Table of Contents
Western Ghats of India: Western Ghats are the mountain ranges in western India. It forms the crest of the western edge of the Deccan plateau parallel to the Malabar Coast of the Arabian Sea. Western Ghats are one of the UNESCO World Heritage site in India. Read the full article for know more about the Western Ghats of India.
Fill the Form and Get All The Latest Job Alerts
Western Ghats of India | |
Peak | Anamudi, Eravikulam National Park |
Elevation | 2,695 m (8,842 ft) |
Coordinates | 10°10′N 77°04′ |
Length | 1,600 km (990 mi) N–S |
Width | 100 km (62 mi) E–W |
Area | 160,000 km2 (62,000 sq mi) |
States | Gujarat, Maharashtra, Goa, Karnataka, Kerala and Tamil Nadu |
Region | Western and Southern India |
Western Ghats of India
மேற்குத் தொடர்ச்சி மலை (Western Ghats) இந்திய துணைக்கண்டத்தின் மேற்புறத்தில் அரபிக்கடலுக்கு இணையாக அமைந்துள்ள தொடர்மலையாகும். இந்த மலைகள், தமிழ் நாட்டில் வடக்கில் நீலகிரியில் தொடங்கி, தெற்கில் கன்னியாகுமரி வரை பரவியுள்ளன. இது தமிழ்நாட்டின் மேற்கு எல்லையாக அமைந்துள்ளது. உலகில் பல்லுயிர் வளம் மிக்க இடங்களில், மேற்குத் தொடர்ச்சி மலைகளும் ஒன்றாகும். இம்மலைகளின் சராசரி உயரம் 1200 மீ ஆகும்.
Western Ghats of India – Geology
இந்த மலைத் தொடர் கோண்டுவானா நிலப்பரப்பின் ஒரு பகுதி என புவியியல் வரலாறு கூறுகிறது. 150 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற புவியியல் மாற்றத்தால், கோண்டுவானா நிலப்பரப்பில் இருந்து பிரிந்த தென் இந்தியப் பகுதிகள், ஆசிய கண்டத்தை நோக்கி இடம் பெயர்ந்தது.
Western Ghats of India – Rivers
தென் இந்தியாவின் பல முக்கிய ஆறுகள் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பிறக்கின்றன. இங்கு உருவாகி கிழக்கு நோக்கி தக்காண பீடபூமி வழியாகப் பாய்ந்து வங்காள விரிகுடாவில் கலக்கும் முக்கியமான ஆறுகளில் சில கோதாவரி, கிருஷ்ணா, காவிரி மற்றும் தாமிரபரணி. “உலகின் இரண்டாம் சுவைமிகு நீர்” எனப்படும் கோவையின் சிறுவாணி, பவானி, நொய்யல் போன்ற நதிகளும் இங்கு பிறக்கின்றன. இவை தவிர பல சிறு ஆறுகள் இம்மலைத்தொடரில் உருவாகி மேற்கு நோக்கிப் பாய்ந்து அரபிக்கடலில் கலக்கின்றன. புவியியல் ரீதியாக மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர் அரபிக்கடலிற்கு அருகில் அமைந்துள்ளதால் மேற்கு நோக்கி பாயும் ஆறுகள் சிறிய ஆறுகளேயாகும். அவற்றுள் சில முல்லை பெரியாறு, சிட்லாறு, பீமா ஆறு, மணிமுத்தாறு, கபினி ஆறு, கல்லாவி ஆறு, பெண்ணாறு மற்றும் பெரியாறு ஆகும்.
Western Ghats of India – Dams
இந்த ஆறுகளின் குறுக்கே பல அணைகள் கட்டப்பட்டு பாசனத்திற்கும், சாகுபடிக்கும் மற்றும் மின்சாரம் தயாரிப்பதற்கும் உதவுகின்றன. தமிழ்நாட்டில் உள்ள மேட்டூர் அணைக்கட்டு ஒரு குறிப்பிடத்தக்கதாகும்.
Western Ghats of India – Important Passes
இம்மலைத்தொடரில் நீலகிரிக்குத் தெற்கே அமைந்துள்ள பாலக்காடு கணவாய் (35 கிமீ அகலம்), வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வாணிப வழியாக திகழ்கிறது. பாலக்காட்டு கணவாய்க்குத் தெற்கில் இம்மலைத்தொடரில் ஆனைமலை என்னும் இடத்தில் உயரம் (2700மீ) அதிகரிக்கிறது.
Read More: HUMAN RIGHTS in Tamil
Western Ghats of India – UNESCO World Heritage Site
இம் மலைத் தொடரை உலகப் பாரம்பரியக் களங்களுள் ஒன்றாக ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் அறிவித்துள்ளது.
Western Ghats of India – Recommendations of the Kasthurirangan Committee
மேற்கு தொடர்ச்சி மலையில் இயற்கை சூழ்ந்த 41 சதவீத பகுதியில், 37 சதவீத பகுதியை, சுலபமாக பாதிப்புக்குள்ளாகும் பகுதி என கஸ்தூரிரங்கன் குழு வரையறுத்துள்ளது. மூன்று மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ள இப்பகுதியில், முதல் மண்டலத்தில் 4156 கிராமங்கள் வருகின்றன. இதில் தமிழ் நாட்டில் கன்னியாகுமரி, நெல்லை, விருதுநகர், தேனி, திண்டுக்கல், கோவை, திருப்பூர், நீலகிரி ஆகிய எட்டுமாவட்டங்களில் 135 கிராமங்கள் வருகின்றன. இந்தப் பகுதியில் புதிதாக பட்டா வழங்கக்கூடாது. புதிய விவசாய பகுதிகள் விஸ்தரிக்கக்கூடாது. புதிய குடியிருப்புகள் கட்டக் கூடாது. வளர்ச்சி திட்டங்கள் எதையும் செயல்படுத்தக்கூடாது, அதாவது, பள்ளி, மருத்துவமனை, மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி, போக்குவரத்து ஆகியவை கூடாது. வனநிலங்களை வேறு பணிகளுக்கு பயன்படுத்தக் கூடாது.
வன உரிமைச் சட்டம் 2006ன் படி வன நிலங்களில் பயிர் செய்து வாழ்ந்து வரும் ஆதிவாசி மக்களுக்கு குடும்பத்துக்கு 10 ஏக்கர் வரை வழங்க வேண்டும். ஆனால் கஸ்தூரிரங்கன் அறிக்கை அதற்கு தடைவிதிக்கிறது. தமிழ்நாட்டில் 1989ம் ஆண்டு முதல் மலைப்பகுதிகளில் பட்டா வழங்க தடைவிதிக்கப் பட்டு அமலில் உள்ளது.
இந்த நிலையில், வனநிலங்களில் பயிர் செய்து வரும் மக்கள் வெளியேற்றப்படும் நிலை ஏற்படும். இந்த கட்டுப் பாடுகள் அனைத்தும் சம்பந்தப்பட்ட கிராமத்திலிருந்து 10 சதுர கிலோமீட்டர் சுற்றளவுக்கு பொருந்தும் என்று அறிக்கை குறிப்பிடுகிறது.
Western Ghats Development Programme
மேற்குத் தொடர்ச்சி மலையையும், அதிலுள்ள வன விலங்குகளையும் பாதுகாக்க இந்திய அரசு, மேற்குத் தொடர்ச்சி மலை வளர்ச்சித் திட்டம் என்ற புதிய திட்டத்தை ஐந்தாவது ஐந்தாண்டுத் திட்ட காலத்தில் அறிவித்து செயல்படுத்தியது. தேசிய வளர்ச்சிக் குழு உத்தரவின்படி, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. சுற்றுச் சூழலை பாதுகாக்கும் வளர்ச்சி அணுகுமுறைதான், 9 வது ஐந்தாண்டு கால திட்டத்திற்குப் பிறகு, ஒரு முக்கிய அம்சமாக உள்ளது.
Objectives of the Plan (திட்டத்தின் நோக்கங்கள்)
- இந்தப் பகுதியில் உள்ள நிலங்களையும், நீர்நிலைகளையும் சிக்கனமான முறையில் பயன்படுத்த வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் மண் அரிப்பு, வறட்சி போன்றவற்றை தடுக்க முடியும் என்பதுடன், தண்ணீர், உணவு, தீவனம், எரிபொருள் ஆகியவற்றின் இருப்பையும் அதிகரிக்க முடியும்.
- உள்ளூர் தேவைக்கான திட்டங்களை முன்னுரிமை அடிப்படையில் செயல்படுத்துவதற்காக வலிமையான திட்ட செயல்பாட்டு முகமையை தேர்வு செய்தல்.
- இயற்கை வளங்களை குறைவாக பயன்படுத்துதல், காடுகளின் பாதுகாப்பை உறுதி செய்தல்.
- பள்ளத்தாக்கு குழுவுக்கும் நிதி அமைப்புகளுக்கும் இடையே முறையான தொடர்பை ஏற்படுத்துதல்.
- நீர்நிலைகள் சார்ந்த ஆராய்ச்சி திட்டங்களை ஊக்குவித்தல்.
- குளங்கள், ஏரிகள் ஆகியவற்றை பாதுகாத்தல், கட்டமைப்பு மேம்பாடு, நடைபாலங்களை கட்டுதல், பொதுக் கிணறுகளை வெட்டுதல், மின்மயமாக்கல், திறந்தவெளி அரங்கங்களை கட்டுதல், பாசன பம்பு செட்டுகளை அமைத்தல், கழிவு நீர் கால்வாய் வசதிகளை செய்தல் போன்றவற்றுக்கான தொடக்கக் கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்.
*****************************************************
இது போன்ற தேர்விற்கான தகவல் மற்றும் பாடக்குறிப்புகளை பெற ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்
To Attempt the Quiz on APP with Timings & All India Rank,
Download the app now, Click here
Adda247 பயன்பாட்டில் இந்த வினாடி வினாவை முயற்சிக்க இங்கே கிளிக் செய்து அகில இந்திய தரவரிசையைப் பெறுங்கள்
Adda247 TamilNadu Home page | Click here |
Official Website=Adda247 | Click here |
Use Code: AUG15 (15% off on all)
***************************************************************************
*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*
*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*
Adda247App | Adda247 Tamil Youtube
Tamil Engineering Classes by Adda247 Youtube link
Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group
Instagram = Adda247 Tamil