Table of Contents
எரிமலை என்றால் என்ன?
‘வல்கனோ ’(Volcano) என்ற சொல் இலத்தீன் மொழியிலுள்ள ‘வல்கேன்’ (Vulcan) என்ற சொல்லில் இருந்து வந்ததாகும், இதன் பொருள் ரோமானிய நெருப்புக் கடவுள்.
புவியின் உட்பகுதியில் திட, திரவ, வாயு நிலையில் உள்ள பாறைக்குழம்பு துவாரம் வழியாக புவியின் மேற்பரப்பில் உமிழ்தலே எரிமலை வெடிப்பு எனப்படுகிறது. புவியின் மேற்பரப்பில் வெளியேற்றப்பட்ட பாறைக்குழம்பு ‘லாவா’ எனப்படும்.
எரிமலையின் வகைகள்
எரிமலையின் வகைகள் – செயல்படும் தன்மை
எரிமலைகள் அவை செயல்படும் தன்மையின் அடிப்படையில் மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்.
- சீறும் எரிமலை (Active Volcano),
- உறங்கும் எரிமலை (Dormant Volcano),
- தணிந்த / செயலிழந்த எரிமலை (Extinct Volcano)
சீறும் எரிமலை: நிரந்தரமாக தொடர்ந்து எரிமலைக் குழம்புகளையும், துகள்களையும், வாயுக்களையும் வெளியேற்றிக் கொண்டே இருக்கும் எரிமலைகள் செயல்படும் எரிமலைகள்.
எ.கா: செயின்ட் ஹெலன்ஸ் எரிமலை – அமெரிக்க ஐக்கிய நாடுகள்
உறங்கும் எரிமலை: நீண்ட காலமாக எரிமலைச் செய்கைகள் ஏதும் இல்லாமல் காணப்படும் எரிமலைகள் உறங்கும் எரிமலை எனப்படும். இவை திடீரென்று வெடிக்கும் தன்மை யுடைய து.
இது போன்ற எரிமலைகள் வெடிக்கும் பொழுது அதிகமான உயிர்ச்சேதமும், பொருட்சேதமும் ஏற்ப வாய்ப்புகள் உள்ளன . எ.கா: ஃபியூஜியாமா எரிமலை – ஜப்பான்.
செயலிழந்த எரிமலை: எந்த வித எரிமலைச் செயல்பாடுகளுமின்றி காணப்படும் எரிமலைகள் செயலிழந்த எரிமலைகள் ஆகும். எ.கா: கிளிமஞ்சாரோ எரிமலை – தான்சானியா.
எரிமலையின் வகைகள் – வடிவம் மற்றும் அதிலுள்ள கலவைகள்
எரிமலைகளின் வடிவம் மற்றும் அதிலுள்ள கலவைகளின் அடிப்படையில் மூன்று வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன .
- கூட்டு எரிமலை (Composite volcano)
- கும்மட்ட எரிமலை (Dome volcano)
- கேடய எரிமலை (Shield volcano)
கூட்டு எரிமலை: எரிமலைச் செய்கையின் போது வெளிவந்த சாம்பல் கடினப் பாறைக்குழம்புகள் மற்றும் நுரைகற்களால் (Pumice) ஆன படிவுகள் அடுக்கடுக்காக அமைந்து காணப்படும். இவை கூம்பு வடிவில் காணப்படுகின்றன . எ.கா: ஃபியூஜியாமா எரிமலை – ஜப்பான்.
கும்மட்ட எரிமலை: சிலிகா அதிகமுள்ள எரிமலைக் குழம்பு அதிகப் பிசுபிசுப்புடன் வெளியேறுவதால் நீண்ட தூரத்திற்கு பரவ முடியாமல் எரிமலை வாய்க்கு அருகிலேயே வட்ட வடிவத்தில் படிந்து சிறு குன்று போலக் காணப்படும். எ.கா: பாரிக்கியூட்டின் எரிமலை – மெக்சிகோ
கேடய எரிமலை: அதிக பிசுபிசுப்புடன் கூடிய பாறைக்குழம்பு அனைத்து திசைகளிலும் வழிந்தோடி கேடயம் போன்ற வடிவத்தில் மென்சரிவுடன் காணப்படும். எ.கா: மௌனலோவா எரிமலை – ஹவாய்த் தீவு.
எரிமலையின் விளைவுகள்
- எரிமலை வெடிப்பினால் புவி அதிர்ச்சி, திடீர் வெள்ளம் மற்றும் பாறைசரிதல் போன்றவை நிகழ்கின்றன .
- வெகுதூரம் பயணிக்கும் பாறைக்குழம்பானது தன் பாதையிலுள்ள அனைத்தையும் எரித்தும், புதைத்தும் சேதப்படுத்துகிறது.
- அதிக அளவில் வெளிப்படும் தூசு மற்றும் சாம்பல் நமக்கு எரிச்சலையும் மூச்சு விடுவதில் சிரமத்தையும் உண்டாக்குகிறது.
- எரிமலை வெடிப்பு அதன் சுற்றுப்புறப் பகுதிகளின் வானிலையில் மாற்றத்தை ஏற்படுத்துவதுடன் போக்குவரத்திற்கும் இடையூறை உண்டாக்குகின்றன.
***************************************************************************
இது போன்ற தேர்விற்கான தகவல் மற்றும் பாடக்குறிப்புகளை பெற ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்
To Attempt the Quiz on APP with Timings & All India Rank,
Adda247 TamilNadu Home page | Click here |
Official Website=Adda247 | Click here |
Adda247App | Adda247 Tamil Youtube
Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group
Instagram = Adda247 Tamil