்டம், ஆரணிநகரின் அருகே அமைந்துள்ள ஒரு குகை வளாகத்தில் அமைந்துள்ளன.
  • கி.பி. 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இவ்வளாகத்தில் இவ்வளாகத்தில் மூன்றுசமணக் குகைகளும், இரண்டு சமணக் கோவில்களும், 22வது தீர்த்தங்கரரான நேமிநாதருடைய 16 மீட்டர் உயரமுடைய சிலையும் உள்ளன.
  • நேமிநாதரின் இச்சிலையே தமிழ் நாட்டிலுள்ள சமணச் சிலைகளில் மிகவும் உயரமானதாகக் கருதப்படுகின்றது.
  1. சரியா? தவறா?
  2. 12வது ஆகமசூத்திரம் தொலைந்து போனதாகக் கருதப்படுகிறது. சரி
  3. வரலாறு முழுவதிலும் ஆசீவகர்கள் அனைத்து இடங்களிலும் அடக்கமுறையைச் சந்திக்க நேர்ந்தது. சரி
  4. சமண நிறுவனங்களில் சமூக, சமய வேறுபாடுகளின்றி அனைவருக்கும் கல்வி கற்பிக்கப்பட்டது. சரி
  5. நாளந்தா, தட்சசீலம், விக்கிரமசீலா ஆகியன மிகச்சிறந்த புனிதத்தலங்களாயின. சரி
  6. சோழர்காலம் முதலாகவே பௌத்தம் சைவ, வைணவ சமயங்களின் சவால்களை எதிர்கொண்டது. (தவறு)

 

**************************************************************************

TNPSC Book Back Questions Revision Tamil - Jainism, Buddhism & Ajivika Philosophy in Tamil Nadu_3.1இது போன்ற தேர்விற்கான தகவல் மற்றும் பாடக்குறிப்புகளை பெற ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்
Adda247 TamilNadu Home page Click here
Official Website=Adda247 Click here

 

TNPSC Book Back Questions Revision Tamil - Jainism, Buddhism & Ajivika Philosophy in Tamil Nadu_4.1