Tamil govt jobs   »   Latest Post   »   TNPSC Samacheer Book Back Questions Tamil...
Top Performing

TNPSC Samacheer Book Back Questions Tamil Medium – Emergence of New Kingdoms in South India

TNPSC Samacheer Book Back Questions: ADDA 247 Tamil is giving you TNPSC Samacheer Book Back Questions – Emergence of New Kingdoms in South India MCQs for all competitive exams. Here you get Multiple Book Back Choice Questions and Answers. Here you will find all the important questions and answers that will help you increase your knowledge and move you toward fulfilling your goals. Study these TNPSC Book Back Questions MCQs and succeed in the exams.

Attend TNPSC Book Back Question Quiz Here

சரியான விடையைத் தேர்வு செய்க:

  1. பிற்கால சோழ வம்சத்தை மீட்டெழச் செய்தவர் யார்?

(a) விஜயாலயன்

(b) முதலாம் ராஜராஜன்

(c) முதலாம் ராஜேந்திரன்

(d) அதிராஜேந்திரன்

S1.Ans.(a)

Sol.

  • ஒன்பதாம் நூற்றாண்டில் காவிரிக்கு வடக்கே ஒரு சிறு பகுதியை ஆண்டுவந்த விஜயாலயன் சோழ வம்சத்தை மீட்டெழச்செய்தார்.
  • அவர் தஞ்சாவூரைக் கைப்பற்றி அதைத் தனது தலைநகராக ஆக்கினார்.

 

  1. கீழ்க்காணும் பாண்டிய அரசர்களுள், களப்பிரர் ஆட்சியை முடித்துவைத்தவர் என அறியப்படுபவர் யார்?

(a) கடுங்கோன்

(b) வீரபாண்டியன்

(c) கூன்பாண்டியன்

(d) வரகுணன்

S2.Ans.(a)

Sol.

  • கடுங்கோன் எனும் பாண்டிய அரசன் 6ஆம் நூற்றாண்டின் இறுதியில் களப்பிரர்களிடமிருந்து பாண்டியர்களின் பகுதிகளை மீட்டார். 
  • அவரைத் தொடர்ந்து வேறு இருவர் அரச பதவி ஏற்றனர்.
  1. கீழ்க்காண்பனவற்றுள் சோழர்களின் நிர்வாகத்தில் மிகச் சிறிய அலகு எது?

(a) மண்டலம் 

(b) நாடு

(c) கூற்றம் 

(d) ஊர்

S3.Ans.(c)

Sol.

  • சோழ அரசர்கள் நன்கு கட்டமைக்கப்பட்ட நிர்வாக முறையை உருவாக்கியிருந்தனர்.
  • நிர்வாக வசதிக்காகப் பேரரசு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தன. 
  • ஒவ்வொரு மண்டலமும் பல நாடுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தன.
  • ஒவ்வொரு நாடு பிரிவுக்குள்ளும் பல கூற்றங்கள் கிராமங்களின் தொகுப்பு) இடம் பெற்றிருந்தன.
  • கிராமமே நிர்வாக அமைப்பின் மிகச் சிறிய அலகாகும்.
  1. விஜயாலயன் வழி வந்த சோழ வம்சத்தின் கடைசி அரசர் யார்?

(a) வீர ராஜேந்திரன்

(b) ராஜாதிராஜா

(c) அதி ராஜேந்திரன்

(d) இரண்டாம் ராஜாதிராஜா

S4.Ans.(c)

Sol.

  • முதலாம் ராஜேந்திர சோழனைத் தொடர்ந்து பதவியேற்ற மூவரும் திறமை வாய்ந்த அரசர்களாக இல்லை. 
  • மூன்றாவதாகப் பதவி ஏற்ற வீர ராஜேந்திரனின் மகன் அதி ராஜேந்திரன் உள்நாட்டுக் கலகம் ஒன்றில் கொல்லப்பட்டார். 
  • அவருடன் விஜயாலயனின் வழிவந்தோரின் ஆட்சி முடிவுக்கு வந்தது.

 

  1. சோழர்களின் கட்டடக்கலைக்கான எடுத்துக்காட்டை எங்குக் காணலாம்?

(a) கண்ணாயிரம் 

(b) உறையூர்

(c) காஞ்சிபுரம் 

(d) தஞ்சாவூர்

S5.Ans.(d)

Sol.

  • சோழர்கள் காலத்தில் பிரமாண்டமான கோவில்கள் கட்டப்பட்டன.  
  • தஞ்சாவூர், கங்கைகொண்ட சோழபுரம், தாராசுரம் ஆகிய இடங்களிலுள்ள கோவில்கள் சோழர்களின் கலைகளான கட்டடங்கள், சிற்பங்கள், செப்புச்சிலைகள், ஓவியங்கள், படிமவியல் ஆகியவற்றின் களஞ்சியமாக உள்ளன. 

 

  1. கீழ்க்காண்பனவற்றுள் எந்த இந்தியப் பகுதிக்கு மார்க்கோபோலோ 13ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் சென்றார்?

(a) சோழமண்டலம்

(b) பாண்டிய நாடு

(c) கொங்குப்பகுதி

(d) மலைநாடு

S6.Ans.(b)

Sol.

  • பாண்டிய அரசு “செல்வச் செழிப்பு மிக்க, உலகிலேயே மிக அற்புதமான பகுதியாகும்” என மார்க்கோ போலா புகழாரம் சூட்டுகிறார்.
  • இலங்கையோடு சேர்ந்து உலகத்தில் காணப்படும் பெரும்பாலான மாணிக்கக்கற்களையும்முத்துக்களையும் உற்பத்தி செய்கிறது என மேலும் கூறுகிறார்.
  • தன்னுடைய பயணக் குறிப்புகளில் ‘சதி’ (உடன்கட்டை ஏறுதல்) நிகழ்வுகளையும் அரசர்களின் பலதார மணத்தையும் பதிவு செய்துள்ளார்.
  • வெனிஸ் நாட்டைச் சேர்ந்த புகழ் பெற்ற பயணியான மார்க்கோபோலோ இரண்டு முறை (1288, 1293) காயலுக்கு வருகைதந்தார். 

 

  1. கோடிட்ட இடங்களை நிரப்புக:
  2. _________ தஞ்சாவூரிலுள்ள புகழ்பெற்ற பிரகதீஸ்வரர் கோவிலை நிர்மாணித்தார். ((ராஜராஜா I (கி.பி. (கி.பி.) 985 – 1014))
  3. __________வேதக் கல்லூரி ஒன்றை எண்ணாயிரத்தில் நிறுவினார். (இராஜேந்திரன் I)
  4. ___________ வேள்விக்குடிசெப்பேடுகளின் கொடையாளி ஆவார். (ஜடிலபராந்தக நெடுஞ்சடையன் (முதலாம் வரகுணன் (756 – 815) )
  5. பாண்டியப் பேரரசின் அரசுச் செயலகம் ____________என அறியப்பட்டது. (எழுத்து மண்டபம்)

III. 

Q7.பொருத்துக:

  1. மதுரைஉள்நாட்டு வணிகர்
  2. கங்கைகொண்ட சோழபுரம்—கடல்சார் வணிகர்
  3. அஞ்சுவண்ணத்தார் சோழர்களின் தலைநகர்
  4. மணிகிராமத்தார் பாண்டியர்களின் தலைநகர்

(a) 2 1 4 3

(b) 2 3 4 1

(c) 1 3 2 4

(d) 4 3 2 1

S7.Ans.(d)

Sol.

  • சோழர்களின் காலத்தில் வணிகம் தழைத்தோங்கியது.
  • ‘அஞ்சு – வண்ணத்தார்’, ‘மணி – கிராமத்தார்’ எனப்படும் வணிகக் குழு அமைப்புகளைச் (கில்டு) சேர்ந்த வணிகர்கள் வணிக நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
  1. சரியா? தவறா?
  2. டெல்லி சுல்தானுக்குக் கட்டுப்பட்ட ஒரு முஸ்லீம் அரசு மதுரையில் உருவானது. சரி
  3. கூடல் நகர் காவலன்என்பது பாண்டிய அரசரின் பட்டமாகும். சரி
  4. சோழ அரசு வைகையின் கழிமுகப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்தது. தவறு
  5. முதலாம் குலோத்துங்கன் சாளுக்கியசோழ அரச வம்சத்தைச் சேர்ந்தவர்.சரி
  6. சோழ அரசரின் மூத்த மகன் யுவராஜன் என அழைக்கப்பட்டார்.சரி
  7. கீழ்க்காணும் கூற்றுகளை ஆய்க

பொருத்தமான விடையை (√ ) டிக் இட்டுக் காட்டவும்

Q8. பிற்காலச் சோழர்கள் பற்றிய கீழ்க்காணும் கூற்றுகளில் எவை சரியானவை?

  1. அவர்கள் ஓர் உள்ளாட்சித் துறைத் தன்னாட்சி அமைப்பைக் கொண்டிருந்தனர்.
  2. அவர்கள் வலுவான கப்பற்படையைக் கொண்டிருந்தனர்.
  3. அவர்கள் பௌத்தத்தைப் பின்பற்றினர்.
  4. அவர்கள் பெரிய கோவில்களைக் கட்டினர்.

(a) 1, 2 மற்றும் 3

(b) 2, 3 மற்றும் 4

(c) 1, 2 மற்றும் 4

(d) 1, 3 மற்றும் 4

(a)1,2 and 3

(b)2,3 and 4

(c)1,2 and 4

(d)1,3 and 4

S8.Ans.(c)

Sol. 

  • சோழர்கள் சைவத்தின் மீது மிகுதியான பற்றுக் கொண்டவராவர். 
  • சிவபெருமானின் திருவிளையாடல்கள் சைவ அடியார்களான நாயன்மார்களால் பாடல்களாக இயற்றப்பட்டுள்ளன.
  • நம்பியாண்டார் நம்பியால் தொகுக்கப்பட்ட அவை ‘திருமுறைகள்’ என அழைக்கப்படுகின்றன.

Q9. ராஜேந்திர சோழனைப் பற்றிய கீழ்க்காணும் கூற்றுகளில் எவை சரியானவை?

  1. அவர் கங்கைகொண்ட சோழன் எனும் பட்டத்தைச் சூட்டிக்கொண்டார்.
  2. அவர் தெற்கு சுமத்ராவைக் கைப்பற்றினார்.
  3. அவர் சோழர்களின் அதிகாரத்தை நிலைநிறுத்தினார் எனப் போற்றப்படுகிறார்.
  4. அவர் ஸ்ரீவிஜயத்தைக் கைப்பற்ற அவருடைய கப்பற்படை உதவியது.

(a) 1 மற்றும் 2

(b) 3 மற்றும் 4

(c) 1, 2 மற்றும் 4

(d) இவை அனைத்தும்

S9.Ans.(d)

Sol.  இவை அனைத்தும்

Q10. கூற்று : யுவராஜாக்கள் மாநிலங்களின் ஆளுநர்களாகப் பணியமர்த்தப்பட்டனர்.

காரணம்: நிர்வாகத்தில் பயிற்சி பெறுவதற்காக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

(a) காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமே.

(b) காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமல்ல.

(c) கூற்று தவறு, காரணம் சரி.

(d) கூற்றும் காரணமும் தவறு.

S10.Ans.(a)

Sol. காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமே.

Q11. கீழ்க்காணும் நிர்வாகப் பிரிவுகளை இறங்குவரிசையில் வரிசைப்படுத்தவும்.

  1. நாடு
  2. மண்டலம்

3.ஊர் 

  1. கூற்றம்

(a) ஊர் – மண்டலம்– நாடு – கூற்றம்

(b) மண்டலம்– ஊர் – நாடு – கூற்றம்

(c) மண்டலம்– நாடு – கூற்றம் – ஊர்

(d) மண்டலம்– ஊர் – கூற்றம் – நாடு

 

S11.Ans.(c)

Sol.மண்டலம் – நாடு – கூற்றம் – ஊர்

 

**************************************************************************

TNPSC Samacheer Book Back Questions Tamil Medium - Emergence of New Kingdoms in South India_3.1இது போன்ற தேர்விற்கான தகவல் மற்றும் பாடக்குறிப்புகளை பெற ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்
Adda247 TamilNadu Home page Click here
Official Website=Adda247 Click here
TNPSC Samacheer Book Back Questions Tamil Medium - Emergence of New Kingdoms in South India_4.1