வேதகாலம் பற்றி அறிந்துகொள்ள பகுதி – 1 மற்றும் பகுதி – 2 ண்டை இங்கு படியுங்கள்.
வேதகாலப் பண்பாடு:
அரசியலும் சமூகமும்:
- ரிக் வேத கால அரசியல் ரத்த உறவுகளை அடிப்படையாகக் கொண்டதாகும்.
- குலம் (clan) அரசியலின் அடிப்படை அலகாகும். (தலைவர் – குலபதி)
- பல குடும்பங்கள் ஒன்று சேர்ந்து ஒரு கிராமம் ஆகும். (கிராமத்தின் தலைவர்– கிராமணி).
- பல கிராமங்களைக் கொண்ட ஒரு தொகுப்பு ‘விஸ்’ (குலம்) என்றழைக்கப்பட்டது. (தலைவர் – விசயபதி).
- ‘ஜனா’ (இனக்குழு)வின் தலைவர் ராஜன் ஆவார். இவர் ஜனஸ்யகோபா (மக்களின் பாதுகாவலர்) எனப்பட்டார்.
- ரிக் வேத காலத்தில் பல இனக்குழு அரசுகள் (ராஷ்டிரம்) இருந்தன. (பரதர், மத்சயர், புரு).
அரசர்:
- தனது இனக்குழுவைச் சேர்ந்தவர்களைப் பாதுகாப்பதே ராஜனின் முக்கியப் பொறுப்பாகும்.
- அவருடைய அதிகாரம் இனக்குழு மன்றங்களான விதாதா, சபா, சமிதி, கணா ஆகிய அமைப்புகளால் கட்டுப்படுத்தப்பட்டது.
- இவைகளில் விதாதா (இனக்குழுவின் பொதுக்குழு) மிகப் பழமையானதாகும்.
சபா – மூத்தோர்களைக் கொண்ட மன்றம்.
சமிதி – மக்கள் அனைவரையும் கொண்ட பொதுக்குழு. |
- அரசர் தனக்கு உதவி செய்வதற்காக புரோகிதர் (தலைமை குரு) ஒருவரை பணியில் அமர்த்திக் கொண்டார்.
- அரசியல்,பொருளாதாரம்,இராணுவம் தொடர்பான விஷயங்களில் அரசனுக்கு சேனானி(படைத் தளபதி) உதவி செய்தார்.
- ஆரியர்கள் கிழக்கு நோக்கி நகர்ந்து கங்கை, யமுனை நதிகளுக்கு இடைப்பட்ட பகுதிகளில் குடியேறியபோது தொடக்ககாலக் குடியேற்றங்கள் மாற்றம் பெற்று பிரதேச அரசுகளாயின மற்றும் பரம்பரை அரசுரிமை தோன்றியது.
- முடியாட்சி முறையில் அரசரின் அதிகாரங்கள் அதிகரித்தன.
- அரசர் தனது நிலையை வலுப்படுத்திக் கொள்ள பல சடங்குகளையும் யாகங்களையும் நடத்தினார்.
- பின்வேதகாலத்தில் பலஜனாக்கள் அல்லது இனக்குழுக்கள் இணைக்கப்பட்டு ஜனபதங்கள் அல்லது ராஷ்டிரங்கள் உருவாயின.
- சமிதி, சபா ஆகியவை தங்கள் முக்கியத்துவத்தை இழந்தன.
- விதாதா என்ற மன்றம் இல்லாமல் போனது.
- புதிய அரசுகள் தோன்றின.
- பாலி (Bali) என்பது மக்கள் தாங்களாகவே மன முவந்து அரசனுக்கு கொடுத்துவந்த காணிக்கையாகும்.
- பின்வேதகாலத்தில் இது ஒரு வரி ஆக மாற்றம் பெற்று மக்களிடமிருந்து தொடர்ந்து முறையாக வசூல் செய்யப்பட்டது.
- குரு மற்றும் பாஞ்சால அரசுகள் செழித்தோங்கிய காலம் இது.
- மேலும் அயோத்தி, இந்திரப்பிரஸ்தம், மதுரா போன்ற நகரங்களும் இக்காலத்தில் உருவாயின.
பாலி – இது ஒரு வரி ஆகும். ஒருவர் தனது விவசாய மகசூலில் அல்லது கால்நடைகளில் 1/6 பங்கை இவ்வரியாகச் செலுத்த வேண்டும். |
சமூக அமைப்பு
- வேதகால சமூகம் தந்தை வழிச் சமூகமாகும்.
- வெள்ளைநிறத்தோல் கொண்ட ஆரியர்கள்,கருப்பு நிறத் தோல் கொண்ட ஆரியரல்லாதவர்களிடம் இருந்து தங்களை வேறுபடுத்திக் கொண்டனர்.
- கருப்பு நிற ஆரியர் அல்லாத மக்களை தசயுக்கள், தாசர்கள் என்று அழைத்தனர்.
- தொடக்க வேதகால சமுதாயத்துக்குள் மூன்று பிரிவுகள் (Treyi) காணப்பட்டன.
- பொது மக்கள் “விஸ்” என்று அழைக்கப்பட்டனர்.
- போர்வீரர்கள் சத்ரியர்கள் எனவும் மதகுருமார்கள் பிராமணர்கள் எனவும் அழைக்கப்பட்டனர்.
- பிற்கால கட்டத்தில் திறன் கொண்ட, ஆரியரல்லாத மக்களை ஆரியர்கள் தமது சமுதாய ஏற்பாட்டுக்குள் கொண்டுவர நேர்ந்தது.
- அப்போது நான்கு இறுக்கமான வர்ண அமைப்பு உருவாக்கப்பட்டது.
- மதகுருவான பிராமணர், போரிடும் சத்ரியர், நில உடைமையாளர்களான வைசியர், வேலைத் திறன் கொண்ட சூத்திரர் என்று நான்கு வர்ணங்கள் கொண்ட சமூக அமைப்பு உருவானது.
- வேதகாலம் குறித்து கற்க அதிக அளவு இலக்கிய சான்றுகள் இருக்கின்றபோதிலும், பயன்பாட்டுப் பொருள் சான்றுகள் போதுமான அளவு இல்லை.
இது பகுதி 3 மற்றும் அடுத்த பகுதிக்கு adda247 செயலியை பதிவிறக்கம் செய்யவும். TNPSC, TNUSRB, TRB மற்றும் பிற போட்டித் தேர்வுகளுக்கான தேர்வில் தேர்ச்சி பெற இது உதவும்.
***************************************************************************
Adda247 TamilNadu Home page | Click here |
Official Website=Adda247 | Click here |
Adda247App | Adda247 Tamil Youtube
Adda247 Tamil telegram group –TNPSC sure shot selection group
Instagram = Adda247 Tamil