Table of Contents
Who is the Current Chief Minister of Tamil Nadu?
Who is the Current Chief Minister of Tamil Nadu: The Current Chief Minister of Tamil Nadu is MK Stalin. Stalin has been the president of the Dravida Munnetra Kazhagam (DMK) party since 28 August 2018. Get all information about the latest Tamil Nadu Chief Minister name list 2022, the current Chief Minister of Tamil Nadu, ex-cm of Tamilnadu, power of Chief Minister in tamil.
Fill the Form and Get All The Latest Job Alerts
Who is the Current Chief Minister of Tamil Nadu? – MK Stalin
முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் (பிறப்பு: மார்ச் 1, 1953) (மு.க. ஸ்டாலின்) என்பவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டின் தற்போதைய முதலமைச்சரும் ஆவார். இவர் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு. கருணாநிதியின் மைந்தன் ஆவார்.
இவர் தமிழகத்தின் துணை முதலமைச்சராகவும் உள்ளாட்சித் துறை அமைச்சராகவும் இவர் 29 மே 2009 முதல் மே 15, 2011 வரை பொறுப்பு வகித்துள்ளார். 1996 முதல் 2002 வரை சென்னை மாநகராட்சியின் 37-ஆவது மேயராகவும், 2009 முதல் 2011 வரை தமிழகத்தின் முதல் துணை முதல்வராகவும் பொறுப்பில் இருந்தார். ஆகஸ்ட் 28, 2018 முதல் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராகப் பொறுப்பில் உள்ளார்.
ஸ்டாலின் மெட்ராஸ் கிறிஸ்டியன் கல்லூரி மேல்நிலைப்பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தார். விவேகானந்தா கல்லூரியில் பல்கலைக்கழகத்திற்கு முந்தைய படிப்பை முடித்தார், 1973-இல் சென்னைப் பல்கலைக்கழகத்தின் மாநிலக் கல்லூரியில் வரலாற்றுப் பட்டம் பெற்றார். ஆகஸ்ட் 1, 2009 அன்று அண்ணா பல்கலைக்கழகம் மு.க. ஸ்டாலினுக்கு கெளரவ முனைவர் பட்டம் வழங்கியது.
2021 சட்டமன்றத் தேர்தலில், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளராக மு.க. ஸ்டாலின் அறிவிக்கப்பட்டார். தேர்தல் முடிவுகளில் இக்கூட்டணி 159 இடங்களில் வென்று தனிப்பெரும்பான்மை பெற்றது. இதையடுத்து மே 7-ஆம் நாளன்று மு.க. ஸ்டாலின் தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றார்.
Read More What is the Capital of Tamil Nadu?
List of Chief Ministers of Tamil Nadu
தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல், அதன் முழுமையான நிலையில், தமிழ்நாட்டின் 1920 முதலான வரலாற்றில் இருந்த அரசுகளின் தலைமை பொறுப்பில் இருந்தவர்களின் பட்டியலாகும்.
Madras Province
இந்திய அரசு சட்டம், 1919 இயற்றப்பட்டபின், தமிழகத்தில் 1920-ல் முதன் முதலாக தேர்தல் நடத்தப்பட்டு சட்டப் பேரவை அமைக்கப்பட்டது. சட்டப் பேரவையின் ஆட்சிக் காலம் மூன்று ஆண்டுகளாக இருந்தது. 132 உறுப்பினர்களில், 34 உறுப்பினர்கள் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டனர்.
இந்திய அரசு சட்டம், 1935 இன் படி 215 உறுப்பினர்கள் அடங்கிய சட்டப் பேரவையும், 56 உறுப்பினர்களை கொண்ட மேலவையும் உருவாக்கப்பட்டது. ஜுலை 1937 ஆம் ஆண்டில், இந்த சட்டத்தின் கீழ், முதல் சட்டப் பேரவை பதவியேற்றது.
வ. எண் | பெயர் (பிறப்பு–இறப்பு) |
அரசியல் கட்சி | தொடக்க தேதி | முடிவு தேதி |
1 | ஏ. சுப்பராயலு (1855–1921) |
தென்னிந்திய நல உரிமைச் சங்கம் | 17.12.1920 | 11.07.1921 |
2 | பனகல் ராஜா (1866–1928) |
தென்னிந்திய நல உரிமைச் சங்கம் | 11.07.1921 | 11.09.1923 |
தென்னிந்திய நல உரிமைச் சங்கம் | 19.11.1923 | 03.12.1926 | ||
3 | பி. சுப்பராயன் (1889–1962) |
சுயேட்சை | 4.12.1926 | 27.10.1930 |
4 | பி. முனுசுவாமி நாயுடு (1885–1935) |
தென்னிந்திய நல உரிமைச் சங்கம் | 27.10.1930 | 04.11.1932 |
5 | ராமகிருஷ்ண ரங்காராவ் (1901–1978) |
தென்னிந்திய நல உரிமைச் சங்கம் | 5.11.1932 | 4.04.1936 |
6 | பி. டி. இராஜன் (1892–1974) |
தென்னிந்திய நல உரிமைச் சங்கம் | 4.04.1936 | 24.08.1936 |
(5) | ராமகிருஷ்ண ரங்காராவ் (1901–1978) |
தென்னிந்திய நல உரிமைச் சங்கம் | 24.08.1936 | 01.04.1937 |
7 | கூர்மா வெங்கட ரெட்டி நாயுடு (1875–1942) |
சுயேட்சை | 1.04.1937 | 14.07.1937 |
8 | சி. இராஜகோபாலாச்சாரி (1878–1972) |
இந்திய தேசிய காங்கிரசு | 14.07.1937 | 29.10.1939 |
– | ஆளுநர் ஆட்சி | 29 அக்டோபர் 1939 | 30.04.1946 | 30.04.1946 |
9 | த. பிரகாசம் (1872–1957) |
இந்திய தேசிய காங்கிரசு | 30.04.1946 | 23.03.1947 |
10 | ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் (1895–1970) |
இந்திய தேசிய காங்கிரசு | 23.03.1947 | 6.04.1949 |
11 | பூ. ச. குமாரசுவாமி ராஜா
(1898–1957) |
இந்திய தேசிய காங்கிரசு | 6.04.1949 | 10.04.1952 |
The Madras State
மெட்ராஸ் மாநிலம், தற்போதைய தமிழ்நாடு மாநிலத்திற்கு முந்தையது. இது இந்திய விடுதலைக்குப் பிறகு 1947-இல் உருவாக்கப்பட்டது. தற்போதைய தமிழ் நாடு மற்றும் தற்போதைய ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களின் பகுதிகளும் இம்மாநிலத்தின் பகுதிகளாக இருந்தன. பொது வாக்களிப்பு உரிமையின் அடிப்படையில், தேர்தல்கள் முதன் முறையாக 1952 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடத்தப்பட்டு, இங்கு மார்ச்சு 1, 1952-ல் சட்டப் பேரவை அமைக்கப்பட்டது.
வ. எண் | பெயர் (பிறப்பு–இறப்பு) |
அரசியல் கட்சி | தொடக்க தேதி | முடிவு தேதி |
1 | சி. இராஜகோபாலாச்சாரி (1878–1972) |
இந்திய தேசிய காங்கிரசு | 10.04.1952 | 13.04.1954 |
2 | காமராசர் (1903–1975) |
இந்திய தேசிய காங்கிரசு | 13.04.1954 | 31.03.1957 |
காமராசர் (1903–1975) |
இந்திய தேசிய காங்கிரசு | 13.04.1957 | 01.03.1962 | |
காமராசர் (1903–1975) |
இந்திய தேசிய காங்கிரசு | 15.03.1962 | 02.10.1963 | |
3 | எம். பக்தவத்சலம் (1897–1987) |
இந்திய தேசிய காங்கிரசு | 02.10.1963 | 28.02.1967 |
4 | சி. என். அண்ணாத்துரை (1909–1969) |
திராவிட முன்னேற்றக் கழகம் | 06.03.1967 | 13.01.1969 |
Read More TNUSRB SI Study Plan 2022, Download 65 days Study Plan
Tamil Nadu
சென்னை மாகாணம் – 14 ஜனவரி 1969 அன்று தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. தமிழக சட்டபேரவை 14 மே 1986-ல் சட்ட மேலவையை நீக்க தீர்மானம் நிறைவேற்றியது. பின்னர் பாராளுமன்றத்தில் “தமிழக சட்ட மேலவை (நீக்க) சட்டம், 1986” எனும் பெயரிலான சட்ட மசோதா 1 நவம்பர் 1986 முதல் அமல்படுத்தப்படுமாறு தமிழக சட்ட மேலவை நீக்கப்பட்டது. தற்பொழுது தமிழக சட்ட அமைப்பு ஓரங்க அமைப்பாக (unicameral) 234 தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களையும், ஒரு நியமன உறுப்பினரையும் கொண்ட சட்டபேரவையாக உள்ளது.
வ. எண் | பெயர் (பிறப்பு–இறப்பு) |
அரசியல் கட்சி | தொடக்க தேதி | முடிவு தேதி |
1 | சி. என். அண்ணாத்துரை (1909–1969) |
திராவிட முன்னேற்றக் கழகம் | 14.01.1969 | 03.02.1969 |
2 | இரா. நெடுஞ்செழியன் (1920–2000) |
திராவிட முன்னேற்றக் கழகம் | 04.02.1969 | 09.02.1969 |
3 | மு. கருணாநிதி (1924–2018) |
திராவிட முன்னேற்றக் கழகம் | 10.02.1969 | 05.01.1971 |
குடியரசுத் தலைவர் ஆட்சி | 06.01.1971 | 14.03.1971 | ||
4 | மு. கருணாநிதி (1924–2018) |
திராவிட முன்னேற்றக் கழகம் | 15.03.1971 | 31.01.1976 |
5 | குடியரசுத் தலைவர் ஆட்சி | 01.02.1976 | 29.06.1977 | |
6 | எம். ஜி. இராமச்சந்திரன் (1917–1987) |
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் | 30.06.1977 | 17.02.1980 |
7 | குடியரசுத் தலைவர் ஆட்சி | 18.02.1980 | 08.06.1980 | |
8 | எம். ஜி. இராமச்சந்திரன் (1917–1987) |
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் | 09.06.1980 | 15.11.1984 |
9 | இரா. நெடுஞ்செழியன் (1920–2000) |
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் | 16.11.1984 | 09.02.1985 |
9 | எம். ஜி. இராமச்சந்திரன் (1917–1987) |
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் | 10.02.1985 | 24.12.1987 |
10 | இரா. நெடுஞ்செழியன் (1920–2000) |
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் | 25.12.1987 | 06.01.1988 |
11 | ஜானகி இராமச்சந்திரன் (1923–1996) |
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் | 07.01.1988 | 30.01.1988 |
குடியரசுத் தலைவர் ஆட்சி | 31.01.1988 | 26.01.1989 | ||
12 | மு. கருணாநிதி (1924–2018) |
திராவிட முன்னேற்றக் கழகம் | 27.01.1989 | 30.01.1991 |
குடியரசுத் தலைவர் ஆட்சி | 31.01.1991 | 23.06.1991 | ||
13 | ஜெ. ஜெயலலிதா (1948–2016) |
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் | 24.06.1991 | 12.05.1996 |
14 | மு. கருணாநிதி (1924–2018) |
திராவிட முன்னேற்றக் கழகம் | 13.05.1996 | 13.05.2001 |
15 | ஜெ. ஜெயலலிதா (1948–2016) |
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் | 14.05.2001 | 21.09.2001 |
16 | ஓ. பன்னீர்செல்வம் (1951–) |
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் | 21.09.2001 | 01.03.2002 |
17 | ஜெ. ஜெயலலிதா (1948–2016) |
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் | 02.03.2002 | 12.05.2006 |
18 | மு. கருணாநிதி (1924–2018) |
திராவிட முன்னேற்றக் கழகம் | 13.05.2006 | 15.05.2011 |
19 | ஜெ. ஜெயலலிதா (1948–2016) |
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் | 16.05.2011 | 27.09.2014 |
20 | ஓ. பன்னீர்செல்வம் (1951–) |
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் | 29.09.2014 | 22.05.2015 |
21 | ஜெ. ஜெயலலிதா (1948–2016) |
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் | 23.05.2015 | 05.12.2016 |
22 | ஓ. பன்னீர்செல்வம் (1951–) |
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் | 06.12.2016 | 15.02.2017 |
23 | எடப்பாடி கே. பழனிச்சாமி (1954–) |
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் | 16.02.2017 | 06.05.2021 |
24 | மு. க. ஸ்டாலின் (1953–) |
திராவிட முன்னேற்றக் கழகம் | 07.05.2021 | தற்போது |
Qualifications to become a Chief Minister
- இந்தியக் குடிமகனான இருக்க வேண்டும்.
- 25 வயது நிறைவு பெற்றிருக்க வேண்டும்.
- சட்டமன்ற உறுப்பினராக இருக்க வேண்டும்.
சட்டமன்ற உறுப்பினராக இல்லாவிட்டால், முதலமைச்சராக பதவி ஏற்ற ஆறு மாதத்திற்குள் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுத்திருக்கப் பட்டிருக்க வேண்டும்.
Duties and Powers of a Chief Minister
மாநில நிருவாகத்தின் உண்மையான தலைவராக முதலமைச்சர் திகழ்கிறார். அவரின் பணிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. மாநிலத்தில் உண்மையான நிர்வாக அதிகாரங்களைச் செயல்படுத்துவது முதலமைச்சர் மற்றும் அவரது தலைமையிலான அமைச்சரவையாகும். ஆளுநரின் பெயரால் நிர்வாகத்தை முதலமைச்சர் மேற்கொள்கிறார். மைய அரசில் பிரதமரில் நிலை போன்றே மாநில நிருவாகத்தில் முதலமைச்சர் நிலை காணப்படுகிறது.
- அமைச்சரவையை அமைத்தல்.
- அமைச்சர்களுக்கு துறைகளை ஒதுக்கீடு செய்வது.
- கடமை தவறும் போது, அமைச்சர்களைப் பதவி விலகக் கோருதல்.
- ஆளுநர் அறிவிக்கையின் படி, துறைகளை அமைச்சர்களுக்கு மாற்றம் செய்தல்.
- அமைச்சரவையின் தலைவராக இருந்து, அமைச்சரவைக் கூட்டங்களுக்குத் தலைமை தாங்குவது.
- ஆளுநர் மற்றும் அமைச்சர்களுக்கு இடையே தொடர்பாளராக செயல்படுதல்.
- பதவிக் காலம் முடியும் முன்பே, சட்டப் பேரவையைக் கலைக்க ஆளுநருக்கு அறிவுறுத்துவது.
Read More TN Govt Employees Retirement, 175000+ New Vacancies
Appointment and Term of a Chief Minister
மாநில முதலமைச்சர், ஆளுநரால் நியமிக்கபப்டுகிறார். சட்டப் பேரவையில் எந்தக் கட்சி பெரும்பான்மையை பெற்றுள்ளதோ, அந்தக் கட்சியின் தலைவர் அல்லது அணியின் தலைவரை ஆளுநர், முதலமைச்சராக நியமிக்கிறார். எந்தவொரு கட்சியும் அல்லது அணியும் சட்டப் பேரவையில் அறுதிப் பெரும்பான்மையைப் பெறவில்லை எனில், சட்ட சபையில் தனிப்பெரும் கட்சியின் தலைவருக்கு அமைச்சரவை அமைக்குமாறு ஆளுநர் அழைப்பு விடுக்கலாம். ஆனால், ஆளுநர் குறிப்பிடும் கால அவகாசத்திற்குள், சட்டப் பேரவையில் தனக்குப் பெரும்பான்மை ஆதரவு இருப்பதை நிரூபிக்க வேண்டும்.
முதலமைச்சரின் பதவிக் காலம் நிர்ணயிக்கப்பட்ட தனது சட்டப் பேரவையில், பெரும்பான்மையினர் தனக்கு ஆதரவு கொடுக்கும் வரையில் ஒருவர் பதவியில் இருக்கலாம். முதலமைச்சரின் பதவி விலகல் ஒட்டுமொத்த அமைச்சரவையின் விலகலாகும். பொதுவாக முதலமைச்சருக்கும், சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் பதவிக் காலம் 5 ஆண்டுகளாகும். இந்திய அரசியல் அமைப்புச் சட்டப்படி, சட்டமன்றத்தின் ஆயுட்காலமான ஐந்து ஆண்டுகள் முடிந்தவுடன் முதலைமச்சரின் பதவிக் காலம் தானாகவே முடிவடைகிறது.
Salary and Pension of Chief Ministers
இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் சரத்து 164 இன் படி, முதலமைச்சர் மற்றும் பிற அமைச்சர்களுக்கான ஊதியம் மற்றும் ஓய்வூதியங்களை, அந்தந்த மாநில சட்டமன்றத்தின் பெரும்பான்மை உறுப்பினர்களால் தீர்மானிக்கப்படுகிறது.
***************************************************************************
இது போன்ற தேர்விற்கான தகவல் மற்றும் பாடக்குறிப்புகளை பெற ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்
To Attempt the Quiz on APP with Timings & All India Rank,
Download the app now, Click here
Adda247 பயன்பாட்டில் இந்த வினாடி வினாவை முயற்சிக்க இங்கே கிளிக் செய்து அகில இந்திய தரவரிசையைப் பெறுங்கள்
Adda247 TamilNadu Home page | Click here |
Official Website=Adda247 | Click here |
Use Code: ME15 (15% off on all + Double Validity on Megapacks, Test series, Live classes)
***************************************************************************
*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*
*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*
Adda247App | Adda247 Tamil Youtube
Tamil Engineering Classes by Adda247Youtube link
Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group
Instagram = Adda247 Tamil