பல்வேறு போட்டித் தேர்வுகளில் புவியியல் முக்கியப் பங்காற்றுகிறது, விண்ணப்பதாரர்களுக்கு அவர்களின் தயாரிப்பில் உதவ, நாங்கள் 30 கேள்விகளை (MCQs) தொகுத்துள்ளோம். உங்கள் புவியியல் அறிவை மேம்படுத்துவதற்கும், வரவிருக்கும் தேர்வுகளுக்கு உங்களை சிறப்பாக தயார்படுத்துவதற்கும் ஒவ்வொரு கேள்விக்கும் சரியான பதில் உள்ளது.
Q1.தமிழ்நாட்டின் எந்த தேசிய நெடுஞ்சாலையானது ஓசூரில் இருந்து கன்னியாகுமரி வரை 627.2 கிலோமீட்டர் தூரத்தை உள்ளடக்கியது?
(a) NH – 785
(b) NH – 44
(c) NH – 183
(d) NH – 81
Q2. தமிழ்நாட்டில் எந்த தேசிய நெடுஞ்சாலை மிகக் குறுகியது மற்றும் மதுரையிலிருந்து துவரங்குருச்சி வரை 38 கிலோமீட்டர் தூரம் செல்கிறது?
(a) NH – 785
(b) NH – 44
(c) NH – 183
(d) NH – 81
Q3. சரக்குப் பெட்டகங்களைக் கையாள்வதில் நாட்டிலேயே இரண்டாவது முக்கிய துறைமுகம் தமிழ்நாட்டில் உள்ள எந்த துறைமுகம்?
(a) தூத்துக்குடி துறைமுகம்
(b) எண்ணூர் துறைமுகம்
(c) சென்னை துறைமுகம்
(d) நாகப்பட்டினம் துறைமுகம்
Q4. இந்தியாவில் முதல் முழுமையான மக்கள் தொகை கணக்கெடுப்பு எந்த ஆண்டில் நடத்தப்பட்டது?
(a) 1860
(b) 1872
(c) 1881
(d) 1890
Q5.2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவில் எந்த மாநிலம் அல்லது யூனியன் பிரதேசம் அதிக பாலின விகிதத்தை பதிவு செய்துள்ளது?
(a) கேரளா
(b) புதுச்சேரி
(c) டாமன் மற்றும் டையூ
(d) மேலே எதுவும் இல்லை
Q6.2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் கல்வியறிவு பெற்றவர்களின் சதவீதம் எவ்வளவு?
(a) 0.8214
(b) 0.7404
(c) 0.6546
(d) 0.9391
Q7. அமிர்தசரஸில் இருந்து கொல்கத்தா வரை நீண்டு கொண்டிருக்கும் கிராண்ட் டிரங்க் சாலை, சிந்து சமவெளியில் இருந்து மேற்கு வங்காளத்தில் உள்ள சோனார் பள்ளத்தாக்கு வரை தனது பேரரசை வலுப்படுத்தவும் பலப்படுத்தவும் எந்த வரலாற்று நபரால் முதலில் கட்டப்பட்டது?
(a) அக்பர் தி கிரேட்
(b) அசோகர் தி கிரேட்
(c) ஷெர்ஷா சூரி
(d) சந்திரகுப்த மௌரியா
Q8.இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) எப்போது நிறுவப்பட்டது?
(a) 1975
(b) 1985
(c) 1995
(d) 2005
Q9. மும்பையில் முதல் புறநகர் ரயில் போக்குவரத்து எந்த ஆண்டில் தொடங்கப்பட்டது?
(a) 1920
(b) 1925
(c) 1930
(d) 1935
Q10. இந்தியாவின் முதல் கால்நடைக் கணக்கெடுப்பு எப்போது நடைபெற்றது?
(a) 1919
(b) 1920
(c) 1872
(d) 1881
Q11. இந்தியா புவியில் மொத்த பரப்பளவில் எத்தனை சதவீதமாகும்?
(a) 2.4 %
(b) 3.4%
(c) 3 %
(d) 4 %
Q12. இந்திய கடற்கரையின் மொத்த நீளம் மற்றும் தீவுக் கூட்டங்களையும் சேர்த்து எத்தனை கி.மீ?
(a) 15,200
(b) 4,156
(c) 6,100
(d) 7,516.6
Q13. இந்தியாவின் திட்டநேரமாக எடுத்துக்கொள்ளப்படும் 82° 30’ கிழக்கு
தீர்க்கரேகையானது எவ்வழியாக செல்கிறது?
(a) மிர்சாபூர்
(b) ராய்ப்பூர்
(c) நாக்பூர்
(d) ஜபல்பூர்
Q14. இந்தியாவிலேயே மிகப் பழமையான மடிப்பு மலைத் தொடர் எது?
(a) இமய மலை
(b) மேற்கு தொடர்ச்சி மலை
(c) கிழக்கு தொடர்ச்சி மலை
(d) ஆரவல்லி மலை
Q15. எந்த மலைகள் மேற்கு மற்றும் கிழக்கு எல்லைகளில் சுமார் 40 கிலோ மீட்டர் அகலத்துடனும் அதன் மையப் பகுதிகளில் 225 கிலோமீட்டர் அகலத்தை விடவும் காணப்படுகிறது?
(a) ட்ரான்ஸ் இமயமலை
(b) இமயமலை
(c) மத்திய இமய மலைகள் அல்லது ஹிமாச்சல்
(d) வெளிய இமயமலை அல்லது ஷிவாலிக்
Q16. இமயமலையின் முக்கியத்துவம் சரியானதை தேர்ந்தெடு.
(a) தென்மேற்கு பருவக்காற்று வட இந்திய பகுதிக்கு கனமழையை கொடுக்கிறது.
(b) இந்திய துணை கண்டத்திற்கு இயற்கை அரணாக அமைந்துள்ளது.
(c) உலகில் உள்ள 14 உயரமான சிகரங்களில் 9 சிகரங்களை தன்னகத்தை கொண்டுள்ளது.
(d) மேலே உள்ள அனைத்தும்.
Q17. சரியான இணையை தேர்ந்தெடு.
(a) காரகோரம் கணவாய் – இமாச்சலப் பிரதேஷ்
(b) ஜொஷிலா கணவாய் – அருணாச்சல பிரதேஷ்
(c) சிப்கிலா கணவாய் – ஜம்மு காஷ்மீர்
(d) நாதுலா கணவாய் – சிக்கிம்
Q18. வட பெரும் சமவெளி படிவுகளின் எந்த மண்டலம் அதிகப்படியான ஈரப்பதம் கொண்ட பகுதியாகவும், காடுகள் வளர்வதற்கும் பல்வேறு விதமான வனவிலங்குகள் வாழ்வதற்கும் ஏற்றதாக உள்ளது?
(a) காதர் சமவெளி
(b) பாங்கர் சமவெளி
(c) தராய் மண்டலம்
(d) டெல்டா
Q19. உலகின் மிகப்பெரிய மற்றும் அதிக வேகத்தில் உருவாகும் டெல்டா எது?
(a) பிச்சாவரம்
(b) சுந்தரவன டெல்டா
(c) நைல் நதி டெல்டா
(d) பிரித்தர்கனிகா
Q20. சரியான கூற்றை தேர்ந்தெடு.
- தார் பாலைவனம் ஆரவல்லி மலைத்தொடர்க்கு கிழக்கே அமைந்துள்ளது.
- இது ராஜஸ்தான் மாநிலத்தில் மூன்றில் இரண்டு பங்கு நிலப்பரப்பை கொண்டுள்ளது.
(a) 1 மட்டும்
(b) 2 மட்டும்
(c) இரண்டும்
(d) இரண்டும் இல்லை
Q21. தீபகற்ப பீடபூமியின் மிக உயரமான சிகரமான ஆனைமுடியின் உயரம் எவ்வளவு?
(a) 2965 மீ
(b) 2795 மீ
(c) 2695 மீ
(d) 2565 மீ
Q22. சரியாகப் பொருந்தாத இணை எது?
(a) காரீப் பருவம் – ஜீன் முதல் செப்டம்பர் வரை
(b) சையத் பருவம் – ஏப்ரல் முதல் ஜீன் வரை
(c) ராபி பருவம் – அக்டோபர் முதல் மார்ச் வரை
(d) எதுவுமில்லை
Q23. ஏழை மக்களின் பசு என்று அழைக்கப்படும் விலங்கு எது?
(a) மாடுகள்
(b) வெள்ளாடுகள்
(c) எருமைகள்
(d) பன்றிகள்
Q24. கீழ்கண்ட எந்த வேளாண்மை முறையை இந்தியாவில் கணிசமான விவசாயிகள் பின்பற்றுகின்றன
(a) தீவிர வேளாண்மை
(b) தன்னிறைவு வேளாண்மை
(c) படிக்கட்டு முறை வேளாண்மை
(d) வறண்ட நில வேளாண்மை
Q25. இந்தியாவில் அதிகமாக காணப்படும் மண் வகை எது?
(a) வணடல் மண்
(b) செம்மண்
(c) கரிசல் மண்
(d) உப்பு (ம) கார மண்
Q26.பின்வருவனவற்றைப் பொருத்து:
வேளாண்மையின் பெயர் – நடைபெறும் மாநிலங்கள்
- பொடு – 1. அசாம்
- பொன்னம் – 2. மத்திய பிரதேசம்
- பென்டா – 3. கேரளா
- ஜீம் – 4. ஆந்திரா
a b c d
(a) 1 2 3 4
(b) 4 3 2 1
(c) 4 1 2 3
(d) 1 3 4 2
Q27. கீழ்கண்ட எந்த மாநிலம் கடல் மீன் பிடித்தலில் முதன்மையாக உள்ளது?
(a) ஆந்திரா
(b) தமிழ்நாடு
(c) குஜராத்
(d) கேரளா
Q28. 17. எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியில் முன்னிலையில் உள்ள மாநிலம் எது?
(a) உத்திர பிரதேசம்
(b) மேற்கு வங்காளம்
(c) குஜராத்
(d) ஆந்திர பிரதேசம்
Q29. கீழ்கண்ட கூற்றுகளில் தவறானது எது?
(a) சர்க்கரை உற்பத்தியில் இந்தியா 2வது இடத்தில் உள்ளது.
(b) பருத்தி உற்பத்தியில் இந்தியா 2வது இடத்தில் உள்ளது.
(c) நிலக்கடலை உற்பத்தியில் இந்தியா 2வது இடத்தில் உள்ளது.
(d) சணல் உற்பத்தியில் இந்தியா 1வது இடத்தில் உள்ளது.
Q30. பொருத்துக.
நீர்மின்சக்தி திட்டம் – மாநிலம்
- இடுக்கி அணை – 1. கேரளா
- கொய்னா அணை – 2. மகாராஷ்டிரா
- சைலம் அணை – 3. ஆந்திரா
- தெகிரி அணை – 4. உத்ராகாண்ட்
a b c d
(a) 3 2 1 4
(b) 1 2 3 4
(c) 4 1 2 3
(d) 2 3 4 1
SOLUTION
S1. Ans. (b)
Sol. NH – 44 தமிழ்நாட்டின் மிக நீளமான தேசிய நெடுஞ்சாலையாகும், இது ஓசூரிலிருந்து தர்மபுரி , சேலம், கரூர், திண்டுக்கல், மதுரை, திருநெல்வேலி வழியாக கன்னியாகுமரி வரை 627.2 கிலோமீட்டர் தூரம் செல்கிறது.
S2. Ans. (a)
Sol.NH – 785 மதுரையிலிருந்து துவரங்குருச்சி வரை செல்லும் தமிழ்நாட்டின் மிகக் குறுகிய தேசிய நெடுஞ்சாலையாகும். (38 கி.மீ.)
S3. Ans.(c)
Sol.
S4. Ans.(c)
Sol.இந்தியாவின் முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு 1872ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டது. முழுமையான முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு 1881ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டது. நாட்டின் 15 வது மக்கள் தொகை கணக்கெடுப்பு 2011ஆம்ஆண்டு நடைபெற்றது.
S5. Ans. (a)
Sol.
S6. Ans. (b)
Sol.2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவின் கல்வியறிவு விகிதம் 74.04% ஆகும்.
S7. Ans. (c)
Sol.ஷெர்சா சூர் தன்னுடைய பேரரசை பலப்படுத்தவும் ஒருங்கிணைக்கவும் சாஹி (ராயல்) சாலையை சிந்து பள்ளத்தாக்கிலிருந்து மேற்கு வங்காளத்தில்
உள்ள சோனார் பள்ளத்தாக்கு வரை அமைத்தார். கொல்கத்தாவிலிருந்து பெஷாவர் வரை உள்ள இச்சாலை ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கிராண்ட் ட்ரங்க்சாலை என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. தற்போது இச்சாலை
அமிர்தரசிலிருந்து கொல்கத்தாவரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
S8. Ans.(c)
Sol.National Highways Authority of India (NHAI) 1995 இல் நிறுவப்பட்டது. இது சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகத்தின் கீழ் ஒரு தன்னாட்சி அமைப்பாகும்.
S9. Ans. (b)
Sol. முதல் புறநகர் இரயில் 1925 இல் மும்பையில் தொடங்கப்பட்டது.
S10. விடை (a)
Sol.இந்தியாவின் முதல் கால்நடை கணக்கெ டுப்பு 1919இல் மிகக் குறைந்த பால் பண்ணை கால்நடைக ளுடன் எடுக்கப்பட்டது.
S11. Ans. (a)
Sol.இந்தியாவின் நிலப்பரப்பு 32,87,263 ச.கி.மீ ஆகும். இது புவியில் மொத்த பரப்பளவில் 2.4 சதவீதமாகும். இந்தியா பரப்பளவில் உலகின் ஏழாவது பெரிய நாடாக உள்ளது.
S12. Ans. (d)
Sol.இந்திய கடற்கரையின் மொத்த நீளம் மற்றும் தீவுக் கூட்டங்களையும் சேர்த்து 7,516.6 கி.மீ. ஆகும். இந்தியாவையும் இலங்கையையும் பிரிக்கும் குறுகிய ஆழமற்ற கடல் பகுதி பாக் நீர்ச ந்தி ஆகும்.
S13. Ans. (a)
Sol.இந்தியாவின் மத்திய தீர்க்கரேகையான 82° 30’ கிழக்கு தீர்க்கரேகையின் தலநேரம், இந்திய திட்டநேரமாக எடுத்துக்கொள்ளப்படுகிறது. இத்தீர்க்கரேகை மிர்சாபூர் (அலகாபாத்) வழியாக செல்கிறது. இந்திய திட்ட நேரமானது கீரீன்வீச் திட்ட நேரத்தை விட 5 மணி 30 நிமிடம் முன்னதாக உள்ளது.
S14. Ans. (d)
Sol.ஆரவல்லி மலைத்தொ டர் இந்தியாவிலேயே மிகப் பழமையான மடிப்பு மலைத்
தொடராகும்.
S15. Ans. (a)
Sol.ட்ரான்ஸ் (மேற்கு) ஹிமாலய மலைகள் மேற்கு மற்றும் கிழக்கு எல்லைகளில் சுமார் 40 கிலோ மீட்டர் அகலத்துடனும் அதன் மையப் பகுதிகளில் 225 கிலோமீட்டர் அகலத்தை விடவும் காணப்படுகிறது.
S16. Ans. (d)
Sol.இமயமலையின் முக்கியத்துவம்
தென்மேற்கு பருவக்காற்றைத்தடுத்து வட இந்திய பகுதிக்கு கனமழையைக் கொடுக்கிறது.
இந்திய துணைக்கண்டத்திற்கு இயற்கை அரணாக அமை ந்துள்ளது.
வற்றாத நதிகளின் பிறப்பிடமாக உள்ளது. (எ.கா) சிந்து, கங்கை , பிரம்ம புத்திரா மற்றும் பிற ஆறுகள்.
இயற்கை அழகின் காரணமாக வடக்கு மலைகள் சுற்றுலா பயணிகளின் சொர்க்கமாகத் திகழ்கிறது.
உலகில் உள்ள 14 உயரமான சிகரங்களில் 9 சிகரங்களை தன்னகத்தை கொண்டுள்ளது.
S17. Ans. (d)
Sol.காரகோரம் கணவாய் (ஜம்மு-காஷ்மீர்), ஜொஷிலா கணவாய், சிப்கிலா கணவாய் (இமாச்சல் பிரதேசம்) பொமிடிலா கணவாய் (அருணாச்சலபிரதேசம்) நாதுலா மற்றும் ஜெலிப்லா கணவாய் (சிக்கிம்) ஆகியன இமயமலையின் முக்கியக் கணவாய்களாகும்.
S18. Ans. (c)
Sol.தராய் மண்டலம் அதிகப்படியான ஈரப்பதம் கொண்ட பகுதியாகவும், காடுகள் வளர்வத ற்கும் பல்வே று விதமான வனவிலங்குகள் வாழ்வத ற்கும் ஏற்றதாக உள்ளது. இம்மண்டலம் பாபர் பகுதிக்கு தெ ற்கில் அமைந்துள்ளது. இது சுமார் 15 கி.மீ முதல் 30 கி.மீ வரை அகலம் கொண்டது.
S19. Ans. (b)
Sol.சுந்தரவன டெல்டா உலகின் மிகப்பெ ரிய மற்றும் அதிக வே கத்தில் உருவாகும் டெல்டா ஆகும். இப்பகுதியில் ஆறுகளின் வே கம் குறை வாக இருப்பதால், படிவுகள் படியவை க்கப்படுகின்றன . டெல்டா சமவெ ளி புதிய வண்டல் படிவுகள், பழை ய வண்டல் படிவுகள் மற்றும் சதுப்புநிலங்களைக் கொண்ட ஒரு பகுதியாக உள்ளது. வண்டல் சமவெ ளியில் உயர் நிலப்பகுதி “சார்ஸ்” (Chars) எனவும் சதுப்பு நிலப்பகுதி “பில்ஸ்” (Bils) எனவும் அழை க்கப்படுகின்றன .
S20. Ans. (b)
Sol.பெரிய இந்திய பாலைவனம், தார் பாலைவனம் என்றும் அழைக்கப்படுகிறது. இது உலகின் 7 வது மிகப்பெரிய பாலைவனமாகும். இப்பாலைவனம் ஆரவல்லி மலைத்தொடரில் மேற்கே , ராஜஸ்தான் மாநிலத்தின் மூன்றில் இரண்டு பங்கு நிலப்பரப்பை கொண்டுள்ளது.
S21. Ans. (c)
Sol.தீபகற்ப பீடபூமியின் மிக உயரமான சிகரமான ஆனைமுடியின் உயரம் 2695மீ.
S22. Ans. (d)
Sol.
காரீப் பருவம் – ஜீன் முதல் செப்டம்பர் வரை
சையத் பருவம் – ஏப்ரல் முதல் ஜீன் வரை
ராபி பருவம் – அக்டோபர் முதல் மார்ச் வரை
S23. Ans. (b)
Sol.வெள்ளாடுகள் – ஏழை மக்களின் பசு என்று அழைக்கப்படும் விலங்கு
S24. Ans. (b)
Sol.தன்னிறைவு வேளாண்மை முறையை இந்தியாவில் கணிசமான விவசாயிகள் பின்பற்றுகின்றன. இந்தியாவில் 50 விழுக்காட்டுக்கு மேல் மக்கள் வேளாண்மையை முக்கிய தொழிலாக கொண்டுள்ளனர்.
S25. Ans. (b)
Sol.செம்மண் பரவியுள்ள இடங்கள் – தக்காண பீடபூமியின் கிழக்குப் பகுதி, தெ ன் மாநிலங்களான கே ரளா, தமிழ்நாடு, கர்நாடககா மற்றும் சோட்டா நாகபுரி பீடபூமி, ஜார்க்கண்ட்.
S26. Ans. (b)
Sol.இந்தியாவில் உள்ள இடப்பெயர்வு வேளாண்மை யின் பல்வே று பெ யர்கள்
பெ யர் மாநிலம்
ஜூம் – அசாம்
பொன்னம் – கேரளா
பொ டு – ஆந்திரப்பிரதேசம் மற்றும் ஒடிசா
பீவார், மாசன், பென்டா , பீரா – மத்தியப்பிரதே சம்
S27. Ans. (d)
Sol.கே ரளா கடல்மீன் உற்ப த்தியில் முதன்மை யானதாக உள்ள து.
S28. Ans. (c)
Sol.இந்தியாவில் குஜராத் மாநிலம் எண்ணெ ய் வித்துக்க ள் உற்ப த்தியில் முதலிடத்தில் உள்ளது. நிலக்கடலை உற்பத்தியில் சீனாவுக்கு அடுத்தப டியாக உலகில் இரண்டாவது இடத்தை இந்தியா வகிக்கிறது.
S29. Ans. (a)
Sol.நிலக்கடலை உற்பத்தியில் சீனாவுக்கு அடுத்தப டியாக உலகில் இரண்டாவது இடத்தை இந்தியா வகிக்கிறது. சர்க்கரை உற்பத்தியில் நம் நாடு கியூபா மற்றும் பிரே சிலுக்கு அடுத்த படியாக மூன்றா வது இடத்தில் உள்ள து. பருத்தி உற்பத்தியில் சீனாவிற்கு அடுத்த படியாக இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளது.
S30. Ans. (b)
Sol.இடுக்கி அணை – கேரளா
கொய்னா அணை – மகாராஷ்டிரா
சைலம் அணை – ஆந்திரா
தெகிரி அணை – உத்ராகாண்ட்
**************************************************************************
Adda247 TamilNadu Home page | Click here |
Official Website=Adda247 | Click here |