வேதகாலம்:
- சிந்துவெளி நாகரிகத்தின் சரிவோடு இந்தியாவில் நகரமயமாதலின் முதல் கட்டம் ஒரு முடிவிற்கு வந்தது.
- ஆரியரின் வருகையால் வேதகாலம் எனும் காலகட்டம் தொடங்கியது.
வேதகாலம்—இந்திய(பொ.ஆ.மு) 1500 வரலாற்றில் கி.மு.600 காலகட்டம். ‘வேதங்கள்’ என்பதில் இருந்து இப்பெயரைப் பெற்றது. |
ஆரியர்கள்:
- ஆரியர்கள் இந்தோ-ஆரிய மொழி பேசும், இடம் விட்டு இடம் குடிபெயர்ந்து செல்லக்கூடிய கால்நடை மேய்ப்பவர்கள் ஆவர்.
- இவர்கள் மத்திய ஆசியாவிலிருந்து அலையலையாகக் குடிபெயர்ந்து இந்துகுஷ் மலைகளிலுள்ள கைபர் கணவாய் வழியாக வந்தனர்.
- கால்நடைகளை மேய்ப்பதே இவர்களின் முதன்மைத் தொழில்.
- அழித்து எரித்து சாகுபடி செய்யும் வேளாண் முறையையும் (slash and burn agriculture) பின்பற்றினர்.
அழித்து எரித்து சாகுபடி செய்யும் வேளாண்முறை (Slash and Burn Agriculture):
|
காலம், பரப்பு, சான்றுகள்:
- புவியியல் பரப்பு – வட இந்தியா
- காலப்பகுதி – இரும்புக் காலம்
- கால அளவு – கி.மு (பொ.ஆ.மு) 1500- 600 வரை
- சான்றுகள் – வேதகால இலக்கியங்கள்
- நாகரிகத்தின் இயல்பு – கிராம நாகரிகம்
ஆரியர்களும் இந்தியாவில் அவர்களின் வாழ்விடங்களும்:
- ரிக்வேதகால ஆரியர்கள் நாடோடிகள் ஆவர்.
- அடிப்படையில் மேய்ச்சல் சமூகத்தினரான அவர்களுக்கு கால்நடைகளே முக்கிய சொத்து ஆகும்.
- ரிக்வேத காலத்தில் ஆரியர்களின் வாழ்விடம் பஞ்சாப் ஆகும்.
- அப்போது அப்பகுதி ‘சப்த சிந்து’ அதாவது ஏழு ஆறுகள் ஓடும் நிலப்பகுதி என்ற ழைக்கப்பட்டது.
- ஏறத்தாழ கி.மு (பொ.ஆ.மு) 1000-இல் ஆரியர்கள் கிழக்கு நோக்கி நகர்ந்து சிந்து கங்கைச் சமவெளியில் குடியமர்ந்தனர்.
- இரும்புக் கோடரி, இரும்பினாலான கொழுமுனையைக் கொண்ட கலப்பை ஆகியவற்றைப் பரவலாக பயன்படுத்தினர்.
நான்கு வேதங்கள்: ரிக், யஜுர், சாம, அதர்வன. |
இது பகுதி 1 மற்றும் அடுத்த பகுதிக்கு adda247 செயலியை பதிவிறக்கம் செய்யவும். TNPSC, TNUSRB, TRB மற்றும் பிற போட்டித் தேர்வுகளுக்கான தேர்வில் தேர்ச்சி பெற இது உதவும்.
***************************************************************************
Adda247 TamilNadu Home page | Click here |
Official Website=Adda247 | Click here |
Adda247App | Adda247 Tamil Youtube
Adda247 Tamil telegram group –TNPSC sure shot selection group
Instagram = Adda247 Tamil