Tamil govt jobs   »   Study Materials   »   Unity in Diversity Study Material for...
Top Performing

Unity in Diversity in Tamil Study Material for TNPSC Exams | வேற்றுமையில் ஒற்றுமை-TNPSC தேர்வுகளுக்கான ஆய்வுப் பொருள்

Unity in Diversity in Tamil: Unity in Diversity is a concept that signifies unity among individuals who have certain differences among them. These differences can be on the basis of culture, language, ideology, religion, sect, class, ethnicity, etc. Furthermore, the existence of this concept has been since time immemorial. People have consistently shown this praiseworthy behavior almost everywhere on Earth. The concept has certainly resulted in the ethical and moral evolution of humanity.

Unity in Diversity in Tamil

Unity in Diversityஒரு நாட்டில் பல்வேறு வகையான மக்கள் வாழ்கின்றனர். அவர்கள் மொழி, சமயம், கலாச்சாரம், இனம் என வேறுபட்டவர்களாக காணப்படுகின்றனர். இருந்தாலும் இந்த மக்கள் ஒரு தேசத்துக்குரியவர்கள் என்ற ஒற்றுமையுடன் வாழ்கின்றனர்.

இந்தியாவில் மொழி, இனம், மதம், நிறம், வாழிடச் சூழல், கட்சி எனும் பல பிரிவுகளால் மக்கள் பிரிந்திருப்பினும் இந்தியன் எனும் உணர்வு அனைவரையும் ஒன்றிணைக்கும் சக்தியாகச் செயல்படுகிறது. உலகின் மிகப் பெரிய மக்களாட்சி நாடாக இன்றும் இந்தியா விளங்கக் காரணம், வேற்றுமையில் ஒற்றுமை காணும் இந்திய மக்களின் மனப்பாங்கே ஆகும். இந்தியர்கள் என்ற ஒரு உணர்வு இவர்கள் அனைவரையும் ஒன்றிணைக்கின்றது எனலாம். இந்த கட்டுரையில், அவர்களது வேற்றுமைகளில் அவர்களது ஒற்றுமை பற்றி காண்போம்.

Fill the Form and Get All The Latest Job Alerts

Elements of Diversity

  • உலகில் இந்தியா ஏழாவது மிகப்பெரிய பரந்து விரிந்த பழமையான நாடாகும். இந்த நாடு 29 மாநிலங்களையும் 7 யூனியன் பிரதேசங்களையும் கொண்டுள்ளது. இன்று இந்தியாவின் மக்கள் தொகை 1.38 பில்லியனாக காணப்படுகிறது.
  • வேறுபட்ட காலநிலை கூறுகள், வெவ்வேறு புவியியல் அம்சங்கள், வேறுபட்ட மொழிகளை பேசும் மக்கள், வெவ்வேறுபட்ட கலாச்சாரங்களை பின்பற்றும் மக்கள், வேறுபட்ட வள வாய்ப்புகள் உடைய மாநிலங்கள் இங்கு காணப்படுகின்றன.
  • அதை போலவே, பல்வேறு மதப்பிரிவுகளை பின்பற்றும் மனிதர்கள் இந்தியாவில் வாழ்கின்றனர். இவ்வாறு பல வேற்றுமைக் கூறுகள் இந்தியாவில் காணப்படுகின்றன.

Racial Differences

  • இந்தியா கி.மு 5 ஆம் நூற்றாண்டிலேயே, பல இனங்களையும், அதிக மக்கள் தொகையையும் பெற்றிருந்தது என்று வரலாற்றின் தந்தை “கெரடோரஸ்” தெரிவிக்கின்றார்.
  • இங்கு காஷ்மீர், பஞ்சாப், இராஜபுதனம்(பிரித்தானிய இந்தியாவில் இராஜபுதனத்தின் நிலப்பரப்புகள், தற்கால இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலம் மற்றும் குஜராத் மற்றும் மத்தியப் பிரதேச மாநிலங்களில் சில பகுதிகளையும் மற்றும் பாகிஸ்தானின் தெற்கு பகுதியான சிந்துவையும் கொண்டிருந்தது.) ஆகிய பகுதிகளில் இந்தோ- ஆரிய இனத்தவர்கள் வாழ்கின்றனர்.
  • தமிழகம், ஆந்திரம், மைய மாநிலங்கள், சோட்டா நாக்பூர் பகுதிகளில் திராவிட இனத்தவர்கள் வாழ்கின்றனர்.
  • அசாம், நேபாள எல்லை பகுதிகளில் மங்கோலிய இனத்தவர்களும், ஜக்கிய மாநிலங்களான பீகார் பகுதிகளில் வாழும் ஆரிய திராவிட இன மக்களும், வங்காளம், ஒடிசா பகுதியில் வாழும் மங்கோல திராவிட இனம், மராட்டிய பகுதியில் வாழும் துருக்கிய இனம் என்று பலவகையான இனங்களை சார்ந்த மக்கள் இந்தியாவிற்குள் வாழ்கின்றனர்.
  • இந்தியாவைப் பல “இனங்களின் அருங்காட்சியகம்“ என்று டாக்டர் வின்சென்ட் ஆர்தர் ஸ்மித் குறிப்பிட்டார்.

READ MORE: Government of Tamil Nadu | தமிழ்நாடு அரசு

Language Differences

  • மொழி என்பது, ஒரு மனிதன் தனது உள்ளத்து உணர்வுகளைப் பிறருக்கு உணர்த்த உபயோகிக்கும் மிகச்சிறந்த ஒரு கருவியாகும். இதனையே language is the vehicle of communication என்று அபெர் க்ரோம்பி குறிப்பிடுகிறார்.
  • இந்தியாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மொழிகள் இருப்பதாக சொல்லப்படுகின்றது. அதில் 780 மொழிகள் பேசப்படுகின்றதாக கூறப்படுகிறது. 22 மொழிகள் மாத்திரமே அதிகாரபூர்வ மொழிகளாக இந்திய அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

Religious Differences

  • இந்தியா அதிக மத நம்பிக்கை நிறைந்த நாடாக காணப்படுகின்றது. ஆன்மீகத்தை அதிகம் மதிக்கும் மக்கள் கூட்டமாக இந்தியர்கள் பார்க்கப்படுகின்றனர். இந்து மதம், பௌத்த மதம் என்பன இங்கு தான் தோன்றின. இங்கு 80 சதவீதமானவர்கள் இந்து சமயத்தை பின்பற்றுகின்றனர். இந்து மதத்தின் அதிகளவான சாயலை இந்தியா முழுவதும் காணமுடியும்.
  • இந்து மதத்திற்கு அடுத்த படியாக இஸ்லாம் மதம், கிறிஸ்தவ மதம், சீக்கிய மதம், பௌத்த மதம், சமண மதம் எனப்படுகின்ற மதங்கள் காணப்படுகின்றன.
  • இந்து மதம் சார்ந்த புனித தலங்கள் அதிகமாக இந்தியாவில் காணப்படுகின்றன. இருப்பினும் அனைத்து மதங்களை சார்ந்த மக்களும் இங்கு ஒற்றுமையாக வாழ்கின்றனர்.

Also Read: TNPSC Tamil study materials: எதுகை,மோனை,இயைபு

Elements of Unity

Political Unity

  • அரசியல் மற்றும் பண்பாட்டு ஒற்றுமை இந்திய தேசத்தை வலிமைமிக்க தேசமாக்கியது என்று ஜவஹர்லால் நேரு அவர்கள், தான் எழுதிய ‘Discovery of India’ என்ற நூலில் கூறியுள்ளார்.

Religious Unity

  • சமயங்களின் அடிப்படையில் கொண்டாப்படும் திருவிழாக்கள் மக்களை இந்தியர்களாக ஒன்றிணைக்கின்றன.
  • வட இந்தியர்கள் தெற்கே உள்ள இராமேஸ்வரத்திற்குப் புனிதப்பயணம் மேற்கொள்வதும், தென் இந்தியர்கள் வடக்கே உள்ள காசிக்கு புனிதப்பயணம் மேற்கொள்வதும், நமது நாட்டின் சமய மற்றும் பண்பாட்டு ஒற்றுமையை வெளிப்படுத்துகிறது.

Also Read: Temples in Tamil Nadu | தமிழ்நாட்டில் உள்ள கோவில்கள்

Adda247 Tamil

Factors of Unity

  • ஒரே சீரான நிர்வாகமொழி
  • போக்குவரத்தும், செய்தித் தொடர்பும்
  • வரலாறும் நாட்டுப்பற்றும்
  • பண்பாட்டுப் பாரம்பரியத்தைப் பேணிக்காத்தல்
  • தேசியச் சின்னங்கள்
  • தேசியத் திருவிழாக்கள்

READ MORE: TN Tamil Eligibility Test

Indians by Nation

இந்தியாவில் ஆங்கிலேயர்கள் ஆட்சி நடத்திய காலத்தில், இந்திய நாட்டை மத ரீதியாகவும், இன ரீதியாகவும் பிரித்தாழும் கொள்கையை பின்பற்றியே இந்தியாவை அடிமைப்படுத்தி வைத்திருந்தார்கள்.

முன்னோர்கள் இந்தியர்கள் என்ற ரீதியில் மதம், மொழி, இனம் தான்டி ஒன்றுபட்டு போராடியதனால் தான் சுதந்திரம் என்ற பெருங்கனவை அடைந்து கொள்ள முடிந்தது.

இந்தியாவின் சுதந்திர தினம் இந்திய மக்களை வேற்றுமைகள் இன்றி மேலும் மேலும் ஒற்றுமை உடையவர்களாக மாற்றி கொண்டிருக்கின்றது.

READ MORE: Tamil Nadu Dance Forms | தமிழர்களின் நடனக்கலை

*****************************************************

Coupon code- FEB15- 15% off

Unity in Diversity in Tamil Study Material for TNPSC Exams_4.1
ESIC COMPLETE PREPARATION BATCH FOR UDC & MTS | TAMIL LIVE CLASS By Adda247

*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*

Check Live Classes in Tamil

*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*

Practice Now

Adda247App |  Adda247 Tamil Youtube

Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group

Unity in Diversity in Tamil Study Material for TNPSC Exams_5.1