Tamil govt jobs   »   Study Materials   »   What is the Language of Tamil...
Top Performing

What is the Language of Tamil Nadu? | தமிழ்நாட்டின் மொழி எது?

What is the Language of Tamil Nadu?

What is the Language of Tamil Nadu: Tamil language is the mother tongue of Tamilnadu people. Tamil is an official language of the Indian state of Tamil Nadu, the sovereign nations of Sri Lanka and Singapore, and the Union Territory of Puducherry. Tamil is also spoken by significant minorities in the four other South Indian states of Kerala, Karnataka, Andhra Pradesh and Telangana, and the Union Territory of the Andaman and Nicobar Islands. You will get all the information regarding the topic Language of Tamil Nadu, History of Tamil Language, Places where Tamil Language is spoken, recognition of Tamil Language as an Official and a classical language, etc. on this page.

What is the Language of Tamil Nadu? – Tamil

What is the Language of Tamil Nadu: தமிழ் மொழி தமிழர்களினதும் தமிழ் பேசும் பலரின் தாய்மொழி ஆகும். தமிழ், திராவிட மொழிக் குடும்பத்தின் முதன்மையான மொழிகளில் ஒன்றும் செம்மொழியும் ஆகும். இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் அதிக அளவிலும், ஐக்கிய அரபு அமீரகம், தென்னாப்பிரிக்கா, மொரிசியசு, பிசி, இரீயூனியன், திரினிடாடு போன்ற நாடுகளில் சிறிய அளவிலும் தமிழ் பேசப்படுகிறது. 1997 ஆம் ஆண்டுப் புள்ளி விவரப்படி உலகம் முழுவதிலும் 8 கோடி (80 மில்லியன்) மக்களால் பேசப்படும் தமிழ், ஒரு மொழியைத் தாய்மொழியாகக் கொண்டு பேசும் மக்களின் எண்ணிக்கை அடிப்படையில் பதினெட்டாவது இடத்தில் உள்ளது. இணையத்தில் அதிகம் பயன்படுத்தப்படும் இந்திய மொழிகளில் தமிழ் முதன்மையாக உள்ளதாக 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற கூகுள் கணக்கெடுப்பில் தெரிய வந்தது. Language of Tamil Nadu தொடர்பான தகவல்களை, நாம் இந்த கட்டுரையில் விரிவாக பார்ப்போம்.

Fill the Form and Get All The Latest Job Alerts

Language of Tamil Nadu

Language of Tamil Nadu: இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த இலக்கிய மரபைக் கொண்டுள்ள தமிழ் மொழி, தற்போது வழக்கில் இருக்கும் ஒரு சில செம்மொழிகளில் இதுவும் ஒன்றாகும். திராவிட மொழிக்குடும்பத்தின் பொதுக்குணத்தினால் ஒலி மற்றும் சொல்லமைப்புகளில் சிறிய மாற்றங்களே ஏற்பட்டுள்ளதாலும் மேலும் கவனமாகப் பழைய அமைப்புக்களைக் காக்கும் மரபினாலும் பழங்கால இலக்கிய நடை கூட மக்களால் புரிந்து கொள்ளும் நிலையில் உள்ளது. எடுத்துக்காட்டாக, பள்ளிக் குழந்தைகள் சிறுவயதில் கற்கும் அகர வரிசையான ஆத்திசூடி 1,000 ஆண்டுகளுக்கு முன்னர் இயற்றப்பட்டது. திருக்குறள் ஏறத்தாழ 2,000 ஆண்டுகளுக்கு முன் இயற்றப்பட்டது.

Also Read: Who is the Current Chief Minister of Tamil Nadu? – List of Chief Ministers of TN

Tamil Language History

Tamil Language History: தமிழ், இந்தியா உட்பட இலங்கை, சிங்கப்பூரில் பேசப்படும் மொழிகளில் ஒன்று. மிக நீண்ட இலக்கிய, இலக்கண மரபுகளைக் கொண்டது. தமிழ் இலக்கியங்களில் சில 2500 ஆண்டுகளுக்கு மேல் பழமையானவை. கண்டெடுக்கப்பட்டுள்ள தமிழ் ஆக்கங்கள் கிறித்துவுக்கு முன் 400-ஆம் ஆண்டைச் சேர்ந்த பிராமி எழுத்துகளில் எழுதப்பெற்றவைகளாகும். இந்தியாவில் கிடைத்துள்ள ஏறத்தாழ 1,00,000 (ஒரு லட்சம்) கல்வெட்டுகளில் தொல்லெழுத்துப் பதிவுகளில் 60,000 த்திற்கும் (அறுபதாயிரம்) அதிகமானவை தமிழகத்தில் கிடைத்துள்ளன. இதில் ஏறத்தாழ 95 விழுக்காடு தமிழில் உள்ளன; மற்ற மொழிகள் அனைத்தும் ஐந்து விழுக்காட்டுக்கும் குறைவான கல்வெட்டுகளையே கொண்டுள்ளன. பனையோலைகளில் எழுதப்பட்டு வாய்மொழி மூலம் வழி வழியாகப் பாதுகாக்கப்பட்டு வந்ததால், மிகப் பழைய ஆக்கங்களின் காலங்களைக் கணிப்பது மிகவும் கடினமாக உள்ளது. எனினும் மொழியியல் உட்சான்றுகள், மிகப் பழைய ஆக்கங்கள் கி.மு. 4 ஆம் நூற்றாண்டுக்கும் கி.பி. 3-ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் இயற்றப்பட்டிருக்கலாம் எனக் காட்டுகின்றன. இன்று கிடைக்கக்கூடிய மிகப் பழைய ஆக்கம் தொல்காப்பியம் ஆகும். இது பண்டைக்காலத் தமிழின் இலக்கணத்தை விளக்கும் ஒரு நூலாகும். இதன் சில பகுதிகள் கி.மு. 400 ஆம் ஆண்டு காலத்தில் எழுதப்பட்டதாகக் கருதப்படுகின்றது. 2005-இல் அகழ்ந்தெடுக்கப்பட்ட சான்றுகள், தமிழ் எழுத்து மொழியைக் கி.மு. 600-ஆம் ஆண்டிற்கும் முன் தள்ளியுள்ளன. பண்டைத் தமிழில் எழுதப்பட்ட குறிப்பிடத்தக்க காப்பியம், கி.மு 200 முதல் கி.பி 200 காலப்பகுதியைச் சேர்ந்த சிலப்பதிகாரம் ஆகும்.

தமிழறிஞர்களும் மொழியியலாளர்களும் தமிழ் இலக்கியத்தினதும் தமிழ் மொழியினதும் வரலாற்றை ஐந்து காலப்பகுதிகளாக வகைப்படுத்தியுள்ளனர். இவை:

  • சங்க காலம் (கி.மு. 400 – கி.பி. 300)
  • சங்கம் மருவிய காலம் (கி.பி. 300 – கி.பி. 700)
  • பக்தி இலக்கிய காலம் (கி.பி. 700 – கி.பி. 1200)
  • மையக் காலம் (கி.பி. 1200 – கி.பி. 1800)
  • தற்காலம் (கி.பி. 1800 – இன்று வரை)
Adda247 Tamil
Adda247 Tamil Telegram

 

Tamil Language family

Tamil Language family: தமிழ், திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மொழியாகும். இந்த குடும்பத்தில், இருளா, கைக்காடி, பெட்டக் குறும்பா, சோலகா மற்றும் யெருகுலா என்னும் மொழிகள் அடங்கும். தமிழ் மொழிக் குடும்பம்:

  1. தமிழ்-மலையாளம் மொழிகள்: தமிழ் – மலையாளம் மொழிகளின் ஒரு துணைக் குடும்பமாகும்.
  2. தமிழ்-குடகு மொழிகள்: தமிழ் – குடகு மொழிக் குடும்பத்தின் துணைப் பிரிவாகவும்.
  3. தமிழ்-கன்னடம் மொழிகள்: தமிழ் – கன்னடம் மொழிக் குடும்பத்தின் துணைப் பிரிவாகவும் உள்ளன.
  4. திராவிட மொழிக் குடும்பம்: திராவிட மொழிக் குடும்பத்தின் துணைப் பிரிவுகளுள் ஒன்றான தென் திராவிட மொழிக் குடும்பத்தின் உட் பிரிவுகளுள் ஒன்றாகும்.

Also Read: Tamil Nadu Dance Forms | தமிழர்களின் நடனக்கலை

The birth of the word Tamil

The Birth of the word Tamil: கமில் சுவெலிபில் என்ற செக்கு மொழியியலாளர், தம்-இழ் என்பது “தன்னிலிருந்து மலர்ந்து வரும் ஒலி” என்ற பொருள் தரவல்லது என்கிறார். மாறாக, tamiz < tam-iz < *tav-iz < *tak-iz என்ற கிளவியாக்கம் நடந்திருக்கலாமென்றும், அதனால் இது “சரியான (தகுந்த) (பேச்சு) முறை” என்ற பொருளிலிலிருந்து தொடங்கியிருக்கலாம் என்றும் கூறியிருக்கிறார். 

Places where Tamil is spoken

Places Where Tamil is Spoken: தமிழ், தென் இந்திய மாநிலமான தமிழ் நாட்டின் பெரும்பான்மையினரதும் இலங்கையின் வடக்குக் கிழக்குப் பகுதிகளில் வாழும் மக்களதும் முதன் மொழியாகும். தமிழ், மேற்படி நாடுகளின் பிற பகுதிகளிலும் குறிப்பாக, இந்திய மாநிலங்களான கருநாடகம், கேரளம் மற்றும் மகாராட்டிரத்திலும், இலங்கையில் கொழும்பிலும் மத்திய மலை நாட்டுப் பகுதிகளிலும் முசுலிம்கள் வாழும் பகுதிகளிலும் வழங்கி வருகின்றது

தமிழ் மக்கள், 19 ஆம் நூற்றாண்டிலும் 20-ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் ஒப்பந்தக் கூலிகளாகவும் கீழ்நிலை அரசப் பணியாளர்களாகவும் இந்தியா, இலங்கை போன்ற நாடுகளிலிருந்து பிரித்தானியப் பேரரசின் பல பகுதிகளுக்கும் அனுப்பப்பட்டனர். அவ்வாறு, அவர்கள் சென்ற இடங்களில் தமிழ் பேசும் சமுதாயங்கள் உருவாகின.

Read more: How Many District in Tamil Nadu? – List of District in Tamilnadu

Recognition as an Official Language

Recognition as an official language: தமிழ் இந்திய மாநிலமான, தமிழ்நாட்டின் ஆட்சி மொழியாகும். அத்துடன் இந்திய அரசியலமைப்பின், எட்டாவது பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள 22 மொழிகளுள் ஒன்றாகவும் உள்ளது. இலங்கையில் மூன்று ஆட்சி மொழிகளுள் தமிழும் ஒன்று. இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்திலும், புதுச்சேரி ஒன்றியப் பகுதியிலும் தமிழ் அரச அலுவல் மொழியாக இருக்கிறது. சிங்கப்பூரிலும் நான்கு ஆட்சி மொழிகளுள் தமிழும் ஒன்று. தென்னாப்பிரிக்காவிலும் தமிழுக்கு அரசியலமைப்பு அங்கீகாரம் உள்ளது. மலேசியாவிலும் முதல் நான்கு ஆட்சி மொழிகளில் தமிழும் இடம்பெற்றுள்ளது. மலேசியாவில் தொடக்க இடைநிலைப்பள்ளிகளில் தமிழ் கற்பிக்கப்படுகிறது. நாடு முழுவதும் 523 தமிழ்த் தொடக்கப்பள்ளிகள் அரசுப் பள்ளிகளாக இயங்குகின்றன.

READ MORE: புகழ்பெற்ற நூல்களும் ஆசிரியர்களும்

Recognition as a Classical Language (Semmozhi)

Recognition as a classical language: இந்தியாவிலும் வெளி நாடுகளிலும் உள்ள பல தமிழ் அமைப்புகளினதும் அறிஞர்களினதும் நீண்ட கால முயற்சிகளைத் தொடர்ந்து இந்திய அரசினால், தமிழ் ஒரு செம்மொழியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அங்கீகாரம் பெற்றுள்ள முதல் இந்திய மொழி தமிழாகும். இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளினதும் கூட்டுக் கூட்டமொன்றின்போது, 2004 ஜூன் 6 ஆம் நாள் அப்போதைய இந்திய குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் இதனை அறிவித்தார். தமிழ் செம்மொழியாக அறிவித்த அரசாணையை அக்டோபர் 12 2004 இல் வெளியிட்டது இந்திய அரசு.

 

Writing System of Tamil Language

Writing system of Tamil language: தமிழ் எழுத்து முறைமை ஒலிப்பியல் அடிப்படையிலானது; குறுக்கம், அளபெடை, மற்றும் புணர்ச்சி நெறிகளுக்கு உட்பட்டே எழுத்துகள் ஒலிக்கப்படுகின்றன. தற்போதைய தமிழ், எழுத்துமுறை தமிழ் பிராமியிலிருந்து தோன்றியது ஆகும். தமிழ் பிராமி காலப்போக்கில் வட்டெழுத்தாக உருமாறியது. ஆறாம் நூற்றாண்டிலிருந்து பத்தாம் நூற்றாண்டு வரையிலான காலத்தில் “வட்டெழுத்து” முறை உருவானது. ஓலைச்சுவடிகளிலும் கல்லிலும் செதுக்குவதற்கேற்ப இருந்தது.

வட்டெழுத்தில் சமஸ்கிருத ஒலிகள் குறிக்கப்பட முடியாது என்பதால் சமஸ்கிருத ஒலிகளை எழுதும் பொருட்டு சில கிரந்த எழுத்துமுறை கிரந்த எழுத்துகளைப் பயன்படுத்தினர். இவ்வெழுத்துகளைப் பயன்படுத்துவதற்கு மாறாகத் தொல்காப்பியம் கூறியபடி அச்சொற்களைத் தமிழ்படுத்த வேண்டும் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது.

பின்னர், வீரமாமுனிவரின் அறிவுரைப்படி இரட்டைக் கொம்பு போன்ற மாற்றங்கள் செய்யப்பட்டன. 1977 ஆம் ஆண்டு எம். ஜி. இராமச்சந்திரன் ஆட்சியில் அச்சில் ஏற்றுவதை எளிமைப்படுத்தும் வகையில் ஈ. வெ. இராமசாமி நாயக்கரால் பரிந்துரைக்கப்பட்ட ஆகார மற்றும் ஐகார உயிர்மெய் எழுத்துகளில் சீர்திருத்தம் செய்யப்பட்டது.

Also Read:  Where is Tamil Nadu? – Location, Geography, Climate and Tourism of Tamilnadu

Tamil Phonology

Tamil Phonology: தமிழில் 12 உயிரெழுத்துகளும், 18 மெய்யெழுத்துகளும் உள்ளன. ஒவ்வொரு உயிரெழுத்தும் 18 மெய்யெழுத்துகளோடும் சேர்வதால் 216 உயிர்மெய்யெழுத்துகள் பிறக்கின்றன. இவற்றோடு ஆய்த எழுத்தும் சேர்த்து தமிழ் எழுத்துகள் மொத்தம் 247 (உயிரெழுத்துகள் – 12, மெய்யெழுத்துகள் – 18, உயிர்மெய்யெழுத்துகள் – 216, ஆய்த எழுத்து – 1) ஆகும்.

Vowels (உயிர் எழுத்துகள்)

Vowels: உயிரெழுத்துகளில் குறுகிய ஓசையுடைய எழுத்துகளான அ, இ, உ, எ, ஒ ஆகிய எழுத்துகள் குற்றெழுத்துகள் (குறில்) எனவும், நீண்ட ஓசையுடைய எழுத்துகளான ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஔ ஆகிய எழுத்துகள் நெட்டெழுத்துகள் (நெடில்) எனவும் வழங்கப்படும்.

Read More Famous Tourist places to visit in Tamilnadu

Consonants (மெய் எழுத்துகள்)

Consonants: மெய்யெழுத்துகளில் வன்மையான ஓசையுடைய எழுத்துகள் வல்லினம் என்றும், மென்மையான ஓசையுடைய எழுத்துகள் மெல்லினம் என்றும், இவை இரண்டிற்கும் இடைப்பட்ட ஓசையுடைய எழுத்துகள் இடையினம் என்றும் வழங்கப்படும்.

வல்லினம்: க் ச் ட் த் ப் ற்
மெல்லினம்: ங் ஞ் ண் ந் ம் ன்
இடையினம்: ய் ர் ல் வ் ழ் ள்

Special Letter (சிறப்பு எழுத்து)

Special letter: ஃ – மூன்று புள்ளிகளாக எழுத்தப்படும் ஆய்த எழுத்திற்கு அஃகேனம், தனிநிலை, புள்ளி, ஒற்று என்னும் வேறு பெயர்களும் உண்டு. இவ்வெழுத்தானது தனக்கு முன்னர் ஒரு குறில் எழுத்தையும் பின்னர் ஒரு வல்லின உயிர்மெய் எழுத்தையும் பெற்றே உச்சரிக்கப்படும். எடுத்துக்காட்டு.

அஃது – “அ” குறில் “து” – வல்லின உயிர்மெய்
எஃகு – “எ” குறில் “கு” – வல்லின உயிர்மெய்
அஃது உரிமையுடையது – அடுத்த சொல்லின் முதலெழுத்து “உ” உயிரெழுத்து.

*****************************************************

இது போன்ற தேர்விற்கான தகவல் மற்றும் பாடக்குறிப்புகளை பெற ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்

To Attempt the Quiz on APP with Timings & All India Rank,

Download the app now, Click here

Adda247 பயன்பாட்டில் இந்த வினாடி வினாவை முயற்சிக்க இங்கே கிளிக் செய்து அகில இந்திய தரவரிசையைப் பெறுங்கள்

Adda247 TamilNadu Home page Click here
Official Website=Adda247 Click here

Use Code: JN15 (15% off on all )

TNPSC GROUP 2 & 2A MAINS EXAM PAPER 1 & 2 | TAMIL | Online Live Classes By Adda247
TNPSC GROUP 2 & 2A MAINS EXAM PAPER 1 & 2 | TAMIL | Online Live Classes By Adda247

***************************************************************************

*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*

Check Live Classes in Tamil

*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*

Practice Now

Adda247App |  Adda247 Tamil Youtube

Tamil Engineering Classes by Adda247 Youtube link

Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group

Instagram = Adda247 Tamil

What is Language of Tamil Nadu?_5.1