TNPSC Samacheer Book Back Questions: ADDA 247 Tamil is giving you TNPSC Samacheer Book Back Questions – Rise of Marathas and Peshwas MCQs for all competitive exams. Here you get Multiple Book Back Choice Questions and Answers. Here you will find all the important questions and answers that will help you increase your knowledge and move you toward fulfilling your goals. Study these TNPSC Book Back Questions MCQs and succeed in the exams.
Attend TNPSC Book Back Question Quiz Here
சரியான விடையைத் தேர்வு செய்க.
Q1. சிவாஜியின் ஆசிரியராகவும் மற்றும் பாதுகாவலராகவும் இருந்தவர் யார்?
(a) தாதாஜி கொண்ட தேவ்
(b) கவிகலாஷ்
(c) ஜீஜாபாய்
(d) ராம்தாஸ்
S1.Ans.(a)
Sol.
- சிவாஜியின் ஆசிரியரும் குருவுமான தாதாஜி கொண்டதேவ் குதிரையேற்றம், போர்க்கலை, அரசு நிர்வாகம் ஆகியவற்றில் சிவாஜிக்குப் பயிற்சியளித்தார்.
Q2. மராத்திய பிரதம மந்திரிகள் எவ்வாறு அழைக்கப்பட்டார்கள்?
(a) தேஷ்முக்
(b) பேஷ்வா
(c) பண்டிட்ராவ்
(d) பட்டீல்
S2.Ans.(b)
Sol.
- பந்த்பீரதான் / பேஷ்வா பிரதம அமைச்சர்
- அமத்தியா / மஜீம்தார் நிதியமைச்சர்
- சுர்நாவிஸ் / சச்சீவ் செயலர்
Q3. சாம்பாஜியின் தினசரி வாழ்க்கையில் ஆதிக்கம் செலுத்திய அவருடைய குரு யார்?
(a) ஷாகு
(b) அனாஜி தத்தா
(c) தாதாஜி கொண்ட தேவ்
(d) கவிகலாஷ்
S3.Ans.(d)
Sol.
- சாம்பாஜி, தம்முடைய குடும்ப அர்ச்சகரான கவிகலாஷ் என்பவரின் ஒழுக்கக்கேடான செல்வாக்கிற்கு ஆட்பட்டிருந்தார்.
- சிவாஜி ஆக்ராவிலிருந்து தப்பியபோது வாரணாசியில் கவிகலாஷ் சாம்பாஜியின் பாதுகாவலராய் இருந்தார்.
Q4. சிவாஜியின் ராணுவத்தில் ஆரம்பகட்டத்தில் அவருக்குப் பக்கபலமாக இருந்தது
(a) பீரங்கிப்படை
(b) குதிரைப்படை
(c) காலட்படை
(d) யானைப்படை
S4.Ans.(c)
Sol.
இராணுவம்:
- இராணுவம் மீதும், இராணுவ வீரர்களுக்குப் மிகப்பெரும் பயிற்சியளிப்பதிலும் சிவாஜி கவனம் செலுத்தினார்.
- தொடக்கத்தில் காலாட்படையே அவரது இராணுவத்தின் முதுகெலும்பாகத் திகழ்ந்தது.
Q5. குஜராத் மற்றும் மாளவத்தை முகலாய ஆதிக்கத்திலிருந்த விடுபட அவர்களுக்கெதிராக போரை அறிவித்தவர்
(a) பாலாஜி விஸ்வநாத்
(b) பாஜிராவ்
(c) பாலாஜி பாஜிராவ்
(d) ஷாகு
S5.Ans.(b)
Sol.
- மாளவத்திற்கும், குஜராத்திற்கும் எதிராகப் போர்ப் பிரகடனம் செய்த பாஜிராவ் அவற்றை மேலாதிக்கத்திலிருந்து முகலாயரின் விடுவித்தார்.
- கோடிட்ட இடங்களை நிரப்புக.
- மகாராஷ்டிராவில் பரவிய _________________ இயக்கம் மராத்திய மக்களிடையே விழிப்புணர்வும் இணக்கமும் ஏற்பட உதவியது. (பக்தி)
- பேஷ்வாக்களின் முக்கிய வருவாய் அலுவலர் _________________ (காமவிஸ்தார்)
- மராத்தியர்களின் குறுகிய காலப் பேரரசு 1761 ஆம் ஆண்டு ________________ இடத்தில் சோகமாய் முடிந்தது. (டெல்லிக்கு அருகேயுள்ள பானிப்பட்டில்)
- அஷ்டபிரதானில் இடம்பெற்ற வெளியுறவுத்துறை அமைச்சர்
_________________. (சுமந்த் / துபிர்)
- சிவாஜியைத் தொடர்ந்து_________________ வுடனான சச்சரவிற்குப் பின்னர் சாம்பாஜி ஆட்சிப் பொறுப்பேற்றார். (அனாஜி தத்தோவுடனான)
III.
Q6.பொருத்துக
A.ஷாஜி போன்ஸ்லே–1.சிவாஜியின் தாய்
B.சாம்பாஜி–2.பீஜப்பூர் தளபதி
C.ஷாகு–3.சிவாஜியின் தந்தை
D.ஜீஜாபாய்–4.சிவாஜியின் மகன்
E.அப்சல்கான்–5.சிவாஜியின் பேரன்
(a) 5 4 2 1 3
(b) 5 4 3 1 2
(c) 3 4 5 1 2
(d) 4 2 5 1 3
S6.Ans.(c)
Sol.
- ஷாஜி போன்ஸ்லே – சிவாஜியின் தந்தை
- அப்சல்கான் – பீஜப்பூர் தளபதி
- ஜீஜாபாய் – சிவாஜியின் தாய்
- சரியா? தவறா?
- மலை மற்றும் மலைப்பள்ளத்தாக்குகள் மராத்தியர்களை அந்நிய படையெடுப்பாளர்களிடமிருந்து பாதுகாத்தது. (சரி)
- பக்தி இயக்கத்தின் மந்திரங்கள் சமஸ்கிருதத்தில் இயற்றப்பட்டது, அனைத்து சமூகத்தினராலும் பக்தி இயக்கப் பாடல்கள் பாடப்பட்டன.(சரி)
- சிவாஜி புரந்தரை முகலாயர்களிடமிருந்து கைப்பற்றினார் (சரி)
- தேஷ்முக்குகள் கிராமங்களில் வாழ்ந்தனர், அவர்கள் 20 முதல் 200 வரையிலான கிராமங்களில் தங்களின் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். (சரி)
- அப்தாலி டெல்லியை கைப்பற்றுவதற்கு பத்துமுறை படையெடுத்தார். (தவறு)
- கீழ்க்காணும் கூற்றுகளை ஆய்க. பொருத்தமான விடையை (√) டிக் இட்டுக் காட்டவும்:
Q7. கூற்று: மராத்தியப் போர்வீரர்கள் தங்கள் வசிப்பிடத்திற்குத் தொலைவில் உள்ள கோட்டைகளிலும், நகரங்களிலும் வாழ்ந்தனர்.
காரணம்: மராத்திய வீரர்கள் ஒவ்வோர் ஆண்டும் போர்க்களத்திலிருந்து தங்கள் நிலங்களின் வேளாண் பணிகளுக்காகச் சென்று வருவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது.
(a) கூற்றிற்கான காரணம் சரி
(b) கூற்றிற்கான காரணம் தவறு
(c) கூற்று சரி, காரணம் தவறு
(d) கூற்று மற்றும் காரணம் தவறு
S7.Ans.(a)
Sol.
- மராத்தியப் போர்வீரர்கள் தங்கள் வசிப்பிடத்திற்குத் தொலைவில் உள்ள கோட்டைகளிலும், நகரங்களிலும் வாழ்ந்தனர்.
- மராத்திய வீரர்கள் ஒவ்வோர் ஆண்டும் போர்க்களத்திலிருந்து தங்கள் நிலங்களின் வேளாண் பணிகளுக்காகச் சென்று வருவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது.
Q8. வாக்கியம் – I: செய்திப்பரிமாற்றக் கடிதங்கள் அடங்கிய கோப்புகளையும், கணக்குப் பதிவேடுகளையும் மதிப்பீடு செய்கையில், ஆவணங்களைத் துல்லியமாகப் பராமரிப்பதில் பேஷ்வாக்கள் கவனமுடன் இருந்தனர்.
வாக்கியம் – II: இரண்டாம் பானிப்பட் போரில் பீரங்கிப்பட முக்கியத்துவம் பெற்றிருந்தது
(a) I சரி
(b) II சரி
(c) I மற்றும் II சரி
(d) I மற்றும் II தவறு
S8.Ans.(c)
Sol.
- செய்திப்பரிமாற்றக் கடிதங்கள் அடங்கிய கோப்புகளையும், கணக்குப் பதிவேடுகளையும் மதிப்பீடு செய்கையில், ஆவணங்களைத் துல்லியமாகப் பராமரிப்பதில் பேஷ்வாக்கள் கவனமுடன் இருந்தனர்.
- 1761இல் நடைபெற்ற மூன்றாம் பீரங்கிப் படைகள் பானிப்பட்போரைப் தீர்மானித்தன.
- பொருந்தாததைக் கண்டுபிடிக்க
ரகுஜி, ஷாஜி போன்ஸ்லே, சிவாஜி, சாம்பாஜி, ஷாகு,
Q9. தவறான இணையைக் கண்டுபிடிக்க
(a) கெய்க்வாட் – பரோடா
(b) பேஷ்வா – நாக்பூர்
(c) ஹோல்கர் – இந்தூர்
(d) சிந்தியா – குவாலியர்
S9.Ans.(b)
Sol.
முக்கிய மராத்தியக் குடும்பங்கள்
- கெய்க்வாட் – பரோடா
- பான்ஸ்லே – நாக்பூர்
- ஹோல்கார் – இந்தூர்
- சிந்தி அல்லது சிந்தியா – குவாலியர்
- பேஷ்வா – புனே
Q10.காலவரிசைப்ப டி நிகழ்வுகளை வரிசைப்ப டுத்துக.
- சிவாஜி, தம் பாதுகாவலர் இறந்தவுடன் சுதந்திரமான அரசரானார்.
II பாலாஜி பாஜிராவ் அரசப்பதவி ஏற்றார்.
III சிவாசியின் தந்தை இறந்தவுடன் ஜாவலியின் மீது படையெடுத்தார்.
IV பாலாஜி விஸ்வநாத் பேஷ்வாவாக பொறுப்பேற்றார்.
(a) IV II III I
(b) III II IV I
(c) II III IV I
(d) I III IV II
S10.Ans.(d)
Sol. I III IV II
**************************************************************************
Adda247 TamilNadu Home page | Click here |
Official Website=Adda247 | Click here |