Tamil govt jobs   »   Study Materials   »   UNESCO World Heritage Sites in India
Top Performing

UNESCO World Heritage Sites in India

UNESCO World Heritage Sites in India: UNESCO World Heritage Site is a place that is recognized by the United Nations Educational, Scientific and Cultural Organization (UNESCO). In India, There are 40 UNESCO World Heritage Sites. Here is the List of UNESCO World Heritage Sites in India. 

There are many places in the world that are recognized as World Heritage Sites by UNESCO. In 1972, UNESCO adopted the Convention Regarding the Protection of the World Cultural and Natural Heritage.

UNESCO World Heritage Sites in India

UNESCO World Heritage Sites in India : உலக பாரம்பரியக் களம் (World Heritage Site) என்பது, யுனெஸ்கோவின் உலக பாரம்பரியக் குழுவினால் நிர்வகிக்கப்படும் அனைத்துலக உலக பாரம்பரியங்கள் திட்டத்தின் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ள ஒரு களம் ஆகும். இது காடு, மலை, ஏரி, பாலைவனம், நினைவுச் சின்னம், கட்டிடம், நகரம் போன்ற எதுவாகவும் இருக்கலாம். இவை நமது கடந்த காலத்திலிருந்து நமக்கு மரபுவழி அளிக்கப்பட்டு, இன்று நாம் அவற்றுடன் வாழ்ந்த பின்னர், தொடர்ந்து வருங்காலத்தில் நமது சந்ததியினருக்கு அளிக்க வேண்டிய, மாற்றீடு செய்யப்பட முடியாத, சிறந்த வாழ்வையும், மன ஊக்கத்தையும் தரக்கூடிய, இயற்கை மற்றும் பண்பாட்டு மூலவளங்களாகும். இவை உலகின் எந்த இடத்தில் அமைந்திருந்தாலும், உலக மக்கள் அனைவருக்கும் சொந்தமான ஒன்றாகக் கருதப்படுவதனால், இவை தனித்துவமானவையாக இருக்கின்றன. UNESCO World Heritage Sites in India பற்றிய தகவல்களை, நாங்கள் உங்களுக்கு இந்த கட்டுரையில் வழங்கியுள்ளோம்.

Fill the Form and Get All The Latest Job Alerts

UNESCO World Heritage Sites

ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு நிறுவனம், உலக பாரம்பரியக் களங்களைக் கண்டுபிடித்து, அவற்றைப் பேணிப் பாதுகாப்பதை ஊக்குவிக்கின்றது.

யுனெஸ்கோவின் உலக பாரம்பரியக் குழு, நாடுகளின் பொதுக் குழுவினால் தெரிவு செய்யப்படும். இந்த உலகப் பாரம்பரியக் குழுவானது 21 பிரதிநிதிகளைக் கொண்டிருப்பதுடன், இந்தப் பிரதிநிதிகள் ஒரு ஆண்டில் ஒருமுறை ஒன்றாகக் கூடுவார்கள். இந்தப் பிரதிநிதிகள் ஆறு ஆண்டுகாலம் தொடர்ந்து குழுவில் இருக்க முடியும் என்றாலும், வேறு நாடுகளுக்கும் குழுவில் இருக்கும் சந்தர்ப்பத்தை அளிப்பதற்காக, பொதுவாக நான்கு ஆண்டுகளில் குழு உறுப்பினர் பதவியை விட்டுக் கொடுப்பார்கள். இவர்கள் தேர்ந்தெடுக்கப்படும் நாடுகள், உலகப் பாரம்பரியக் களங்களுக்கான சாசனத்தில் கையொப்பமிட்டு, ஏற்புறுதி அளித்தவையாக இருக்கும்.

இந்தக் குழுவே, பாரம்பரியக் களங்களுக்கான பட்டியலில் சேர்க்கப்பட வேண்டிய புதிய களங்களைத் தெரிவு செய்வதற்குப் பொறுப்பாகவும், சாசனத்தில் உள்ள விடயங்கள் சரியாக நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதிப்படுத்துவதாகவும் இருக்கும்.

போர்க்காலங்களிலும் இந்தச் சின்னங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுத்தக் கூடாது என்பது, இதன் முக்கிய அம்சம் என்பது குறிப்பிடத்தக்கது. பாரம்பரியத்துக்கு இன்றியமையாத இயற்கை மற்றும் பண்பாட்டு முக்கியத்துவம் வாய்ந்த சிறப்பான களங்களைப் பட்டியலிட்டு, அவற்றைப் பாதுகாப்பதே இத்திட்டத்தின் முக்கியமான நோக்கமாகும்.

Read More: List of World Heritage Sites in India | இந்தியாவில் உள்ள உலக பாரம்பரிய தளங்களின் பட்டியல்

UNESCO World Heritage Sites in India – History

1972 இல் உலக பாரம்பரியக் களத்தை உருவாக்குவதற்காக உருவாக்கப்பட்ட சாசனத்தை, இந்தியா நவம்பர் 14, 1977 இல் ஏற்றுக் கொண்டது. இந்தியா உலக பாரம்பரியக் களங்களின் பட்டியலில், ஏழாவது இடத்தில் உள்ளது. 2018 வரை இந்தியாவில் உலகப் பாரம்பரியக் களங்களாக 37 இடங்கள் யுனெஸ்கோவினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இவை 1972 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட யுனெஸ்கோ உலக பாரம்பரிய நெறிமுறையில் வரையறுக்கப்பட்டபடி பண்பாடு அல்லது இயற்கைச் சிறப்புமிக்க இடங்களாகும்.

இந்தியாவின் முதல் இரண்டு பாரம்பரியக் களங்களாக, ஆக்ரா கோட்டையும், அஜந்தா குகைகளும் 1983 ஆம் ஆண்டு உலகப் பாரம்பரியத்தின் ஏழாவது மாநாட்டில் ஏற்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து, மேலும் 27 இடங்கள் பாரம்பரியக் களங்களாக ஏற்கப்பட்டுள்ளன. இந்தப் பட்டியலில், 2012 ஆம் ஆண்டு மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர் சேர்க்கப்பட்டது. இந்தியாவின் 29 பாரம்பரியக் களங்களில் 23 பண்பாட்டு பாரம்பரிய இடங்களாகவும், ஏனைய ஆறு இயற்கை பாரம்பரிய இடங்களாகவும் உள்ளன.

Also Read: Temples in Tamil Nadu | தமிழ்நாட்டில் உள்ள கோவில்கள்

List of World Heritage Sites in India

S.No Name of Sites Year Location
1 Ajanta Caves 1983 Maharashtra
2 Ellora Caves 1983 Maharashtra
3 Agra Fort 1983 Agra
4 Taj Mahal 1983 Agra
5 Sun Temple 1984 Orissa
6 Mahabalipuram Monuments 1984 Tamil Nadu
7 Kaziranga National Park 1985 Assam
8 Keoladeo National Park 1985 Rajasthan
9 Manas Wildlife Sanctuary 1985 Assam
10 Churches and Convents of Goa 1986 Goa
11 Monuments of Khajuraho 1986 Madhya
Pradesh
12 Monuments of Hampi 1986 Karnataka
13 Fatehpur Sikri 1986 Agra
14 Elephanta Caves 1987 Maharashtra
15 Great Living Chola Temples 1987 Tamil Nadu
16 Pattadakal Monuments 1987 Karnataka
17 Sundarbans National Park 1987 West Bengal
18 Nanda Devi & Valley of Flowers
National Park
1988 Uttarakhand
19 Monuments of Buddha 1989 Sanchi,
Madhya
Pradesh
20 Humayun’s Tomb 1993 Delhi
21 Qutub Minar and its Monuments 1993 Delhi
22 Mountain Railways of Darjeeling, Kalka Shimla & Nilgiri 1999 Darjeeling
23 Mahabodhi
Temple
2002 Bihar
24 Bhimbetka Rock Shelters 2003 Madhya Pradesh
25 Chhatrapati
Shivaji Terminus
2004 Maharashtra
26 ChampanerPavagadh Archaeological Park 2004 Gujarat
27 Red Fort 2007 Delhi
28 Jantar Mantar 2010 Delhi
29 Western Ghats 2012 Karnataka,
Kerala,
Tamil Nadu,
Maharashtra
30 Hill Forts 2013 Rajasthan
31 Rani Ki Vav (The Queen’s Stepwell) 2014 Gujarat
32 Great Himalayan
National Park
2014 Himachal
Pradesh
33 Nalanda 2016 Bihar
34 Khangchendzonga National Park 2016 Sikkim
35 Architectural Work of Le Corbusier (Capitol Complex) 2016 Chandigarh
36 The Historic City 2017 Ahmedabad
37 Victorian Gothic and Art Deco Ensembles 2018 Mumbai
38 The Pink City 2019 Jaipur
39 Kakatiya Rudreshwara (Ramappa) Temple 2021 Telangana
40 Dholavira 2021 Gujarat

READ MORE: Government of Tamil Nadu | தமிழ்நாடு அரசு

Process of Nomination of the Sites

ஒவ்வொரு நாடும், தனது நாட்டிலுள்ள பண்பாட்டு, இயற்கை முக்கியத்துவம் உள்ள களங்களைக் கணக்கெடுக்க வேண்டும். இது ஆய்விற்கான ஒரு பட்டியலாகக் கொள்ளப்படும். இந்தப் பட்டியலில் இருந்து தெரிவு செய்யப்படும் களத்தை உலக பாரம்பரியக் களத்திற்காக குறிப்பிட்ட நாடு முன்மொழியலாம். இந்தப் பட்டியலில் இல்லாத ஒரு களத்தை, உலக பாரம்பரியக் களத்திற்காக ஒரு நாடு முன்மொழியக் கூடாது.
அப்படி முன்மொழியப்பட்ட களங்களை நினைவுச்சின்னங்களுக்கும் களங்களுக்குமான அனைத்துலக அவையும், பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கமும் மதிப்பீடு செய்யும். பின்னர் குறிப்பிட்ட களமானது உலக பாரம்பரியக் களத்துக்கான தகுதியைப் பெற்றிருப்பின், அதனை உலகப் பாரம்பரியக் குழுவிற்குப் பரிந்துரை செய்யும். அந்தக் குழுவே ஆண்டுக்கொருமுறை ஒன்றுகூடி, குறிப்பிட்ட களத்தை உலக பாரம்பரியக் களங்களின் பட்டியலில் இணைத்துக் கொள்வதா இல்லையா என்பதை முடிவு செய்யும். சிலசமயம் இறுதி முடிவு எடுப்பதற்கு மேலதிக தகவல்கள் தேவை என குறிப்பிட்ட களத்தை முன்மொழிந்த நாட்டிடம் கேட்கப்படும்.

Read More: National Parks in Tamilnadu | தமிழ்நாட்டில் உள்ள தேசிய பூங்கா

Selection Criteria for the Sites

2004 ஆம் ஆண்டுவரை பாரம்பரிய பண்பாட்டு களங்களுக்கு ஆறு தேர்வு அளவீடுகளும், பாரம்பரிய இயற்கைக் களங்களுக்கு நான்கு தேர்வு அளவீடுகளும் கொடுக்கப்பட்டிருந்தன. பின்னர் 2005 ஆம் ஆண்டு முதல், இந்த முறையில் சிறுமாற்றம் செய்யப்பட்டு, அனைத்து வகையான பாரம்பரியக் களங்களுக்கும் பொதுவாக பத்து தேர்வு அளவீடுகள் கொடுக்கப்பட்டன. முன்மொழியப்படும் பாரம்பரியக் களமானது உலகளாவிய நோக்கில் மிகவும் முக்கியம் வாய்ந்ததாகவும், குறிப்பிட்ட பத்து அளவீடுகளில் ஒன்றையாவது நிறைவு செய்யக் கூடியதாகவும் இருக்க வேண்டும்.

Criteria for Cultural Sites

  • மனிதனின் மிகச் சிறந்த படைப்பாக்கங்களில் ஒன்றாக இருக்க வேண்டும்.
  • கட்டடக்கலை அல்லது தொழில்நுட்பம், நினைவுச் சின்னங்களைக் கொண்ட கலை, நகராக்க திட்டம் அல்லது நிலத்தோற்ற (landscape) வடிவமைப்பு போன்றவற்றின் அபிவிருத்தியினால், மனித மதிப்பீட்டில் முக்கியமான பரிமாற்றத்தை வெளிக்காட்டக் கூடியதாகவும், உலகின் பண்பாட்டு மையங்களில் அமைந்திருக்கும் ஒன்றாக அல்லது குறிப்பிட்ட ஒரு காலத்திற்கு மேலாக நிலைத்திருக்கும் ஒன்றாக இருக்க வேண்டும்.
  • தற்காலத்திலும் நிலைத்திருக்கின்ற அல்லது மறைந்துபோன ஒரு பண்பாட்டுப் பாரம்பரியத்துக்கோ, அல்லது நாகரீகத்துக்கோ தனித்துவமான, அல்லது மிகச் சிறந்த சான்றுகளைக் கொண்டிருக்க வேண்டும்.
  • மனித வரலாற்றில் குறிப்பிடத்தக்க நிலையை/காலத்தை விளக்கக் கூடிய, ஈடிணையற்ற எடுத்துக் காட்டாக இருக்கக் கூடிய ஒரு கட்டடம், கட்டக்கலை அல்லது தொழில்நுட்பம் சார் குழுமம் அல்லது நிலத்தோற்றமாக இருக்க வேண்டும்.
  • மனிதருக்கும் சூழலுக்கும், முக்கியமாக தற்காப்புக்கு அப்பாற்பட்ட மீட்க முடியாத மாற்றங்களை ஏற்படுத்தும் சூழலுக்கும், இடையிலான இடைத்தாக்கத்தை அல்லது பண்பாட்டை விளக்கும் பாரம்பரிய மனித குடியேற்றம், நிலப் பாவனை, அல்லது கடல் பாவனை போன்றவற்றிற்கான ஈடிணையற்ற எடுத்துக் காட்டாக இருக்க வேண்டும்.
  • உலகளாவிய அதி முக்கியத்துவமுடைய நிகழ்வுகள் அல்லது வாழும் பாரம்பரியங்களுடன், எண்ணங்களுடன், அல்லது நம்பிக்கைகளுடன், கலைகளுடன், இலக்கியம்சார் விடயங்களுடன் நேரடியாக, அல்லது உறுதியான தொடர்புடைய ஒன்றாக இருக்க வேண்டும்.

Criteria for Natural Sites

  • உயர்நிலை கொண்ட இயற்கைத் தோற்றப்பாடு அல்லது அளவுகடந்த இயற்கை அழகு நிறைந்த பகுதி, அல்லது கலைநய முக்கியத்துவம் நிறைந்த பகுதியாக இருக்க வேண்டும்.
  • உயிர் தொடர்பான ஆவணம், நிலவடிவ அபிவிருத்தியில் தொடர்ந்து கொண்டிருக்கும், குறிப்பிடத்தக்க நிலவியல் செயற்பாடுகள், குறிப்பிடத்தக்க புவிப்புற மாற்ற இயல்புகள் அல்லது இயல்வரைவுரு இயல்புகள் கொண்ட, உலக வரலாற்றின் முக்கியமான நிலைகளை பிரதிநிதித்துவப் படுத்தக் கூடிய விசேஷமான எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும்.
  • நிலம், நன்னீர், கடலோரம், கடல் சார்ந்த சூழ்நிலைமண்டலம், தாவர, விலங்கு சமூகங்கள் ஆகியவற்றில் ஏற்படும் படிவளர்ச்சி மற்றும் அபிவிருத்தியில் தொடர்ந்து ஏற்பட்டுக் கொண்டிருக்கும் சூழலியல், உயிரியல் முக்கியத்துவத்தைப் பிரதிநிதித்துவப் படுத்தும் விசேடமான எடுத்துக் காட்டுகளாக இருக்க வேண்டும்.
  • அறிவியல் அல்லது பாதுகாப்பு நோக்கில் மிகவும் விசேடமான உலகளாவிய முக்கியத்துவம் கொண்ட, அச்சுறுத்தலுக்குள்ளாகும் இனங்கள் உட்பட உயிருள்ள இனங்களில் இருக்க வேண்டிய உயிரியல் பல்வகைமைமையை, அவற்றின் இயலிடத்தில் வைத்தே பாதுகாப்பதற்கான முக்கியமானதும், குறிப்பிடத் தக்கதுமான இயற்கை வாழிடங்களைக் கொண்டதாக இருக்க வேண்டும்.
Important Study notes
Gupta Empire In Tamil, Kings, Administration and Society
Indus Valley Civilization in Tamil, Harappan Civilization for TNPSC
Emperor Ashoka in Tamil, Life and History
Pala Empire in Tamil – Origin, Rise and legacy of a Dynasty
Carnatic Wars, History, Period of War, Treaty
Which is the Longest River in India?
Sources of the Indian Constitution, Features Borrowed
List of Major Port in India
Five-Year Plans of India, Goals and Objectives
National Parks in Tamilnadu
Temples in Tamil Nadu
List of World Heritage Sites in India
Buddhism in Tamil, Origin, and History of Buddhism

*****************************************************

இது போன்ற தேர்விற்கான தகவல் மற்றும் பாடக்குறிப்புகளை பெற ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்

Adda247 TamilNadu Home page Click here
Official Website=Adda247 Click here

Adda247App |  Adda247 Tamil Youtube

Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group

Instagram = Adda247 Tamil

UNESCO World Heritage Sites in India_3.1

FAQs

Q. How many UNESCO Heritage sites in India?

Ans. In India There are 40 UNESCO World Heritage Sites

Q. What is UNESCO World Heritage Site?

Ans. UNESCO World Heritage Site is a place that is recognized by UNESCO. The sites are judged to contain "cultural and natural heritage around the world considered to be of outstanding value to humanity".

About the Author

Hi, I'm Abhishek. I'm a content editor at Adda247's Jobs blog. I have 3 years of experience in content writing and editing. I did my Graduation in Computer Application from BBD University. I love writing, Journaling, and reading Edtech blogs. I'm fond of traveling, So whenever I get time I love to travel too.