Tamil govt jobs   »   Vedic Culture Part 5 in Adda247...   »   Vedic Culture Part 5 in Adda247...

Vedic Culture Part 5 in Adda247 Tamil | வேதகாலம் பகுதி – 5 Adda247 தமிழில்

வேதகாலம் பற்றி அறிந்துகொள்ள பகுதி – 1,பகுதி – 2,பகுதி – 3 மற்றும் பகுதி – 4 ண்டை இங்கு படியுங்கள்.

Vedic Culture Part 1

Vedic Culture Part 2

Vedic Culture Part 3

Vedic Culture Part 4

ரிக்வேத கால மக்கள் அறிந்திருந்த உலோகங்கள்

  • தங்கம் (ஹிரண்யா)
  • இரும்பு (சியாமா)
  • தாமிரம்/செம்பு (அயாஸ்)

மதம்

ரிக்வேதகால:

  • ரிக்வேதகால ஆரியர்கள்பெரும்பாலும் நில மற்றும் ஆகாய கடவுளர்களை வழிபட்டனர். 
  • பிருத்வி (நிலம்), அக்னி (நெருப்பு), வாயு (காற்று), வருணன் (மழை), இந்திரன் (இடி) போன்றவற்றை வணங்கினர். 
  • அதிதி (நித்தியக் கடவுள்), உஷா (விடியற்காலைத் தோற்றம்) ஆகிய குறைவான பெண் தெய்வங்களை வணங்கினர். 
  • அவர்களின் மதம்சடங்குமுறைகளை மையமாகக் கொண்டது. 
  • வேத மந்திரங்களைப் பாராயணம் செய்வதே வழிபாட்டு முறையாக இருந்தது. 
  • குழந்தைகள் (பிரஜா), பசு (கால்நடைகள்), செல்வம் (தனா) ஆகியவற்றின் நலனுக்காக மக்கள் தெய்வங்களை வணங்கினர். 
  • பசு புனிதமான விலங்காகக் கருதப்பட்டது. 
  • கோவில்கள் இல்லை மற்றும் சிலை வழிபாடும் வழக்கத்தில் இல்லை.

பின்வேதகாலம்:

  • பின்னாளில் மதகுருவாக இருப்பது ஒரு தொழிலாகவும், அது பரம்பரைத் தொழிலாகவும் ஆனது. 
  • ஆரியர் அல்லாத கடவுள்களும் ஏற்கப்பட்டிருக்கலாம். 
  • இந்திரனும், அக்னியும் முக்கியத்துவத்தை இழந்தனர். 
  • பிரஜாபதி (படைப்பவர்), விஷ்ணு (காப்பவர்), ருத்ரன் (அழிப்பவர்) ஆகிய கடவுளர்கள் முக்கியத்துவம் பெற்றனர்.

TNUSRB CONSTABLE 2023

கல்வி:

குருகுலக்கல்வி முறை

  • குருகுலக் கல்வி முறை என்பது பழங்கால கற்றல் முறை ஆகும்.
  • குருகுலம் என்னும் சொல் குரு (ஆசிரியர்), குலம் (குடும்பம் அல்லது வீடு) என்ற இரண்டு சமஸ்கிருத வார்த்தைகளின் கூட்டாகும்.
  • இம்முறையில் மாணவர்கள் (சிஷ்யர்கள்) குருவுடன் தங்கியிருந்து, அவருக்குச் சேவை செய்வதோடு கல்வியும் கற்று அறிவைப் பெருக்கிக் கொள்வர். 
  • வாய்மொழி மரபில் மாணவர்கள் பாடங்களைக்  கற்றனர்.
  • கற்றவை அனைத்தையும் மாணவர்கள் மனப்பாடம் செய்தனர்.
  • நான்கு வேதங்கள், இதிகாசங்கள்,புராணங்கள், இலக்கணம், தர்க்கவியல், நெறிமுறைகள், ஜோதிடம், கணிதம், இராணுவ உத்திகள் ஆகியன மாணவர்களுக்குக் கற்றுத்தரப்பட்டன.
  • ஒழுக்கமான வாழ்க்கையை மேற்கொள்வதற்கான பயிற்சியும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.
  • இரு பிறப்பாளர்கள் (Dvijas) மட்டுமே குருகுலத்தில் மாணவர்களாகச் சேர்க்கப்படுவர். 
  • பெண்களுக்கு பொது கல்வி அளிக்கப்படவில்லை.

நான்கு ஆஸ்ரமங்கள்:(வயதின் அடிப்படையில்)

பின்வேதகால இறுதியில் வாழ்க்கையின் நான்கு நிலைகள் (நான்கு ஆஸ்ரமங்கள்) என்ற கோட்பாடு உருவாயின.

  • பிரம்மச்சரியம் (மாணவப் பருவம்)
  • கிரகஸ்தம் (திருமண வாழ்க்கை)
  • வனப்பிரஸ்தம் (காடுகளுக்குச் சென்று தவம் செய்தல்)
  • சன்னியாசம் (வீடுபேறு அடைவதற்காக துறவற வாழ்க்கை மேற்கொள்ளல்)

இது பகுதி 5 மற்றும் அடுத்த பகுதிக்கு adda247 செயலியை பதிவிறக்கம் செய்யவும். TNPSC, TNUSRB, TRB மற்றும் பிற போட்டித் தேர்வுகளுக்கான தேர்வில் தேர்ச்சி பெற இது உதவும்.

***************************************************************************

இது போன்ற தேர்விற்கான தகவல் மற்றும் பாடக்குறிப்புகளை பெற ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்
Adda247 TamilNadu Home page Click here
Official Website=Adda247 Click here

Adda247App |  Adda247 Tamil Youtube

Adda247 Tamil telegram group –TNPSC sure shot selection group

Instagram = Adda247 Tamil